அருள்நிதி நடித்துள்ள அடுத்த படத்துக்கு ‘மை டியர் சிஸ்டர்’ எனப் பெயரிட்டுள்ளனர். ’என்னங்க சார் உங்க சட்டம்’ படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள இப்படத்தில் மம்தா மோகன்தாஸ் அருள்நிதிக்கு அக்காவாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரும் நடித்துள்ள ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை படப்பிடிப்புக்கு இடையே காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘மை டியர் சிஸ்டர்’ படத்தினை தயாரித்துள்ளனர். இதில் அருள்நிதிக்கு நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வெற்றிவேல், இசையமைப்பாளராக நிவாஸ் கே.பிரசன்னா, எடிட்டராக வெங்கட் ராஜன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். முழுக்க காமெடி எமோஷன் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
