Android Mobile app for TamilPoonga
Please Download TamilPoonga Mobile app Version 1.5.0
It's very easy to use and faster then desktop browser.
Very easy to upload photos and videos from your phone.
You can make live phone chat or group chat.
You can do live video chat with one on one or with group video chat.
Empty
ஜானாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் கவன ஈர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தில் இன்று ஊடக சந்திப்பை மேற்கொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த வடமாகாண பட்டதாரிகள் சங்க ஊடக பேச்சாளர் கி.டனிசன் தெரிவித்துள்ளார்இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் - வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு சரியான வகையில் இதுவரை எந்தவொரு தரப்பினரும் தீர்வை தரவில்லை.வடக்கின் ஆளுநரிடமும் பல தடவைகள் கோரிக்கை முன்வைத்திருந்தும் அவரும் எம்மை கண்டு கொள்ளாதவராகவே இருந்துவருகின்றார்.இந்நிலையில் வேலையற்ற பட்டதாரிகள் ஆகிய நாம் நாளை 39.01.2025 ஆம் திகதிமுதல் 31 ஆம் திகதியன்றுவரை எமது பிரச்சினைகளை வெளிக்கொணரும் வகையில் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளோம்.குறிப்பாக எமது மூன்று நாள் போராட்டமானது 29 ஆம் திகதி நாளையதினம் பசுமை தானம் என்னும் தொனிப்பொருளில் மரக்கன்று விநியோகித்தலுடன் யாழ் வீரசிங்கம் மண்டபம் முன்றலில் ஆரம்பிக்கப்படுவதுடன், 30 ஆம் திகதியன்று கலைத்தூது கலையரங்கில் இரத்த தான முகாமும் நடைபெறவுள்ளது.இறுதி 31 ஆம் திகதியன்று ஜானாதிபதியின் யாழ் வருகையை முன்னிட்டு மாவட்ட செயலகம் முன்பாக பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஜனாதிபதிக்கு எமது நிலையை எடுத்துக் கூறும் வகையில் கவன ஈர்ப்பு போரட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.வடமாகாணம் தழுவிய ரீதியில் உள்ள பட்டதாரிகளின் சார்பில் ஒலிக்கும் குரலாக இது நடைபெறும் எமது இந்த போராட்டத்துக்கு வலுச்சேர்க்க அனைத்து தரப்பினரிடமிருந்தும் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம் என்றும் அழைப்பு விடுத்தமை குறிப்பிடத்தக்கது.இதேநேரம் குறித்த சங்கத்தின் தலைவர் சசிதரன் கூதுகையில் - வேலையற்ற பட்டதாரிகள் என்ற வகைக்குள் கலைத்துறையில் பட்டங்களை பெற்றவர்களே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைக்கு நாட்டின் கல்வி கட்டமைப்பே காரணமாக இருக்கின்றது.இதேவேளை நாட்டின் கல்வி திட்டத்தின் ஊடாக முறையான தகுதி திறனை நாம் கொண்டிருக்கின்றோம்.எமக்கு வேலைவாய்ப்பு வழங்கபடவில்லை எனில் அதற்கு முழுப் பொறுப்பும் இந்த கல்வி திட்டத்தினை கொண்டிருக்ககூடிய அரசினதே ஆகும்.வடமாகாணத்தில் இன்று பல்வேறுபட்ட திணைக்களங்களில் வேலைவாய்ப்பு வெற்றிடம் காணப்படுகின்றது. இலங்கை அரச கட்டமைப்பின் பட்டபடிப்பு மூலமே நாம் கல்வித் தகுதியை பெற்றுள்ளோம்.அதற்கு உரிய தொழில் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, அரசுக்கு அழுத்தம் கொடுக்கவே நாம் இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றோம்.இதேநேரம் ஆளுநர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு எமது நிலைப்பாடுகள் அடங்கிய கோரிக்கை கடிதம் ஒன்றினை வழங்கியுள்ளோம்.மேலும் அரசாங்கம் உருவாகி சில மாதங்களே கடந்துள்ளது. இந்த அரசாவது எமக்கான தீர்வை தரும் என நாம் எதிர்பார்த்தோம். அதுவும் ஏமாற்றமாகவே இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- 248
மேஷம்வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கௌரவ பதவிகள் மூலம் செல்வாக்குகள் மேம்படும். லாபம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் ரிஷபம்இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் பணி வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும். சமூகப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். எதிர்ப்பாராத சில இடமாற்றம் நேரிடலாம். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சிக்கல்கள் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம்மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சி இன்மை ஏற்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் கடகம்ஆன்மிகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வியாபார முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான தருணம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் லாபங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் சிம்மம்பணி நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்படும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். பங்குதாரர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். முன் கோபத்தால் சில விரயங்கள் நேரிடும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களில் தீர ஆலோசித்து முடிவெடுக்கவும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். இன்சொல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் கன்னிபொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலைத்துறைகளில் அனுசரித்துச் செல்லவும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்குடும்ப பெரியோர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மறைமுகமான போட்டிகளை சமாளிப்பீர்கள். உடலில் இருந்துவந்த பிரச்சனைகள் அகலும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். வாகனம் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வீடு கட்டுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு விருச்சிகம்எதிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மனதளவில் தைரியம் உண்டாகும். காலி மனை மூலம் ஆதாயம் அடைவீர்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். கல்வியில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தபால் துறைகளில் புதிய அனுபவம் கிடைக்கும். விளம்பரம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சினம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை தனுசுசெலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வியாபார நெருக்கடிகள் விலகும். உத்தியோகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உழைப்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகரம்இனம்புரியாத சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். முயற்சி ஈடேறும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம்அவசரம் இன்றி எதிலும் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளால் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். சஞ்சலமான சிந்தனைகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 284
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த அரசியல்வாதியுமான மாவை சேனாதிராஜா யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.இன்று (2025.01.28) காலை வீட்டில் தவறி விழுந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகஅவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைம் குறிப்பிடத்தக்கது
- 310
முல்லைத்தீவு மாங்குளம் பகுதியில் வளர்ப்பு நாய் ஒன்றை தூக்கிட்டு கொலை செய்ததாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த பெண் நேற்றையதினம் (ஜனவரி 27) கைது செய்யப்பட்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.மிருகவதை தடைச் சட்டத்தின் கீழ் இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.மாங்குளம் பகுதியில் நாய் ஒன்றின் கழுத்தில் கயிற்றினால் சுருக்கிட்டு, கொன்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மாங்குளம் போலீஸார், 48 வயதான பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.'' என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.முன்பதாக முல்லைத்தீவு, மாங்குளம் பகுதியைச் சேர்ந்த சாந்தரூபன் ஜீவநந்தினி, தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்ந்து வந்துள்ளார்.சாந்தரூபன் ஜீவநந்தினியின் அண்டை வீட்டில் வசித்து வந்த விஜேந்திரன் சஜிதா என்ற பெண், ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வந்துள்ளதாக மத்தியஸ்த சபை தெரிவிக்கின்றது.இந்த நிலையில், விஜேந்திரன் சஜிதா வளர்ந்து வந்த ஆட்டை, சாந்தரூபன் ஜீவநந்தினி வளர்த்த நாய் கடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சம்பவத்தில் காயமடைந்த ஆடு இறந்த நிலையில், இருவருக்கும் இடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஒட்டுச்சுட்டான் மத்தியஸ்த சபைக்கு வந்துள்ளதாக மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், சர்வதேச ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த 25 ஆம் தேதி இடம்பெற்றுள்ளது.நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக நாயின் உரிமையாளர் மத்தியஸ்த சபையின் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.''நாயை கட்டுப்படுத்த முடியாதுள்ளது என உரிமையாளர் கூறினார். இரண்டு தரப்பும் தங்களுக்குள் கதைத்துள்ளனர். அப்போது நாயை தான் வாங்கிக் கொள்வதாக ஆட்டின் உரிமையாளர் குறிப்பிட்டார். நாங்கள் இணக்கப்பாட்டிற்கு வருகின்றோம் என்ற பின்னரே நாங்கள் அதற்கான சான்றிதழை வழங்கினோம்.''''நாங்கள் நாயை கொலை செய்து படத்தை அனுப்புமாறோ அல்லது தூக்கில் போடுமாறோ நாங்கள் எந்தவொரு ஆலோசனையும் வழங்கவில்லை. ஆனால் நாயை கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நான் போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.""போலீஸார் சம்பந்தப்பட்ட பெண்ணை அழைத்து விசாரணை நடத்தியது. தான் கொண்டு செல்லும் போது கழுத்து நெரிப்பட்டு நாய் இறந்ததாக அவர் போலீஸாரிடம் தெரிவித்தார். ஆனாலும் அவருக்கு எதிராக முறைப்பாடொன்று பதிவு செய்துள்ளேன்'' என மத்தியஸ்த சபையின் தலைவர் கனகலிங்கம் ஜெயதீபன், அந்த ஊடகத்துக்கு தெரிவித்துள்ளார்மத்தியஸ்த சபை அவமதிப்பு தொடர்பிலும் போலீஸ் நிலையத்தில், குறித்த பெண்ணிற்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக அவர் கூறுகின்றார்.முறைப்பாட்டாரான விஜேந்திரன் சஜிதாவிடம் ஏன் நாயை கையளிக்கும் தீர்மானம் எட்டப்பட்டது என்பது குறித்து கேட்டபோது, ''நான் பராமரித்துக் கொள்கிறோன் என அவர் கூறியதன் அடிப்படையிலேயே நாயை அவரிடம் கொடுத்தோம். ஆனால், தீர்வு ஆவணத்தில் பராமரிப்பு என்ற வசனத்தை எழுதாது விட்டு விட்டோம். நாங்கள் பராமரித்துக்கொள்கின்றோம். இனி பிரச்னை இல்லை என அவர் கூறினார்.'' என அவர் குறிப்பிட்டார்.மத்தியஸ்த சபையின் இணக்கப்பாட்டிற்கு அமைய, நாயின் உரிமையாளரான சாந்தரூபன் ஜீவநந்தினி, ஆட்டின் உரிமையாளரான விஜேந்திரன் சஜிதாவிடம் நாயை கையளித்துள்ளார்.இந்த நிலையில், நாயின் கழுத்து கயிற்றினால் நெரிக்கப்பட்டு தொங்கும் வகையிலான புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.நாயை கொன்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் ஊடாக கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்த நிலையிலேயே, குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபரை எதிர்வரும் மூன்றாம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 343
புரட்சித் தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரனது 108 ஆவது பிறந்ததின நிகழ்வானது நேற்றையதினம் (27) பண்டத்தரிப்பு - சாந்தை விநாயகர் கலையரங்கில் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர் பேரவை மற்றும் எம்.ஜி.ஆர் முன்னேற்றக்கழகம் ஆகியன இணைந்து இந்த பிறந்தநாள் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து சிறப்பித்தார்.விருந்தினர்களுக்கு மாலை அணிவித்து அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மங்கல விளக்கு ஏற்றி வைக்கப்பட்டு, எம்.ஜி.ஆரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவப்பட்டது.இதன்போது புற்றுநோய், சிறுநீரக நோய், பார்வை குறைபாடு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கல், விளையாட்டில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசில்கள் வழங்கல், சிறுவர்கள் - முதியோர்களுக்கு உதவிகள் வழங்கல் மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு என்பன இடம்பெற்றன.இதில் யாழ். அரசாங்க அதிபர், அனைத்து எம்.ஜி.ஆர் பேரவையினர், எம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகத்தினர், கிராம சேவகர், எம்.ஜி.ஆரின் இரசிகர்கள் மற்று பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.000
- 343
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு மீனவர்களுக்கு காயம் என்பதால் மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.000
- 343
இலங்கைக் கடற்பரப்பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடித்த 13 இந்திய மீனவர்கள் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது நடவடிக்கையின்போது கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டு இந்திய மீனவர்கள் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.தமிழகத்தைச் சேர்ந்த 13 மீனவர்கள் ஒரு படகில் யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்புக்குள் ஊடுருவி மீன்பிடியில் ஈடுபட்ட சமயமே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இரண்டு மீனவர்களுக்கு காயம் என்பதால் மீனவர்கள் அனைவரையும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்படவுள்ளதாகவும், பொலிஸாரின் நடவடிக்கைகளின் பின்னரே அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.000
- 345
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அம்பன் கிழக்கு வரை சென்று நிறைவடைந்துள்ளது.பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலமையில் ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் "ஒழிப்போம் ஒழிப்போம் மதுவை ஒழிப்போம், தவிர்ப்போம் தவிர்ப்போம் வெற்றிலை பாக்கை தவிர்ப்போம், காப்போம் காப்போம் சமூகத்தை காப்போம்" என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி மாணவர்கள் தமது விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருந்தனர்.000
- 348
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது -யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் மூலமான நீர் வழங்கல் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றதுநேற்றையதினம் (27.01.2025) திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் வீதியில் உள்ள வீடுகளுக்கு வளமையான குழாய் நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில் வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நீர் தாங்கிகளில் குறித்த நீர் நிரப்பப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் நீரை போத்தலில் எடுத்த போது சிவப்பு நிறமாக குறித்த நீர் காட்சி அளித்ததை அவதானித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குழாய் நீரில் ஏற்பட்ட பழுது காரணமாக திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது .திருத்த வேலையின் போது மண் உட்பகுந்த காரணத்தினால் அருகில் இருக்கும் வீடுகளின் குடி நீரில் சிவப்பு மண் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்ட போது குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
- 350
வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1969 ஆம் ஆண்டின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் இந்த ஆண்டு ஜனவரி 27 வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் விதிமுறைகளின் கீழ் நாணய கடிதங்கள் வழங்கப்பட்ட வாகனங்களை விடுவிப்பதற்குச் சுங்க பணிப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த டிசம்பர் 18 ஆம் திகதிமுதல் எதிர்வரும் ஜூலை 31 ஆம் திகதி வரை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வாகன இறக்குமதியாளர்கள் அல்லாத நபர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் எனக் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன இறக்குமதி தொடர்பான விதிமுறைகளுக்கு இணங்காமல், தொடர்புடைய விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை, இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் தனது சொந்த செலவில் மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.000
- 347
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இன்றுமுதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார். வகுப்பு நீக்கம் செய்யப்பட்ட சில மாணவர்கள் மீதான தடையை நீக்குவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பேரவைக் கூட்டத்தின் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பின்னர், பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் பீடாதிபதி பதவியிலிருந்து விலகுவதாகப் பேராசிரியர் ரகுராம் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தொடர்பில் பல்வேறு கருத்துகள் ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் வெளியாகி இருந்தன. இந்தநிலையில் நிலைமை குறித்துக் கலந்துரையாடும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் விசேட பொதுக்குழுக் கூட்டம் நேற்று முற்பகல் இடம்பெற்றது. கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தினை பாதிக்கும் வகையிலும், உடைமைச் சேதங்களை விளைவிப்பதிலும், சீரழிவு மிக்க நடவடிக்கைகளிலும் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராகப் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் கடந்த காலங்களில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாகவும் குறித்து இந்தக் கூட்டத்தில் பல உறுப்பினர்கள் தமது கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.அத்துடன், திட்டமிட்ட முறையில் விசாரணைகளிலே தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு மாணவர்கள் தண்டனைகளிலிருந்து தப்பித்துச் செல்ல நிர்வாகம் வழியமைத்துக் கொடுப்பதாகவும் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், இந்த கூட்டத்தின் இறுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இன்றுமுதல் விரிவுரைகளைப் புறக்கணிப்பதற்கு தங்களது சங்கம் தீர்மானித்துள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் பி.ஐங்கரன் தெரிவித்துள்ளார்000
- 348
போர் நிறுத்தம் அமுலுக்கு வந்த நிலையில், இஸ்ரேல் நெட்சாரிம் (Netzarim) வழித்தடத்தின் ஊடான பாதைகளைத் திறந்த பின்னர் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்மதியினூடாக எடுக்கப்பட்ட படங்களில் கடலோரப் பாதையினூடாக காசா நோக்கிப் பெரும் எண்ணிக்கையில் மக்கள் செல்லும் காட்சிகள் காட்டப்பட்டன. ஆனால், மகிழுந்துகளில் பயணிக்கும் மக்கள் சோதனைச் சாவடிகளின் ஊடாக காசாவிற்கு செல்ல பல நாட்கள் காத்திருக்க வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதி ட்ரம்ப், பாலஸ்தீனியர்கள் ஜோர்தான் மற்றும் எகிப்தில் மீள்குடியேற்றப்படும் வகையில், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப் பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையினை சம்பந்தப்பட்ட நாடுகள் மட்டுமல்லாமல் பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளும் நிராகரித்துள்ளன000
- 350
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட இரண்டு கொள்கலன்களிலிருந்து 20 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான பொருட்கள் சுங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன. பொறுப்பேற்கப்பட்ட பொருட்களில் வாசனைத் திரவியங்கள், பாதணிகள், சொக்லட் உள்ளிட்ட பல பொருட்கள் அடங்கியுள்ளன. டுபாய் மற்றும் மலேசிய ஆகிய நாடுகளிலிருந்து குறித்த கொள்கலன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முகவரிகளுக்குக் குறித்த பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த முகவரிகள் அனைத்தும் போலியானவை என முன்னெடுக்கப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.000
- 351
சிறுவர்கள் மீதான கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பாக 2024 ஆம் ஆண்டில் 321 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.2024 ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்பாக 580 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த காலகட்டத்தில், சிறுவர்கள் தொடர்பாக மொத்தம் 8,746 முறைப்பாடுகள் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளன. இதில் அதிக எண்ணிக்கையிலான முறைப்பாடுகளாக 2,746 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ளது.சிறுவர்கள் மீதான சித்திரவதை தொடர்பாக 1,950 முறைப்பாடுகளும், சிறுவர்கள் யாசகம் பெறுவது தொடர்பாக 229 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன. பாலியல் வன்கொடுமை தொடர்பாக 42 முறைப்பாடுகளும், பாலியல் செயல்களுக்கு சிறுவர்களை தூண்டுவது தொடர்பாக 25 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளது.இதற்கிடையில், கடந்த ஆண்டில் குழந்தை திருமணங்கள் தொடர்பாக 14 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, மேலும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டல்கள் தொடர்பாக 151 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.2024 ஆம் ஆண்டில் தற்கொலை முயற்சி தொடர்பாக 18 முறைப்பாடுகளும், போதைப்பொருள் பழக்கம் தொடர்பாக 120 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு வயது குறைந்த கர்ப்பங்கள் தொடர்பாக 53 முறைப்பாடுகளும், பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்கள் தொடர்பாக 39 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது
- 352
நாட்டில் உள்நாட்டு விமான போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் நடந்த ஒரு சிறப்பு கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.தற்போது சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், விமான நிலைய வசதிகளை முடிந்தவரை விரிவுபடுத்தவும் இந்த கலந்துரையாடலின் போது முடிவு செய்யப்பட்டுள்ளது.தற்போதுள்ளவற்றுடன் குறைந்தது 20 செக்-இன் கவுண்டர்களையாவது சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இதற்காக தேவையான இடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, இந்த கலந்துரையாடலின் போது வசதிகளை மேம்படுத்தவும், பிற சர்வதேச விமான நிறுவனங்களை நமது விமான நிலையத்திற்கு அழைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றார்.அதன் அடிப்படையில், 2028 ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் விமானப் பயணிகளின் எண்ணிக்கையை எதிர்பார்க்கும் வகையில், அதற்குத் தேவையான ஆலோசனைகளை அமைச்சர் வழங்கினார்.000
- 352
குரோதி வருடம் தை மாதம் 15 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 28.1.2025. சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 08.09 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று காலை 09.20 வரை பூராடம். பின்னர் உத்திராடம். ரோகிணி, மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 370
விவசாயி ஒருவர் புதிதாக ஒரு ஆலமரக்கன்றை தனது தோட்டத்தில் நட்டு வைத்தார். அது காற்றில் அசைந்து ஒடிந்து விடாமல் இருக்க அருகில் ஒரு குச்சியை நட்டு வைத்து செடியை அதில் கட்டி வைத்தார். பிறகு அதை சுற்றி வலையால் வேலி அமைத்தார். நேரத்துக்கு நேரம் தண்ணீரும் உரமும் போடப்பட்டது.இதைப் பார்த்த எதிரே இருந்த காட்டுச்செடி ஒன்று, " இப்படி ஒரு வாழ்க்கை தேவையா..? எங்களை பார் நாங்கள் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம். ஆனால் நீயோ, குச்சியால் கட்டப்பட்டு கூண்டுக்குள் அடைப்பட்டு கிடக்கிறாய்"என ஏளனம் செய்தது.ஆலமரச்செடி யோசிக்க ஆரம்பித்தது. நானும் பிற செடிகளை போல சுதந்திரமாக வாழ்ந்தால் என்ன ? எப்படியாவது இந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கும் போதே, மறுநாள் அந்த காட்டுச்செடி இருந்த இடம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.அந்த காட்டுச்செடியும் வெட்டி தூக்கியெறியப்பட்டது. அந்த வழியாக வந்த விவசாயியின் மகன் , "இது என்ன செடி அப்பா..? ஏன் வலையெல்லாம் போட்டு அடைச்சி வச்சிருக்கீங்க " என்று கேட்க,இதுவா.. இது ஆலமரச்செடி, இது மற்ற செடி மாதிரி சீக்கிரமா வளர்ந்து சீக்கிரமா அழிஞ்சு போறது இல்ல. பல நூறு வருஷம் வாழ்ந்து பயன்படக்கூடியது. அதான் இதுக்கு இவ்வளவு பாதுகாப்பு என்றார் விவசாயி.தன்னை கட்டி வைத்திருக்கும் குச்சியும், சுற்றியிருக்கும் வேலியும், நான் இன்னும் நன்றாக வளர்வதற்கு தானே தவிர, சுதந்திரத்தை பறிப்பதற்கு அல்ல என்பதை புரிந்து கொண்டது.நீங்கள் ஆலமரமாய் வளர வேண்டுமென்றால் சில கட்டுப்பாடுகள் இருக்க தான் செய்யும்.
- 579
ஒரு ஊரில் நல்ல அழகி ஒருத்தி இருந்தாள். அவளைப் பெண் பார்க்க போகும் ஆண்களுக்கு எல்லாம் ஏகப்பட்ட கண்டிசன் போட்டுக் கொண்டிருந்தாள்.அந்த கண்டிசன்களை எல்லாம் கேட்ட மாப்பிள்ளைகள் இவளைக் கல்யாணம் செய்து வாழமுடியாது என தலை தெறிக்க ஓடித் தப்பித்துக் கொண்டு இருந்தார்கள்.நல்ல அழகான பெண்ணாக தேடிக்கொண்டு இருந்த ஒருத்தனுக்கு இந்த பெண்ணைப்பற்றிய தகவல் கிடைத்தது அவன் தன் அம்மாவிடம் அந்த பெண்ணை பார்த்து பேசிக் கல்யாணம் செய்யலாம் எனச் சொல்லி இருக்கிறான்.அவன் அம்மா ஏற்ககனவே இந்த பெண் பற்றி கேள்விப்பட்டு இருந்ததால் வேண்டாம் என்று மறுத்திருக்கிறாள்.இருந்தும் இவன், நான் அந்த பெண்ணைத்தான் கல்யாணம் செய்வதாக உள்ளேன் எனச் சொல்லவும், சரி வா பெண் பார்த்துப் பேசுவோம் என அவனும் அவனுடைய அம்மாவும் சேர்ந்து அங்கே போனார்கள்.போகும்போதே அம்மாவிடம் சொல்லிவிட்டான்: “அவள் எந்த கன்டிசன் போட்டாலும் தலையாட்டி சரி என சொல்லிவிடு அம்மா”அம்மாவும் சரி என்று சொல்லிவிட்டார்.பெண்வீட்டிற்குப் போய்ப் பெண் பார்த்து முடிக்கும்போது, பெண் போட்ட அத்தனை கன்டிசனுக்கும் அவன் சம்மதித்துவிட்டான்.ஆனால் அவன் அன்னை நொந்து போய்விட்டதோடு, மனதில் நம் மகனின் வாழ்க்கை சிக்கலாகப் போகிறது என்று நினைத்தார்.மணப்பெண்ணும் நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்று திருமணத்துக்கு ஒத்துக்கொண்டாள்.திருமணமும் நன்றாக முடிந்து மனைவியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு அவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.வரும் வழியில் ஒரு மாடு பாதையில் நின்றுகொண்டு இருந்தது.இவன் சட்டென அருகில் கிடந்த உலக்கையை எடுத்து மாட்டை அடித்து இனிமேல் போகும் பாதையில் நிக்காதே என்று சொல்லிக் கத்தியிருக்கிறான்..அடுத்து வழியில் ஒரு நாய் படுத்து இருந்தது. இவன் தன் காலால் அந்த நாயைப் பலமாக உதைந்து, இனிமேல் போகும் பாதையில் படுப்பாயா என்று சொல்லி இருக்கான். வலி தாங்காத நாயும் அலறலோடு ஓடியிருக்கிறது.அடுத்ததாக, வீட்டுக்குள் நுழையும் முன்பு வீட்டு வாசலில் நின்ற சேவல் கூவியது. இவன் சட்டென்று சேவலைப் பிடித்து இனிமேல் எப்படிக் கூவுவாய் என்று பார்க்கிறேன்” என்று சொல்லியவாறு சேவலின் தலையைப் பிடித்து பலமாகத் திருகி அதைக் கொன்றுவிட்டான்.இதையெல்லாம் வழியெங்கும் பார்த்துகொண்டே வந்த அவனுடைய புது மனைவி, பயத்தில் உறைந்து போனதோடு, தான் போட்ட கன்டிசன்களை எல்லாம் மறந்து, அவனுக்கு அடங்கி வாழ்ந்தாள்.இதுதான் மாட்டை வைத்து மனைவியை அடக்கியவன் கதை.
- 584
கிராமத்தார் ஒருவர் மதிய உணவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு காட்டிற்கு மரம் வெட்ட சென்றார். சாப்பிட அமர்ந்தவுடன் திடீரென்று அவருக்கு ஒரு ஞாபகம்வந்தது. என்னவோ.. கடவுள் தான் எல்லா ஜீவராசிக்கும் உணவு கொடுப்பதாக சொல்கிறார்களே.. இப்போது எனக்கு எப்படி உணவு கொடுக்கிறார் என்று பார்க்கலாம்? என்று பாத்திரத்தை தனக்கு எதிரே பிரித்து வைத்து அதை வெறித்தபடி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார். அவ்வழியாக பசியோடு வந்த கொள்ளையர்கள்.. அந்த உணவை பறித்து சாப்பிட நினைத்து அவன் அருகே அமர்ந்து.. பாத்திரத்தை பறித்தார்கள். இவருக்கு சிரிப்பு தாங்க முடியல. இப்போது கண்டிப்பாக இறைவனால் எனக்கு உணவு கொடுக்க முடியாது. என்று நினைத்துக் கொண்டு வாய் ஏதும் பேசாமல் அமைதியாக இருந்தார். வந்திருந்த கொள்ளையரில் ஒருவர்.... மற்றவர்களை தடுத்து; ஏய் இந்த உணவில் இவன் விஷம் கலந்து இருக்கலாம். அதனால்தான் நாம் பறித்த போது தடை ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்கிறான். என்றபடி; உண்மையைச் சொல் என்று இவனை அதட்டியபோது.. இவர் மேலும் மௌனம் காக்கவே.. அவர்கள் கண்டிப்பாக இதில் விஷம் கலந்திருக்கிறது என்று நினைத்து, அந்த உணவை இவர் வாயில் திணித்தார்கள்.எனவே கடவுள் நம்மை சோதிக்கலாம். நாம் அவரை சோதித்துப் பார்க்க கூடாது.
- 585
இலங்கை நாட்டின் முன்னாள் அதிபராக இருந்தவர் மகிந்த ராஜபக்சே. இவரது மகன் யோஷிதா ராஜபக்சே மீது நிலப்பிரச்சனை தொடர்பாக புகார் எழுந்தது. இந்த நிலையில், ராஜபக்சேவை குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். இலங்கையின் பெலியத்த பகுதியில் வைத்து யோஷிதா ராஜபக்சே கைது செய்யப்பட்டுள்ளார். நிலப் பிரச்சினை தொடர்பான குற்றச்சாட்டில் ராஜபக்சேவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை முன்னாள் அதிபரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 586
மாற்றங்கள் நிகழுமென்று கூறி மாறிமாறி வந்த அரசுகளால் வேதனைகளை தவிர வேறெதுவும் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.மாறாக சிங்கள் குடியேற்தங்களுக்கான முஸ்தீபுகளையே திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என வடக்கு கிழக்கு பெண்கள் வலையமைப்பு தலைவிஜெயானந்தன் ஜெயச்சித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
- 670
மாற்றங்கள் நிகழுமென்று கூறி மாறிமாறி வந்த அரசுகளால் வேதனைகளை தவிர வேறெதுவும் இதுவரை தமிழ் மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.மாறாக சிங்கள் குடியேற்தங்களுக்கான முஸ்தீபுகளையே திரைமறைவில் முன்னெடுத்து வருகின்றது என வடக்கு கிழக்கு பெண்கள் வலையமைப்பு தலைவிஜெயானந்தன் ஜெயச்சித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
- 674
மேஷம்நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். திடீர் முடிவுகளால் சில மாற்றங்கள் ஏற்படும். சமூகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். அலுவலகத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை ரிஷபம்உறவினர்கள் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். உடல்நிலையில் ஒருவிதமான சோர்வு ஏற்பட்டு நீங்கும். அரசுப் பணிகளில் சற்று கவனத்துடன் செயல்படவும். பணிபுரியும் இடத்தில் விவேகத்துடன் இருக்கவும். வியாபார அபிவிருத்தி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் மிதுனம்சகோதரர்கள் வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்வெளி வட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வுகள் கிடைக்கும். திடீர் தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவங்கள் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு சிம்மம்வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். உடன் இருப்பவர்களை பற்றி புரிதல்கள் மேம்படும். மனதளவில் பக்குவமும், புரிதலும் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னிதாய் வழி உறவுகள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். புதிய வீடு மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம்வியாபாரம் நிமித்தமான அலைச்சல்கள் ஏற்படும். சக ஊழியர்களால் நினைத்தது நிறைவேறும். முயற்சிகளுக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை உருவாகும். செயல்களில் இருந்துவந்த தடுமாற்றம் மறையும். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். காது தொடர்பான இன்னல்கள் குறையும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு விருச்சிகம்வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சில்வர் தனுசுசிந்தனையின் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். பாகப் பிரிவினை செயல்களில் விவேகம் வேண்டும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வகையில் சுபச் செய்திகள் ஏற்படும். சமூக பணிகளில் அனுபவங்கள் அதிகரிக்கும். செய்யும் பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் காணப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம்பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் சென்றால் பொறுப்புகள் குறையும். திடீர் பயணங்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். பழைய விஷயங்களால் குழப்பம் உண்டாகும். பிற மொழி பேசும் மக்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதை உறுத்திய பிரச்சனைகளுக்கு தெளிவுகள் பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம்விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். புதுவிதமான தேடல்கள் மனதில் உருவாகும். தடைப்பட்ட பணிகளை விடாப்பிடியாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மகிழ்ச்சி உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம்திட்டமிட்டு செயல்களில் எண்ணிய முடிவுகள் உண்டாகும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- 724
குரோதி வருடம் தை மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.1.2025சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 08.29 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி. இன்று காலை 08.55 வரை மூலம். பின்னர் பூராடம். கிருத்திகை, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 733