Feed Item

தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் கோப்பாய் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் கீழ் உள்ள பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்டது. தற்பொழுது மழை காலம் ஆரம்பித்துள்ளதனால் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் காணப்படுகின்றது.

அதனை கட்டுப்படுத்தும் முகமாக இன்றைய தினம் அச்சுவேலி வடக்கு / அச்சுவேலி மேற்கு மற்றும் தெற்கு போன்ற பகுதிகளில் யாழ்ப்பாணம் மாவட்ட தொற்று நோயியலார் வைத்தியர் யோசப் எமில் சுகிர்தராஜ் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

  • 1709