Feed Item
·
Added a news

மனநல நோய் மட்டுமே உள்ளவர்களுக்கு மருத்துவ உதவியுடன் கருணை மரணம் (MAID) வழங்கும் சட்ட விரிவாக்கத்தை கனடா காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு மருத்துவ சமூகத்தில் யார் தகுதி பெறுவார்கள் என்பதில் ஒருமித்த கருத்து இல்லை என அரசு காரணம் கூறியுள்ளது

நீதித்துறை அமைச்சர் சீன் ஃபிரேசர், “இது எளிதான முடிவு அல்ல, ஆனால் இந்த நேரத்தில் இதுவே சரியான அணுகுமுறை” என்றார். மார்ச் 2027 முதல் அமல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த இந்த விரிவாக்கம் இனி நடைபெறாது. அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்படும்

கனடாவில் 2016-ல் கருணை மரணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது, 2021-ல் குணப்படுத்த முடியாத நோயாளிகளுக்கு விரிவாக்கப்பட்டது. ஆனால் மனநல நோய்களின் “மீள முடியாத” தன்மையை தீர்மானிப்பது கடினம் என மருத்துவர்கள் எச்சரித்ததால் நாடாளுமன்ற குழுவும் விரிவாக்கத்தை எதிர்த்தது.

  • 79