Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கடன் தொடர்பான விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். வழக்கு விஷயங்களில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

ரிஷபம்

கௌரவப் பொறுப்புகள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். கால்நடை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவுகள் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்து வந்த மந்த தன்மை குறையும். வாகன மாற்ற முயற்சிகள் கைகூடும். சாந்தம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். பேச்சில் நிதானமும் கவனமும் வேண்டும். கற்பனை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூர பயணம் சென்று வருவீர்கள். முயற்சி மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

கடகம்

உத்தியோக பணிகளில் பொறுமை வேண்டும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். எதிர்பார்த்த சில பயணங்களில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். குழந்தைகளால் வீண் விரயங்கள் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உறவினர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செல்லவும். அமைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

சிம்மம்

ஆன்மீக தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சுபகாரிய தொடர்பான பேச்சுக்கள் கைகூடுவதற்கான சூழ்நிலைகள் உருவாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். பொருளாதாரம் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். உடன் பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்து செல்லவும். கனிவு வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

கன்னி

மனதில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். நலம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

துலாம்

குடும்பத்தில் ஒற்றுமை மேம்படும். விடாப்பிடியாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். முக்கியமான சிலருடைய மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். மனதளவில் புது விதமான எண்ணங்கள் உருவாகும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். வாகன வசதிகள் மேம்படும். உயர்வு நிறைந்த நாள்.

மேற்கு

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு

விருச்சிகம்

பேச்சுத் திறமைகள் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பயணங்களில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்து செயல்படவும். அரசு துறைகளில் நெருக்கடிகள் குறையும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். கல்வி சார்ந்த பயணங்கள் கைகூடும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த செயல்பாடுகள் மூலம் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த பொறுப்புகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

மகரம்

வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். முன்யோசனை இன்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். கொள்கை பிடிப்பு குணம் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

மனதளவில் ஒருவிதமான சோர்வுகள் வந்து நீங்கும். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் இருக்கவும். கோபத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் தெளிவுகள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல் அதிகரிக்கும். அசைதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மீனம்

கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். வீடு மாற்றப்படும் சிந்தனைகள் மேம்படும். விவசாய பணிகளில் புதிய அனுபவங்கள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் ஈர்ப்புகள் அதிகரிக்கும். கல்வி சார்ந்த பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். இன்னல்கள் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 1

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

  • 24