பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் புயல் அலையும் பெரும் அலையும் சேர்ந்து வெள்ள அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வான்கூவர் தீவு, மத்திய கடற்கரை, ஹைடா குவாய் பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ வான்கூவர், சன்ஷைன் கடற்கரை, வான்கூவர் தீவின் மேற்குப் பகுதிகளுக்குக் கடற்கரை வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதி வீடுகளில் சிலவற்றுக்கு வெளியேறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.