Feed Item
·
Added article

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வரும் நயன்தாரா நேற்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள் என பலர் நயன்தாராவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்த நிலையில், விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு சூப்பர் கிப்டை பரிசாக அளித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கேரளாவில் தொகுப்பாளனியாக தனது பயணத்தை தொடங்கிய நயன்தாரா, மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்த பிறகு தமிழில் அய்யா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இவரை லேடிஸ் சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இவரின் 41வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்ட நிலையில் பலரும் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

நயன்தாராவின் கணவரும் இயக்குனருமான விக்னேஷ் சிவன், தனது காதல் மனைவிக்கு Black Badge spectre உயர்தர சொகுசு காரை பரிசாக அளித்து இருக்கிறார். அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் உயிர், நீ பிறந்தா தினம்.... வரம், உன்னை உண்மையாகவே, வெறித்தனமாக, ஆழமாக நேசிக்கிறேன். என் அழகியே உன்னை நேசிக்கிறேன். உன் உயிர், உலக், பெரிய உயிர், உன் அன்பான மக்களிடமிருந்து அதிக உள்ள அன்பு நிறைந்த வாழ்க்கையுடனும் நன்றி கூறுகிறேன். பிரபஞ்சம் மற்றும் எல்லாம் வல்ல கடவுள் எப்போதும் சிறந்த தருணங்களை நமக்கு ஆசீர்வதிக்கிறார் ஏராளமான அன்பு, அசைக்க முடியாத நேர்மறை மற்றும் தூய நல்லெண்ணத்தால் மட்டுமே நிரம்பி இருக்கிறது என பதிவிட்டுள்ளார். காதல் மனைவி நயன்தாராவிற்காக அவர் பரிசாக அளித்து இருக்கும் காரின் விலை, Rs. 9.97 கோடி ஆகும். இந்த காரின் விலையை கேள்விப்பட்டு ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

  • 66