Feed Item
·
Added a news

கனடாவின் சில பகுதிகளில் பல்கலைக்கழக மாணவர்கள் உணவிற்கான செலவுகளை மேற்கொள்ள முடியாது திண்டாடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரின்ஸ் எட்வர்ட் தீவு பல்கலைக்கழகம் (UPEI) மாணவர்கள் வாழ்வாதாரச் செலவுகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைக்கழக உணவு வங்கியை பயன்படுத்தும் மாணவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளில் 60% வரை அதிகரித்துள்ளது.

2022ம் ஆண்டில் உணவு வங்கிகளின் உதவியை நாடிய மாணவர் எண்ணிக்கை 2,900 எனவும் 2024ம் ஆண்டில் இந்த எண்ணிக்க 4,600 ஆக உயர்வடைந்துள்ளது எனுவும் தெரிவிக்கப்படுகின்றது.

விலைவாசி உயர்வு, வாடகை, கட்டணங்கள், புத்தகங்கள், மின்சாரம், தொலைபேசி பில்கள் ஆகியவற்றின் செலவுகளை சமாளிக்க பலர் இலவச உணவு உதவியை நாடுகின்றனர்.

உணவு மட்டும் அல்ல. வாடகை, கட்டணம், புத்தகம், மின்சாரம் என பல செலவுகள் உள்ளன. பல மாணவர்கள் பிற செலவுகளுக்காக உணவை விட்டு விடுகின்றனர் என்று மாணவர்கள் தெரிவிக்கின்றனர். கனடா முழுவதும் 20 வீதமான மாணவர்கள் உணவு பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

  • 94