Feed Item
·
Added article

புதுச்சேரி திரைப்பட விழா வரும் பிப்ரவரி 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நான்கு வெவ்வேறு இடங்களில் நடைபெற உள்ளது. அதில், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கடல்கன்னி படங்களுக்கு சிறந்த திரைப்பட விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சிறந்த திரைப்படமாகத் தேர்வு செய்யப்படும் ஒரு திரைப்படத்தின் இயக்குநருக்கு ‘நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் விருது’ வழங்கி வருகிறது.

புதுச்சேரி ஒரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு ஏற்ற சிறந்த இடமாக இருப்பதால், இந்த நிகழ்வு, இந்த ஆண்டிலிருந்து சர்வதேச திரைப்பட விழாவாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • 39