கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.
இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
இதற்கு முன்னர் அனிருத்; கீர்த்தி சுரேஷ், ஜோனிடா காந்தி, ஆண்ட்ரியா ஆகியோரை காதலித்து வந்ததாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.