Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : தடைபட்ட வேலையை உங்கள் வித்தியாசமான அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சில பிரச்சினைக்கு உங்கள் அவசர முடிவுதான் காரணம் என்பதை உணருவீர்கள். வெளி உணவுகள் வேண்டாம். உடல்நலத்தில் கவனம் தேவை.

ரிஷபம் : எதிர்பாராத இடத்தில் இருந்து தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் பணிச் சுமை குறையும்.

மிதுனம் : புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்களை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டு. தொழில், வியாபாரத்தில் வராக்கடன் வந்துசேரும்.

கடகம் : திடீர் பயணம், உறவினர்கள் வருகையால் விரையச் செலவு கள் வரக்கூடும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். ஆன்மிகம், தியானம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும். எதிலும் பொறுமை தேவை.

சிம்மம் : வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரியங்கள் ஏற்பாடாகும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிடைக்கும். பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.

கன்னி : குடும்பத்தினருடன் மனம்விட்டுப் பேசுவீர்கள். உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும். உத்தியோகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். வாகனப் பழுது நீங்கும். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள்.

துலாம் : பண வரவு, பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். சகோதரர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். பெற்றோர் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டு. பேச்சில் கவனம் தேவை.

விருச்சிகம் : சொந்த பந்தங்கள் வருகையால் வீட்டில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உடல்நிலை சீராகும். அரசு அதிகாரிகள் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் வீண் விவாதங்கள் விலகும். வராது என நினைத்த பழைய கடன்கள் வசூலாகும்.

தனுசு : குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். விலை உயர்ந்த பொருட்கள், நகைகள், முக்கிய கோப்புகளை கவனமாக கையாளுங்கள். பல வகையிலும் வேலைச் சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் கூடும்.

மகரம் : எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்ப்பீர்கள். குடும்பத்தில் மனஸ்தாபம் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்த உதவிகள் சற்று தாமதமாக கிடைக்கும். பொருட்கள் சேரும்.

கும்பம் : வெளி வட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் பயனடைவீர்கள். திருமணப் பேச்சுவார்த்தை வெற்றி யடையும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். அதிகாரிகள் பாராட்டுவார்கள்.

மீனம் : உங்களது நட்பு வட்டம் விரிவடையும். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு புதிதாக வாங்குவீர்கள். வீடு, வாகனம் வாங்க கடன் உதவி கள் கிடைக்கும். அரசு, வங்கி சம்பந்தமான காரியங்கள் விறுவிறுப்பாக நடந்து முடியும்.

  • 50