விஜய் சேதுபதி நியூயார்க்கில் நடந்த 54ஆவது பன்னாட்டு எம்மி விருது விழாவில் விருது வழங்கும் நபராகக் கலந்து கொண்டார். தென்னிந்தியாவில் இருந்து இந்தப் பெருமையைப் பெற்ற முதல் நடிகர் இவரே.
கருப்பு உடையில் அவர் மேடையில் தோன்றிய படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இது தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பெருமை என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.