சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியிருக்கிறார். இதனை ஜி.வி.பிரகாஷ் அறிவித்துள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் படத்தை தயாரித்து வருகிறார்.
60களில் மெட்ராஸ் மகாணத்தில் நடைபெற்ற மொழிப்போர் போராட்டம் குறித்த கதைக்களத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடல் ஒன்றை பாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “பராசக்தி படத்தில் யுவன் சங்கர் ராஜா பாடலை பாடியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் 100 இன்னும் ஸ்பெஷலாகிவிட்டது” என தெரிவித்துள்ளார்.
