சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர்-மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.
- ஔவையார்.
சாகும் வரையில் ஒருவர் கெடுதியையே செய்தாலும், தன்னால் முடிந்த வரையில் அவரைக் காப்பாற்றுபவரே அறிவுடையார் ஆவார்.
மரம் தான் சாயும் வரையில் தன்னை வெட்டுபவனுக்குக் குளிர்ந்த நிழலைத் தந்து அவன் குற்றத்தை மறைப்பதைப் பாருங்கள். அப்படித்தான் இருக்க வேண்டும்.
