Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தாய் பற்றிய எண்ணங்கள் மனதில் அதிகரிக்கும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். வாசனை திரவியங்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். பரம்பரை சொத்துக்களால் சில விரயங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்கள் மூலம் மேன்மையான சூழல்கள் உண்டாகும். அனுகூலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

ரிஷபம்

சக பணியாளர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வழக்கில் சாதகமான சூழல் ஏற்படும். நீண்ட நாள் விருப்பம் நிறைவேறும். எழுத்து துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

மிதுனம்

தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். தடைகளால் இருந்த இடையூறுகள் விலகும். நம்பிக்கையானவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் விஷயங்களில் தெளிவுகள் பிறக்கும். வியாபாரங்கள் எதிர்பார்த்தபடி நடைபெறும். பாராட்டு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கடகம்

குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். தோற்ற பொழிவில் மாற்றங்கள் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனை பெறவும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். அலுவலக பணிகளில் கவனம் வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

சிம்மம்

நினைத்து சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

 

கன்னி

நினைத்த சில காரியத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில யோகங்கள் மூலம் லாபங்கள் உண்டாகும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். மனதிற்கு பிடித்த புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிற்கால வாழ்க்கை பற்றிய எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு

 

துலாம்

சமூகப் பணிகளில் ஆதரவான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெளியூரில் இருந்து இன்பமான செய்திகள் கிடைக்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் அமையும். தடைப்பட்ட சில வேலைகள் நிறைவு பெறும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்

 

விருச்சிகம்

விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டத்தில் செல்வாக்கு உயரும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் ஏற்படும். வியாபார ஒப்பந்தங்கள் சாதகமாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் அமையும். அன்பு மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

 

தனுசு

உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

 

மகரம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். தனம் கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கும்பம்

உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பழைய சிக்கல்கள் குறையும். வீடு பராமரிப்பு செலவுகள் உண்டாகும். விருப்பமான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். தாமதம் மறையும் நாள்.

 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : காவி

 

மீனம்

உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் வேண்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபார விருத்திக்கான அலைச்சல்கள் மேம்படும். கலைப்பணிகளில் தனித்திறமை வெளிப்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் மாற்றம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

  • 109