நம் முன்னோர்கள் மற்றும் சித்த வைத்தியத்தில் கூறியுள்ளபடி தினம் இருமுறை வாரம் இருமுறை மாதம் இருமுறை வருடம் இருமுறை என்று செய்தால் உடலில் உள்ள உறுப்புக்கள் தானாகவே தூய்மையாகி விடும்
தினம் இருமுறை என்றால் காலை மாலை பல் துலக்கி மலம்கழித்தல். இம்மாதிரி பல்லை ஒழுங்காக துலக்கினால் கண்களும் இதயமும் நன்றாக இருக்கும். கண்களுக்குச் செல்லும் நரம்புகள் பற்கள்தாடை வழியாகச்செல்கின்றன. எனவே கண்கள் பாதுகாக்கப்படும். வாயில் உள்ள பாக்டீரியாக்களை அப்புறப்படுத்தாமல் இருந்தால் அப்பாக்டீரியாக்கள் ரத்தத்தில் கலந்து இதயத்துக்குச் செல்லும். எனவே இதயம் பாதிக்கப்படும்.
இருமுறை மலம் கழித்தால் வயிறு சுத்தமாகி விடும் வாயு சேராது. உணவில உள்ள சத்துக்கள் முழுமையாக நமக்குக் கிடைக்கும்.
வாரம் இருமுறை என்றால் புதன்கிழமையும், சனிக்கிழமையும் நல்ல எண்ணெய் குளியல் தேவை. இதனால் உடல் உஷ்ணம் குறைந்து உள்ளுறுப்புக்கள் நன்கு வேலை செய்யும்.
மாதம் இருமுறை என்றால் உடல்உறவு. மனைவியுடன் கொள்ளுதல். அடிக்கடி உறவு கொள்ளாமல் மாதம் இருமுறை செய்தால் நல்ல குழந்தைகள் வலுவாக பிறப்பார்கள். அடிக்கடி உறவு கொண்டால் விந்து கெட்டவன் நொந்து கெட்டாண் என சொல்வர் உள்நரம்புகள் வலுவாக இருக்கும்.
வருடம் இருமுறை என்றால் பேதி எடுத்தல் மற்றும் வாமனம் செயதல். 6 மாதஙகளுக்கு ஒருமுறை விளக்கெண்ணெய் போன்ற மலமிளக்கி மருந்துகளைச் சாப்பிட்டு வந்தால் வயிறு சுத்தமாகி உற்சாகம் கிடைக்கும். அடுத்து வாமனம் அதாவது வாய்வழியே சில மருந்துகளைச் சாப்பிட்டு வாந்தி எடுத்தல். இதனால் நமது வாய் முதல் மலக்குடல் முடிவு வரை சுத்தமாகி உடல் முழுவதும் எல்லா உறுப்புக்களும் நன்றாக வேலை செய்யும் வியாதியே வராது 100 வயது நலமாக வாழலாம்