டொராண்டோ நகரின் நடுப்பகுதியில் உள்ள காசா லோமா பகுதியில் வீடு புகுந்து நடந்த தாக்குதலில் 39 வயது இசைக்கலைஞர் மைக்கேல் எக்கர்ட் சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகாலை 2.38 மணியளவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரைச் சுட்டுவிட்டு தப்பியுள்ளார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேகத்துக்குரிய வாகனத்தின் படத்தை வெளியிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.