Followers
Empty
""நீதிக் கதை""***************அது ஒரு அழகான ஊர்.அந்ந ஊரின் நடுவே ஒரு ஆலயம் அமைந்துள்ளது.அந்த ஊரில் உள்ள மக்கள் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர்.அந்த ஆலயத்தின் தர்மகர்த்தா மிகச் செல்வாக்கான மனிதராக இருந்து வந்தார்.அந்த கோவிலில் ஒரு பிச்சைக்காரன்.. அங்கே கொடுக்கும் பொங்கல் சுண்டல் போன்றவற்றை வாங்கி சாப்பிட்டு அங்கேயே படுத்துக் கொண்டான்.அவனுக்கு போக்கிடம் ஒன்றும் இல்லை.கோயிலில் திருவிழா க்களோ இன்ன பிற விழாக்களோ எல்லாம் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு செய்வார்கள்.இப்படி இருக்கும் போது ஒரு நாள் அக் கோயிலின் பூசாரி தர்மகர்த்தா விடம் சென்று தான் ஒரு கனவு கண்டதாகவும் கோயில் நடுவே ஒரு புதையல் இருப்பதாகவும் அந்த இடத்தையும் பூசாரி சொன்னார்.தர்மகர்த்தாவுக்கோ நானேஅந்த புதையலை எடுக்க வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது.அன்றிரவு யாருக்கும் தெரியாமல் புதையலை தோண்ட தொடங்கினார்.புதையல் கண்ணில் பட்டது.அதை எடுக்க எத்தனித்தபோது அது மீண்டும் கீழிறங்கியது.எவ்வளவு முயற்சி செய்து பார்த்தும் அவர் கையில் கிடைக்கவில்லை.பின்பு தனது மனைவி பிள்ளைகளை கொண்டு அதை எடுக்க சொன்னார்.அவர்கள் கையிலும் அது கிடைக்கவில்லை.பொழுது விடிந்ததும் இந்த விடையம் அவ்வூர் மக்களுக்கு தெரிந்து விட்டது.மக்கள் அப்புதையலை நோக்கி படையெடுத்தார்கள் அவர்கள் ஒவ்வொருவரும் புதையலை எடுக்க எத்தனித்தபோது அது மீண்டும் கீழிறங்கியது.அவர்கள் மிகவும் களைத்து போனார்கள்.இறுதியில் பூசாரி ஒரு யோசனை சொன்னார் அந்த பிச்சைக்காரனை இழுத்து வாருங்கள் அவனைக் கொண்டு முயற்சி செய்து பார்க்கலாம் என்று சொன்னார்.அங்கே அந்த பிச்சைக்காரன் எதையோ சாப்பிட்டு கொண்டிருந்தான் அவனை சாப்பிட விடாமல் இழுத்துக்கொண்டு போய் அந்த புதையலை எடுக்க சொன்னார்கள்...என்ன அதிசயம்..பிச்சைக்காரனின் கையோடு புதையல் வந்து விட்டது.எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர்.. நாம் எவ்வளவோ முயன்றும் முடியாமல் இந்த பிச்சைக்காரனுக்கு இறைவன் கொடுத்து விட்டாரே என்று இறைவனை திட்டினார்கள்.நாங்கள் இறைவனுக்கு எவ்வளவு செய்தோம் எங்களை கை விட்டாரே என்ற ஆத்திரத்தில் பிச்சைக்காரன் கையிலிருந்த புதையல் பானையை தர்மகர்த்தா பறித்தெடுத்து எனக்குத்தான் இது சொந்தம் என்றபடி அதை கொண்டு செல்ல முயன்ற போது பூசாரி.... இல்லை இல்லை நான் தான் முதலில் கனவு கண்டேன் அதனால் எனக்குத்தான் இது சொந்தம் என்றபடி தர்மகர்த்தா விடம் புதையலை பறித்துக் கொண்டார்... இப்படியே ஒவ்வொரு த்தரும் தங்களுக்கு தான் சொந்தம் என்றபடி அடிபட தொடங்கினார்கள் அங்கே ஒரு யுத்த களமே உருவானது இறுதியில் அப் புதையல் யாருக்கும் கிடைக்காமல் புதையல் ஆசையில் மடிந்தே போனார்கள் . இப்போது ஊர் வெறிச்சோடி இருக்கிறது..****இதன் நீதி****1) அதிக ஆசை ஆபத்தில் முடியும்.2) இறைவன் யாருக்கு எப்போது கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கிறான்.3) இறைவன் எப்போதும் பகட்டையும் பணத்தையும் விரும்புவதில்லை என்பதற்கு.....###இது ஒரு குட்டிக்கதை####

Add new...