Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம் : அரசுக் காரியங்களில் இருந்து வந்த தடைகள் விலகும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் தேங்கிய சரக்கு விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை ஏற்று செயல்படவும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு.

ரிஷபம் : பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர். புதிய பங்குதாரர் கிடைப்பார்கள்.

மிதுனம் : திட்டமிட்ட வேலையை முடிக்க, வேகத்தை கூட்டுவீர்கள். முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை விரைந்து முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கடகம் : குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களை அனுசரித்து நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்கள் வருவர். உத்தியோகம் சிறக்கும்.

சிம்மம் : ஒதுங்கியிருந்த உறவினர்கள் ஓடி வந்து பேசுவார்கள். கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும்.வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்க பழகிக் கொள்வது நல்லது.

கன்னி : குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவீர்கள். பிள்ளைகளால் செலவுகள் வரும். உடன்பிறந்தோரின் ஆதரவு உண்டு. வாகனத்தில் கவனம் தேவை. அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டிவரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கி வசூலாகும்.

துலாம் : குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். மகனின் படிப்பு தொடர்பாக செலவு, டென்ஷன் கூடும். பயணங்கள் அலைச்சல் தரும். பூர்வீக வீட்டை சீரமைத்து கட்ட முயற்சிப்பீர். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர். வியாபாரத்தில் போட்டி இருக்கும்.

விருச்சிகம் : பணவரவு திருப்தி தரும். அவசரத்துக்கு கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பழைய பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

தனுசு : எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு வெற்றி பெறுவீர். அலுவல கத்தில் இழுபறியாக இருந்த பணிகளை முடிப்பீர்கள்.

மகரம் : வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் : சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவார்கள். பூர்வீக வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்டவற்றை விற்க முயற்சிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவி கிட்டும். வியாபாரத்தில் புது சரக்குகளை கொள்முதல் செய்வீர்.

மீனம் : சந்திராஷ்டமம் தொடர்வதால் எதிலும் அவசரம் வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வீண் அலைச்சல், காரியத் தடை வரலாம். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர். வியாபார பிரச்சினைகளை சமாளிப்பீர்கள்.

  • 73