இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
பிறமொழி பேசும் மக்கள் ஆதரவாக இருப்பார்கள். சூழ்நிலைக்கேற்ப பேசி தன்னுடைய காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பலதரப்பட்ட விஷயங்களால் மனதில் அமைதியின்மை உண்டாகும். அக்கம் பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிக்கல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்
ரிஷபம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் அலைச்சல் அதிகரிக்கும். ஆதரவு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
மிதுனம்
சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. நினைவாற்றலில் இருந்த மந்ததன்மை விலகும். பயண விஷயங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
கடகம்
மனதில் புதுவிதமான இலக்குகளும் அதை சார்ந்த அலைச்சலும் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பரமான செயல்களில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான துறைகளில் மதிப்புகள் அதிகரிக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : செஞ்சிவப்பு
சிம்மம்
சுபகாரிய தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கன்னி
உறவினர்கள் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துகளால் அலைச்சல் அதிகரிக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவமும் உத்வேகமும் ஏற்படும். மனதில் புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் தோன்றும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
துலாம்
உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான எண்ணங்களும் சிந்தனைகளும் பிறக்கும். உத்தியோக தொடர்பான பணிகளில் விவேகம் அவசியமாகும். சுபகாரிய தொடர்பான எண்ணங்கள் கைகூடும். காப்பீடு பணிகளில் நிதானத்துடன் செயல்பட்டால் சாதகம் உண்டாகும். வியாபார நிமித்தமான புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
கருத்துக்களில் கவனம் வேண்டும். தம்பதிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். பணி பொறுப்புகளால் கோபம் தோன்றி மறையும். வரவுகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை குறைத்து கொள்ளவும். விலை உயர்ந்த பொருள்களை விவேகத்துடன் கையாளவும். செய்யும் முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். கவலை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி
தனுசு
கூடுதல் பொறுப்புகளால் மதிப்புகள் உயரும். மறதி பிரச்சனைகள் ஓரளவு குறையும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். எதிர்கால சிந்தனைகள் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உயர் அதிகாரிகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். எதிர்காலம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். முயற்சி ஈடேறும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கும்பம்
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உருவாகும். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மீனம்
பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். அசையா சொத்துக்களில் ஈர்ப்பு உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். பழைய நினைவுகளால் ஒருவிதமான மந்த தன்மை ஏற்படும். வர்த்தக பணிகளில் சில நுட்பங்களை அறிவீர்கள். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பயணம் மூலம் புத்துணர்ச்சி உண்டாகும். நம்பிக்கை பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இள மஞ்சள்
