Feed Item
·
Added article

பிரபல ஹாலிவுட் நடிகை டயான் லாட் (வயது 89).1950-களில் நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய டயான் லாட், ஹாலிவுட் திரைப்படங்களில் பல வலிமையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட்டில் வெளியான, `சைனா டவுன்', `கோஸ் ஆப் மிஸிஸிப்பி', `பிரைமரி கலர்ஸ்', `28 டேஸ்', உள்பட பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

‘ஆலிஸ் டஸ் நாட்ன்லிவ் ஹியர் எனிமோர்’, ‘வைல்ட் அட் ஹார்ட்’, ‘ராம்ப்ளிங் ரோஸ்’ ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக மூன்று முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இருந்தாலும் அவருக்கு கிடைக்கவில்லை. இவர் மகள் லாரா டெர்னும் பிரபல நடிகை ஆவார். `ஒயிட் லைட்னிங்’, ‘வைல்ட் அட் ஹார்ட்', ‘சிட்டிசன் ரூத்’, ‘டாடி அண்ட் தெம்’ போன்ற சில படங்களில் இருவரும் தாய்- மகளாக நடித்தனர்.

கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் வசித்து வந்த டயான் லாட் திங்கட்கிழமை காலமானார். இதை அவர் மகள் லாரா டெர்ன் உறுதிப்படுத்தி, அஞ்சலியையும் வெளியிட்டுள்ளார். அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  • 144