Feed Item
·
Added a post

இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் பல மூலிகைகள் புகழ்பெற்று விளங்குகிறது. இன்றளவும் மக்கள் மூலிகை மருத்துவத்தை நம்பத்தான் செய்கிறார்கள்.

நம் நலம் காக்கும் சில மூலிகைகள் இதோ…

துளசி:

  • துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து அருந்துவது தொற்றுநோய்களைத் தடுக்க உதவும், ஏனெனில் துளசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • ஒரு லிட்டர் நீரில் சுமார் இருபது துளசி இலைகளைப் போட்டு, கொதிக்க வைத்து, காய்ச்சி வடிகட்டிப் பருகுவது சிறந்த தீர்வாகும்.

முருங்கை இலை

  • முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம் ,சுண்ணாம்பு சத்து போன்றவை இருக்கின்றன.
  • இந்த இலைகளை நெய்யில் பொரித்து சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும்.
  • பல் கெட்டிப்படும். தோல் வியாதிகள் தீரும்.

தண்ணீர் விட்டான் கிழங்கு :

  • இதன் வேரில் ஏறக்குறைய 100 கிழங்குகள் இருக்கும்
  • இக்கிழங்கை பாலில் வேக வைத்து அந்தப் பாலை பருகினால் உஷ்ணத்தால் உண்டான சுவையின்மை, உணவு செரியாமையினால் ஏற்படும் வயிற்றுப்போக்கு இவை அனைத்தும் சரியாகும்.
  • இக்கிழங்குச்சாற்றுடன் தேன் சேர்த்து சாப்பிட வயிற்றில் உண்டாகும் சூலை நோய் சரியாகும்.

திருநீற்றுப்பச்சிலை:

இந்த இலையின் சாற்றில் வசம்பை இழைத்து அந்த விழுதை முகத்தில் ஏற்படும் பருக்களுக்கு போட பருக்கள் குணமாகும்.

  • 116