வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ள மகிழ்ச்சியான அறிவிப்பு!உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு புதிய புதுப்பித்தல்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த வகையில் ஒரே நேரத்தில் 100 புகைப்படங்களை அனுப்பும் வசதி வெகு விரைவில் வாட்ஸ்அப் தளத்தில் அறிமுகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா நிலநடுக்கம்: 90 மணித்தியாலங்களாக இடிபாடுகளில் சிக்கியிருந்த பச்சிளம் குழந்தையும் தாயும் உயிருடன் மீட்பு
4,000ஐ தாண்டியது உயிர் பலி – எட்டு மடங்காக அதிகரிக்கலாமென எச்சரிக்கைதென்கிழக்கு துருக்கியில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிப்பதற்காக மீட்புப் பணியாளர்கள் கனமழை மற்றும் பனியுடன் போராடி வருகின்றனர்.மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் மேலும் பலரைக் கண்டறிவதால், பலி எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.அனர்த்த வலயத்தில் உள்ள பலர் கட்டடங்களுக்கு திரும்புவதற்கு மிகவும் அச்சப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.துருக்கியில் உள்ள இலங்கையர்கள் தொடர்பாக தகவல்களை பெற இலங்கை தூதரகம் தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளது.Call 00903124271032Mobile- 00905344569498.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழம டெக்சாஸின் டல்லாஸ் எக்ஸிகியூட்டிவ் விமான நிலையத்தில் இடம் பெற்றிருந்தது. போயிங் பி-17 குண்டுவீச்சு விமானம் மற்றும் ஒரு சிறிய விமானம் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தரையில் மோதி விழுந்ததில் விமானம் தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த சம்பவத்தில் விமான பணியாளர்கள் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட சில ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த ட்விட்டர் முடிவு செய்துள்ளது.எலோன் மஸ்க் ட்விட்டரில் பெரும்பான்மையான பங்குகளை வாங்கிய பிறகு சுமார் 3,700 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.நிறுவனத்தை மறுசீரமைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக எலோன் மஸ்க் கூறியிருந்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா வளைகுடாவில் நோர்வே நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்று கடற்கொள்ளையர்களால் சிறை பிடிக்கப்பட்டு உள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.26 பணியாளர்களுடன் குறித்த கப்பல் கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் பயணிகள் விமானம் சீரற்ற வானிலை காரணமாக ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக அல்ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.டார் எஸ் சலாம் நகரில் இருந்து வட மேற்கு நகரமான புகோபா நோக்கி பயணித்த உள்ளூர் விமானமே இவ்வாறு 43 பேருடன் விபத்துக்குள்ளாகியது.26 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.விமானம் தரையரங்குவதற்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் குறித்த பகுதியில் மழை பெய்து கொண்டிருந்ததாக சர்வதேச செய்திகள் சுட்டிக்காட்டுகின்றனர்.இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்து புகோபாவை பகுதியில் உள்ள விக்டோரியா ஏரிக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி 20 உலக கோப்பை கிரிக்கெட்டில் வரும் 6-ஆம் தேதி இந்தியா ஜிம்பாப்வே அணிகள் மோத உள்ளன. இதில் இந்தியாவை ஜிம்பாப்வே வீழ்த்தினால் ஜிம்பாப்வே நபரை திருமணம் செய்வதாக பாகிஸ்தான் நடிகை ட்விட் வெளியிட்டுள்ளார். இதை நெட்டிசன்கள் கலாய்த்து உள்ளனர்.இதில் குரூப் -2 பிரிவில் இடம் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வே அணியுடன் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. இந்தியா, ஜிம்பாப்வே அனிகளுடன் தோல்வி அடைந்துள்ள பாகிஸ்தான் ஒரு வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் பின் தங்கியுள்ளது. இன்று நடைபெற்று வரும் தென் ஆப்பிரிக்க அணியுடன் வெற்றி பெற்றால் மட்டுமே பாகிஸ்தான் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை தக்க வைக்க முடியும்.ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்ததே பாகிஸ்தான் அணி கடும் நெருக்கடியை எதிர்கொண்டதற்கு காரணமாக அமைந்துவிட்டது. இதனால், பாகிஸ்தான் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் வரும் 6 ஆம் தேதி நடைபெற உள்ள போட்டியில் இந்திய அணியை ஜிமாப்வே அணி வீழ்த்த வேண்டும் என்றும் அப்படி வீழ்த்தினால் ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை ஷின்வாரி தனது ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.ட்விட்டரில் படு ஆக்டிவாக இருக்கும் ஷின்வாரி, இந்திய அணி தோல்வி அடைய வேண்டும் என்று தொடர்ந்து தனது விருப்பத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக நடிகை ஷிர்வானி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதில், கிரிக்கெட் ரசிகர்கள் பாகிஸ்தான் நடிகையை டிரோல் செய்தும் வருகின்றனர். இதற்கு முன்னால் பலமுறை ஷிர்வானியின் கணிப்புகள் தவறாக போனதை ரிபோஸ்ட் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். இது பற்றி நெட்டிசன் ஒருவர் வெளியிட்டு இருக்கும் பதிவில், வாழ்க்கை முழுவதும் தனியாக எப்படி வாழப்போகிறீர்கள் என்று நான் உங்களுக்காக வருத்தப்படுவேன்" என்று பதிவிட்டுள்ளார். எப்படியும் ஜிம்பாப்வே அணி தோற்று விடும். எனவே ஜிம்பாப்வேயை சேர்ந்தவரை திருமணம் செய்ய முடியாது என்று கலாய்க்கும் வகையில் இப்படி பதிவிட்டுள்ளார்.
உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் வாங்கியுள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகின்றனர்.இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீல நிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இதன் மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.இந்நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிப்படுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதந்தோறும் 8 டொலர் வசூல் செய்யப்படவுள்ளதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவின் பிரபலமான ராப் பாடகர் ஆவார். விடுதி ஒன்றில் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டிருந்த பொழுது , விளையாட்டு செய்தி தொடர்பில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் இனம் தெரியாத நபரால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்குள் புகுந்த இனந் தெரியாத ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த சம்பவத்தில் ஆறு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்தவர்கள் இருவரும் பெண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட நபர் பின்னர் பொலிசாரினால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை இடம் பெற்றுள்ளது.இதன்போது ஜனாதிபதி மாளிகையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியின் முதல் பெண் பிரதமராக ஜியார்ஜியா மெலோனி பதவியேற்பு:ரோமில் நடைபெற்ற விழாவில் அவருக்கு ஜனாதிபதி Sergio Mattarella பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
எறும்பின் உண்மையாக முகத்தோற்றம் பற்றிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. லிதுவேனியாவைச் சேர்ந்த யுகேனிஜுஸ் கவலியஸ்கஸ் என்ற வனவிலங்கு புகைப்பட கலைஞருக்கு பரிசு பெற்று தந்திருக்கும் இந்த சிறிய உயிரினத்தின் புகைப்படம் மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் அளவுக்கு திகிலூட்டியுள்ளது.சிவந்த கண்கள், நீளமான கூறிய பற்களுடன் கோபப்பார்வை பார்க்கும் இந்த எறும்பு புகைப்படம் நிக்கோன் கேமரா மூலம் ஐந்து மடங்கு ஜும் செய்யப்பட்டு எடுக்கப்பட்டுள்ளது.
அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதாக சென்னை வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (22) வலுப்பெறுவதுடன் ,பின்னர் அது வடதிசையில் நகர்ந்து, மத்திய மேற்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், புயலாக வலுப்பெறும் என்றும் வானிலை நிலையம் குறிப்பிட்டுள்ளது.22.10.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.