Feed Item
·
Added article

சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன் "எனக்கு நடிக்கத் தெரியாது என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். என்னைக் கொஞ்சம் கொஞ்சமாக ஓரம் கட்ட ஆரம்பத்துவிட்டார்கள். என்னை விமர்சனம் செய்யுங்கள், அதில் தவறில்லை. ஆனால், அந்த விமர்சனம் என் வாழ்வையே மொத்தமாக அழித்துவிடக்கூடாது" என்று வருத்தமாகப் பேசினார்.

அனுபமாவிற்கு ஆதரவாகப் பேசிய நடிகை சுரேஷ் கோபி, "இது மலையாள சினிமாவில் இருக்கும் பெரிய பிரச்னை. நடிகை சிம்ரன் இங்கு வந்தபோது இதேபோலத்தான் இங்கு அவரைக் குறைத்து மதிப்பிட்டார்கள்.அசின், நயன்தாரா என இன்று உச்சத்தில் இருக்கும் பிரபல நடிகைகளுக்கும் அவர்களது ஆரம்ப காலத்தில் இதேபோலத்தான் பிரச்னைகள் வந்தது. நீங்கள் பெரிய நடிகையாக வலம் வருவீர்கள்''' என்று கூறினார்.

  • 906