Feed Item

" சாரி" சொல்வதற்குப் பதிலாக நன்றி சொல்வோமே.....

டப்ளினில் ஹோட்டல் ஒன்றில் சற்று தாமதமாக உணவு பரிமாறிய பெண்மணி " "காத்திருந்ததற்கு நன்றி " என்று சொன்னார். பொதுவாக தாமதப்படுத்தி விட்டால் " சாரி.. தாமதத்துக்கு மன்னிக்கவும் " என்றுதான் பெரும்பாலும் சொல்வார்கள்.

அப்போது தான் எனக்குப் புலப்பட்டது நாம் எல்லோருமே " சாரி" சொல்வதற்கு பதிலாக " நன்றி" சொல்வது சிறப்பானது என்று.

" மன்னிக்கவும்" சொல்வது நல்ல உணர்வு தான். ஆனால் மற்றவரை மகிழ்விப்பதற்காக நம்மை ஒரு குற்ற உணர்ச்சியில் ஆழ்த்திக் கொள்கிறோம்.

ஆனால் அதையே " காத்திருந்ததற்கு நன்றி" என்று சொல்லும் போது எதிராளியும் மகிழ்கிறார். நாமும் குற்ற உணர்ச்சியற்ற நட்புணர்வில் மகிழ்கிறோம்.

நாம் எழுதிக் கொண்டு போன கடிதத்தில் ஒரு பிழையை எதிராளி கண்டுபிடித்தால் எப்போதும் நாம் "சாரி" சொல்கிறோம். அதற்குப் பதிலாக நாம் " பிழையைத் திருத்தியதற்கு நன்றி " சொல்லலாமே.

ஒரு உரையாடலில் நீங்களே அதிக நேரம் பேசிக் கொண்டே இருந்து விட்டால் " சாரி நானே பேசிக் கொண்டிருக்கிறேன் " என்று சொல்வதற்குப் பதிலாக " நான் நீண்ட நேரம் பேசியதைக் கேட்டதற்கு நன்றி " என்று சொன்னால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

  • 142