Feed Item
·
Added a post

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்: பூர்​வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்​டுவீர். குழப்​பம் நீங்கி குடும்​பத்​தில் சந்​தோஷம் நிலைக்​கும். பிள்​ளை களால் பெருமை அடைவீர்​கள். வியாபாரத்​தில் வேற்​றுமொழி, மதத்​தின​ரால் ஆதாயம் உண்டு. அலு​வல​கத்​தில் பணிகளை விரைந்து முடிப்​பீர்.

ரிஷபம்: குடும்​பத்​தினரிடம் மனம் விட்​டுப் பேசுவீர். பிரிய​மானவர்​களின் சந்​திப்​பால் மகிழ்ச்​சி​யடைவீர்​கள். தலை​வலி, தூக்​கமின்மை நீங்​கும். வியாபாரத்​தில் பாக்​கி​கள் வசூலாகும். அலு​வல​கத்​தில்தானுண்டு தன் வேலை​யுண்டு என்று இருக்க பழகி கொள்​வது நல்​லது.

மிதுனம்: திட்​ட​மிட்ட பணிகளை போராடி முடிப்​பீர். குடும்​பத்​தில் விட்​டுக் கொடுத்​துப் போகவும். பூர்​வீக வீடு, மனை விற்​பனையாகும். வியாபாரத்​தில் பழைய பாக்​கி​கள் நீண்ட இழுபறிக்​குப் பின் வசூலாகும். அலு​வலக ரீதி​யாக வெளியூர் பயணம் மேற்​கொள்​வீர்.

கடகம்: குடும்​பத்​தில் மகிழ்ச்சி தங்​கும். உடல் நிலை சீராக அமையும். யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி மொழி தரு​வதை தவிர்க்​கவும். வியாபாரத்​தில் லாபம் கூடும். பங்​குதா​ரருடன் விவாதம் வேண்​டாம். அலு​வல​க ரீதி​யான பயணம் திருப்தி தரும்.

சிம்​மம்: பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்​பீர். புது வேலை கிடைக்​கும். தந்​தையின் உடல்​நலம் சீராகும். பழைய நண்​பர்​கள் தேடி வரு​வர். கூட்​டுத் தொழி​லில் பங்​குதா​ரர்​கள் ஒத்​துழைப்பு தரு​வார்​கள். அலு​வல​கத்​தில் தேடிய முக்​கிய ஆவணம் தென்​படும்.

கன்னி: பிரபலங்​கள் சிலரை சந்​திப்​ப​தால் உங்​கள் வாழ்​வில் சில மாற்​றங்​கள் வரக்​கூடும். ஆன்​மிகத்​தில் ஈடு​பாடு அதி​கரிக்​கும்.வியாபாரத்​தில் வேலை​யாட்​கள் உதவி​கர​மாக நடப்​பர். பங்​குதா​ரர் அறி​வுரை தரு​வார். அலு​வல​கத்​தில் யாரை​யும் பகைத்​துக் கொள்​ளாதீர்.

துலாம்: சாதிக்க வேண்டு​மென்ற எண்​ணம் அதி​கரிக்​கும். சமூகத்​தில் பெரிய அந்​தஸ்​தில் இருப்​பவர்​களின் நட்பு கிட்​டும். மூத்த சகோ​தரர்​கள் ஆதர​வாக இருப்​பார்​கள். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்​கொள்​வீர். அலு​வல​கத்​தில் அமைதி காக்​கவும்.

விருச்​சிகம்: பிற்​பகல் 3.08 மணி வரை சந்​திராஷ்டமம் இருப்​ப​தால் மனக்​குழப்​பம் வரும். எந்த வேலை​யையும் முடிக்க முடி​யாமல் திணறு​வீர். குடும்​பத்​தில் செல​வு​கள் வந்​துபோகும். வியாபாரத்​தில் எச்​சரிக்கை அவ​சி​யம். அலு​வல​கத்​தில் விவாதங்​களை தவிர்க்​கவும்.

தனுசு: குடும்​பத்​தில் மகிழ்ச்சி பொங்​கும். பணவரவு உண்டு. முன்​கோபம் அதி​கரிக்​கும். பேச்​சில் கவனம் தேவை. யாருக்​கும் எந்த வகை​யிலும் உறுதி​மொழி அளிக்​காதீர். அலு​வல​கத்​தில் மதிப்பு, மரியாதை உயரும். வியாபாரத்​தில் போட்​டிகள் நீங்​கும். லாபம் காண்​பீர்.

மகரம்: குடும்​பத்​தா​ரின் எண்​ணங்​களை கேட்​டறிந்து பூர்த்தி செய்​வீர். புது வேலை கிடைக்​கும். பிள்​ளைகளின் பாசமழையில் நனைவீர்​கள். அலு​வல​கத்​தில் பணிகளை முடிப்​பீர்​கள். வியாபாரத்​தில் புதிய யுக்​தி​களை கையாண்டு வாடிக்​கை​யாளர்​களை கவரு​வீர்.

கும்​பம்: எதிர்ப்​பு​களை​யும் தாண்டி முன்​னேறு​வீர்​கள். வீடு, வாக​னப் பராமரிப்​புச் செல​வு​கள் அதி​கரிக்​கும். வெளிவட்​டாரத் தொடர்​பு​கள் கூடும். நவீன சாதனங்​கள் வாங்​கு​வீர். அலு​வல​கத்​தில் புதிய பத​விக்கு பரிந்​துரை செய்​யப்​படுவீர். வியாபாரத்​தில் வெற்றி காண்​பீர்​கள்.

மீனம்: வரவேண்​டிய பணம் கைக்கு வரும். கணவன் - மனைவிக்​குள் இருந்த கருத்​து​வேறு​பாடு நீங்​கும். புதிய வீடு வாங்கதிட்​ட​மிடுவீர். வியாபாரத்​தில் சரக்​கு​கள் விற்​றுத் தீரும். அலு​வலக மேலதி​காரி​யிடம் அனுசரித்​துப் போகவும். பேச்சில் கவனம் அவசியம்.

  • 99