தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ மற்றும் சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் ‘மதராஸி’ திரைப்படங்கள் ஒரே நாளில், ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு பெரிய நடிகர்களின் படங்கள் மோதுவதால், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ‘இட்லி கடை’ படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில், ‘மதராஸி’ படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் போட்டி எந்தப்படத்திற்கு சாதகமாக அமையும் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்
- 528