இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்: சாணக்கியத்தனமாக பேசி காரியம் சாதிப்பீர். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் பணத்தை திருப்பித் தருவார்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.
ரிஷபம்: எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சி உண்டு. உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவர். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். வியாபாரத்தை விரிவுபடுத்த முற்படுவீர். பங்குதாரர்களின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவும். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. மனதில் இருந்த பயம் விலகும். பழுதான வாகனம் சீராகும். சிலர் புது வாகனம் வாங்குவீர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
கடகம்: சகோதர வகையில் உதவி கிட்டும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நவீன மின்னணு சாதனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
சிம்மம்: பேச்சில் கவனம் தேவை. பிள்ளைகளால் விரய செலவுகள் வரக்கூடும். வாகனம் செலவு வைக்கும். வியாபாரரீதியாக சிலரை சந்திப்பீர். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படுவது நன்மை தரும். அலுவலகத்தில் முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: பழைய நல்ல நினைவுகளில் மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் விற்பனையாகும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். சொத்து தொடர்பான வழக்கில் தீர்வு கிடைக்கும். உங்களின் வெளிப்படையான பேச்சை பங்குதாரர்கள் ரசிப்பார்கள். அலுவலகத்தில் மேலதிகாரியின் உதவியுடன் இலக்கை அடைவீர்.
விருச்சிகம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்.
தனுசு: புது முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள். தந்தைவழி உறவினர்களால் நிம்மதி உண்டாகும். எதிர்பார்த்த வகையில் பணம் வரும். கடன் பிரச்சினை தீரும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பீர்கள்.
மகரம்: விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து யோசிப்பீர். பூர்வீக மனை விற்பனையாகும். பிரியமானவர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் பணிகளை முடிப்பீர்கள். வியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்.
கும்பம்: சொன்ன சொல்லைக் காப்பாற்ற பரபரப்புடன் செயல்படுவீர். மனதுக்குப் பிடித்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். உடல் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். வியாபாரத்தில் லாபமுண்டு. அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.
மீனம்: முன்கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசவும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல் இருக்கும். அலுவலக ரீதியாக பிரமுகர்களை சந்திப்பீர். வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.