Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயமுண்டு. முரண்டு பிடித்த பிள்ளைகள் இனி சொல் பேச்சு கேட்பர். தாயாரின் உடல் நலம் நிம்மதி தரும். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

ரிஷபம் : புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். பழைய கடன் பிரச்சினை தீரும். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவு தருவர்.

மிதுனம் : சமயோஜித புத்தியுடன் பல காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபார நெளிவு சுளிவுகளைக் கற்றுகொண்டு வெற்றி பெறுவீர். அலுவலகத்தில் விவாதம் வேண்டாம்.

கடகம் : ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சி தடைபடும். முன்கோபத்தைத் தவிர்த்து நிதானமாக பேசவும். சகோதரர்களுடன் மனவருத்தம் வரும். மின் சாதனங்களை பயன்படுத்தும்போது கவனம் தேவை. வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றம் உண்டு.

சிம்மம் : எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதியவர்களின் அறிமுகத்தால் ஆதாயமுண்டு. வீடு, வாகன பராமரிப்பு செலவு கூடும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர். வியாபாரரீதியாக பயணம் செல்வீர். அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.

கன்னி : உறவினர், நண்பர்கள் வீடு தேடி வந்து பேசுவர். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலங்களை விற்க முயற்சிப்பீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் போட்டி விலகும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.

துலாம் : பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வீடு வந்து சேரும். பூர்வீக சொத்து வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும். பிரபலங்களை சந்திப்பீர்.

விருச்சிகம் : குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உங்கள் ஆலோசனை ஒருமனதாக ஏற்கப்படும். வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் பங்குதாரர் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

தனுசு : சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபம், வீண் அலைச்சல் வரக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போகவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் தடுமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

மகரம் : விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பணியாட்கள் அன்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

கும்பம் : உற்சாகத்துடன் காணப்படுவீர். கணவன்-மனைவிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை, சந்தேகம் விலகும். அலுவலகத்தில் புதிய பதவி தேடி வரும். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெல்வீர்.

மீனம் : குழப்பம் நீங்கி குடும்பத்தில் அமைதி திரும்பும். தடைகள் விலகும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். தேங்கிய சரக்கு விற்றுத்தீரும்.

  • 106