அமரர் சிறிஸ்கந்தராசா இராசலெட்சுமி

  • 1 members
  • 1 followers
  • 1657 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
good morning...
  • 3
·
Added a post
ஒரு தெரு நாய் சிவாலய வளாகத்துக்கு அருகே எப்போதுமே திரிந்து கொண்டிருக்கும்,அது அந்த ஊரில் போடப்படும் எச்சில் இலை உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்தும் வந்தது,இப்படியாக வாழ்ந்து வந்த காலத்தில், அந்த ஊரின் சிவாலயத்தில் திருவிழா தொடங்கியது,அந்த ஊரில் அனைவருமே பத்து நாட்களுமே விரதம் இருந்தார்கள்,விரத காலங்களில் சாப்பிட்ட இலைகளை நாய்க்கு போடக்கூடாது என்ற ஒரு நம்பிக்கையில், யார் வீட்டிலுமே எச்சில் இலைகளை தூக்கி வெளியே போடவே இல்லை,நாய்க்கு எச்சில் இலையே கிடைக்காததால், பசி தாங்க முடியாமல், கோயிலின் ஓரத்தில் வந்து படுத்து கிடந்தது,அப்போது அந்த சிவாலயத்தில் இராமாயணம் பற்றி பேச்சாளர் ஒருவர் பிரசங்கம் பண்ணி, இராமேஸ்வர தல மகிமையை விளக்கமாகவே பேசினார்கள்,அதனை அப்போது, அந்த நாயும் காது கொடுத்தே கேட்டதாம் !!ஆஹா !! இராமேஸ்வரத்துக்கு இத்தனை மகிமையா ??எல்லோரும் போகனும்ணு சொல்றாங்களே !!நாமும் தான் இப்படியே எச்சில் இலையை பொறுக்கி தின்றே காலத்தை கழித்து விட முடியுமா என்ன ??போகிற வழிக்கு ஒரு புண்ணியம் சேர்க்க வேண்டாமா ?? என்று எண்ணிய படியே, இன்றிலிருந்து பத்து நாட்களும் விரதமாகவே இருந்து, திருவிழாமுடிந்ததும், கண்டிப்பாக இராமேஸ்வரத்திற்கு நடைபயணமாக போக வேண்டியது தான் என்று முடிவு செய்தது,தினமும் தொடர்ந்து கோயிலில் நடக்கும் பிரசங்கங்களை கேட்கும், நாளடைவில் அதற்கு இராமேஸ்வரத்தின் மீதான பக்தி அளவு கடந்து அதிகமானது,விரதத்தில் இருந்ததால், பசி கொடுத்த வைராக்கியம் வேறு இருப்பதால், திருவிழா முடிந்ததும் இராமேஸ்வரம் போயே தீருவது என்று உறுதியாக இருந்தது,திருவிழா பத்தாம் நாள் முறைப்படி நிறைவாகி கொடியை இறக்கினார்கள்,நாயும் இராமேஸ்வரம் புறப்படத் தயாராகி நடை பயணத்தை தொடங்கியது,முதல் அடி எடுத்த வைத்த பொழுதே, ஒரு வீட்டின் பின் பக்கத்தில் *"பொத்"* என்று ஒரு சத்தம் கேட்டது,திரும்பிப் பார்த்தால்,ஆஹா !! என்ன மணம் ?? என்ன சுவை ?? நல்ல கறி விருந்தாக இருக்கும் போலிருக்கிறதே !!நிறைய வேறு மிச்சம் வைத்து இலையை தூக்கி போட்டிருக்கிறான் புண்ணியவான் !! என்று எச்சில் இலையை தூக்கி போட்டவனை வாழ்த்திய படியே அதில் போய் வாயை வைத்து கொண்ட படியே,நல்ல வேளை இந்நேரம் இராமேஸ்வரம் போயிருந்தால், இந்த கறி விருந்து கிடைத்திருக்குமா ?? என்றே நினைத்து கொண்டதாம் !!இந்த நாய் தான் நமது ஆழ்மனம், நம் மனம் இருக்கிறதே ஆட்டம் போட எதுவும் கிடைக்காத பொழுது, ரொம்ப அடக்கமாகவும், சுவாமி மீது பக்தி பண்ணுவது போலவும், நம்மை போல புண்ணியசாலி யார் இருக்கிறார்கள் ?? என்றும் எண்ணிக் கொண்டு நல்லவன் போலவே கபட வேஷம் போடும்,ஆனால், தப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்ததோ இல்லையோ !? சாமியாவது, பூதமாவது !? அதுக்கெல்லாம் இன்னும் வயசு இருக்குதுய்யா !!இப்பவே உத்ராட்சம் போட்டுகிட்டு, திருநீறு பூசிக்கிட்டு காசி இராமேஸ்வரம்னு போய்ட்டா ??வாழ்க்கையை எப்பத் தான் அனுபவிக்கிறது எனவும் கேட்கும், ஏதாவது கஷ்டம் வந்து விட்டால், உடனே, கோயில் குளம் சாமி ஞாபகம் எல்லாம் அப்போது தான் வரும்,இதுவே வாழ்க்கை சுமூகமாக ஆகிவிட்டால் பழைய படியே ஆட்டம் போடும், இது தான் நம்மில் பெரும்பாலரது செயற்கையான கடவுள் வழிபாடும் !!துன்பம் வரும் போது கடவுளைப் பற்றி நினைப்போம், உருகுவோம், சிக்கலின்றி நன்றாக வாழும் போது, கடவுள் வழிபாட்டுக்கு இன்னும் நமக்குவயது இருக்கிறது என்று நினைப்பதோடு அல்லாமல், இளமையில் சாமி கும்பிடுபவர் களையும் கெடுப்போம் !! கிண்டலடிப்போம் !!மனதை முழுமையாக ஆன்மீகத்தில் செலுத்தி, இந்த பிறவிக்கடலை கடப்போம்.
  • 119
  • 121
தசாவதாரங்களில் தனிச் சிறப்பு கொண்டது நரசிம்ம அவதாரம். இறைவன் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற பேருண்மையை அனுபவபூர்வமாக வெளிப்படுத்திய அவதாரம் இது. அது மட்டுமல்லாமல் தன் பக்தனாகிய பிரகலாதனின் வாக்கை சத்தியமாக்க தன்னை ஒவ்வொரு அணுவிலும் நிலைநிறுத்திக் கொண்ட மகத்தான அவதாரம்.இத்தகைய மகிமை வாய்ந்த நரசிம்மர் பல்வேறு வடிவங்களில் பல்வேறு தலங்களில் கோயில் கொண்டு அருள்கிறார். அவற்றில் ஒன்று, சோளிங்கர். ஒரு ஆண்டில் பதினோரு மாதங்கள் இத்தலத்தில் யோக நிலையிலே யே, கண்மூடி அமர்ந்திருக்கும் இந்த சிங்கபிரான், கார்த்திகை மாதம் மட்டும் கண் திறப்பதாக ஐதீகம். ஆகவே இத்தலத்தில் கார்த்திகை மாதம் முழுக்க திருவிழா கொண்டாடப்படுகிறது. இவருடன் அமிர்தபலவல்லித்தாயார், அருகிலுள்ள சிறிய மலையில் சங்கு, சக்கரபாணியாக யோக நிலையில் அனுமன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.திரேதாயுகத்தில் வாழ்ந்து வந்த இந்த்ரத்யும்னன் என்ற மன்னன், தன் தோள்களில் திருமாலின் சின்னங்களான சங்கு, சக்கர அடையாளங்களோடு பிறந்தவன். எப்போதும் ஹரி நாமத்தை மனதில் இருத்தி வாழ்ந்து வந்தான். தினமும் உறங்குவதற்கு முன், ஹரிநாமம் சொல்வது அவன் வழக்கம். ஒருநாள் அவனறியாமல், ‘ஹர’ என்று உச்சரித்தான். உடனே ஈசன் அவனுக்கு தரிசனம் தந்து, ‘‘மன்னா, நீ கூறிய ஹர நாம ஒலியில் மகிழ்ந்தே நான் உனக்குக் காட்சி தந்தேன்’’ என்று கூறினார். மன்னனுக்கோ ஆனந்தம். ஒரே ஒருமுறை ஹர என்று சொன்னதற்கே ஈசன் தனக்கு தரிசனமளித்துவிட்டாரே! உடனே மகாதேவன், ‘‘நான் வேறு, திருமால் வேறு அல்ல. உனக்கு என்ன வரம் வேண்டும், கேள்’’ என்று கேட்க, தனக்கு மோட்சம் அருளுமாறு இந்த்ரத்யும்னன் வேண்டினான்.ஆனால் ஈசனோ, ‘‘நாராயணன் ஒருவனே மோட்சம் அளிக்க வல்லவன். பிரகலாதனுக்கு அருள் புரிந்த பின், உலகோர் அனைவருக்கும் அருள்புரியத் திருவுளம் கொண்டு கடிகாசலம் என்று விளங்கும் சோளிங்கபுரத்தில் நரசிம்ம மூர்த்தியாய் திருமால் வீற்றிருக்கிறார். அங்கு யோக நிலையில் அருளும் அந்த சிங்கபிரானைச் சரணடைந்தால் உனக்கு மோட்சம் கிட்டும்’’ என்று கூறினார். அதன்படியே இந்த்ரத்யும்னன் நரசிம்மரின் அருள்பெற்று உய்வடைந்தான்.சப்த ரிஷிகளும் வாமதேவர் எனும் முனிவரும் பிரகலாதனுக்குப் பெருமாள் காட்டியருளிய நரசிம்ம திருக்கோலத்தை தாங்களும் தரிசிக்க வேண்டுமென்று ஆவல் கொண்டனர். அதற்காக அவர்கள் சோளிங்க புரம் வந்தடைந்து தவம் செய்தனர். அப்போது கும்போதரர், காலகேயர் போன்ற அரக்கர்களின் அட்டூழியங்கள் தலைவிரித் தாடின. தவம் செய்த முனிவர்களை அவர்கள் துன்புறுத்தினர். அவர்களிடமிருந்து முனிவர்களை காக்க நரசிம்மர், அனுமனிடம் சங்கு, சக்கரங்களைக் கொடுத்து அரக்கர்களை கொல்ல ஆணை யிட்டார். அரக்கர்கள் அழிவுக்குப்பின் சப்த ரிஷிகளும் ஆஞ்சநேயரும் இத்திருத்தலத் தில் நரசிம்மமூர்த்தியின் தரிசனம் பெற்று மகிழ்ந்தனர். நரசிம்மரின் ஆணைப்படி அவர் அருள் புரியும் பெரிய மலையின் அருகே உள்ள சிறிய மலையில் சங்கு சக்கரத்துடன் அமர்ந்து அனுமன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.ஒரு நாழிகை நேரம் இத்தலத்தில் தங்கியிருந்தாலே வீடுபேறு வழங்கும் புண்ணிய தலம் இது. அதனால்தான் கடிகாசலம் என்று பெயர் பெற்றது. இத்திருத்தலத்திற்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். தக்கான்குளம் என்ற புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, யோக நரசிம்மரையும் யோக அனுமனையும் வழிபட்டு நோய் நொடி நீங்கி நலம் பெறுகிறார்கள். இந்த கடிகாசல மலையை தரிசித்தாலேயே பேய், பிசாசு, பில்லி சூன்யம் போன்றவை அண்டாது.பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நாதமுனிகள், திருக்கச்சி நம்பிகள், ராமானுஜர், மணவாளமாமுனிகள் ஆகியோர் இந்த நரஹரியை மங்களாசாஸனம் செய்து மகிழ்ந்துள்ளனர். திருமங்கையாழ்வார் ‘அக்காரக்கனி’ என இந்த நரசிம்ம மூர்த்தியைப் போற்றிப் பாடியுள்ளார். சுவை மிகுந்த கனி போன்றவராம் இந்த நரசிம்மர். அதோடு மட்டுமல்லாமல் அக்காரக்கனி எனும் மூலிகையினால் ஆனவரும் கூட. இந்த புண்ணிய மலை மீது ஏறி வழிபட முடியாதவர்கள் ஒரு நாழிகை நேரம் திருக்கடிகையை மனதால் சிந்தித்தாலே போதும், மோட்சம் சித்திக்கும் என்று அருளியுள்ளார் பிள்ளைப்பெருமாள் ஐயங்கார். திருமாலின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இத்தலம் திகழ்கிறது. காசி, கங்கை, கயா போன்ற புண்ணிய தலங்களுக்குச் சமமாக இத்தலம் போற்றப்படுகிறது.வேலூர் மாவட்டத்தில் உள்ள இவ்வூர் சோளிங்கர் என அழைக்கப்பட்டாலும் இதன் அருகில் 3 கி.மீ. தெற்கில் கொண்டபாளை யம் எனும் சிறு கிராமத்தில்தான் பெரிய மலையும் சிறிய மலையும் உள்ளன. பெரிய மலைக்கோயிலை 1305 படிகள் ஏறித்தான் செல்ல வேண்டும். இந்த மலைக்கு நேர் எதிரில் யோக ஆஞ்சநேயர் அருளும் சிறிய மலை உள்ளது. அனுமன் கோயிலை அடைய 406 படிகள் ஏறவேண்டும். பெரிய மலை அடிவாரத்திலிருந்து ஆலய நுழைவாயில் ராஜகோபுரம் வரை இளைப்பாற்றிக் கொள்ள 7 மண்டபங்கள் உள்ளன. மலையின் நுழைவாயில் 5 நிலைகளும் 7 கலசங்களும் கொண்ட ராஜ கோபுரத்துடனும் நான்குகால் மண்டபத்துடனும் திகழ்கிறது. ஆலயத்துள் நுழைந்ததும் கிழக்கு நோக்கி அமர்ந்த அமிர்தபலவல்லித் தாயாரின் தரிசனம் கிட்டுகிறது. இந்த தாயாருக்கு சுதாவல்லி என்ற பெயரும் உண்டு. மேல் இரு கரங்கள் தாமரை மலர்களை ஏந்தியிருக்க, கீழிரு அபய வரத கரங்கள் காண்போரின் பயம் நீக்கி ஆறுதல் அளிக்கின்றன. இத்தலத்தில் நம் கோரிக்கையை தாயாரிடம் கூறினால் தாயார் அதை நரசிம்மமூர்த்தியிடம் பரிந்துரைப்பாராம். நரசிம்மர், அனுமனிடம் அதை நிறைவேற்றும்படி ஆணையிடுவாராம்.நரசிம்ம மூர்த்தியின் கருவறை விமானம் ஹேமகோடி விமானம். யோக நரசிம்மர் சிம்ம முகம் கொண்டு, கிழக்கு நோக்கி, யோகாசனத்தில் அமர்ந்துள்ளார். நூற்றுக்கணக்கான சாளக்ராமங்களால் ஆன மாலையை அணிந்துள்ளார். யோக பீடத்தில் திருமாலின் தசாவதார காட்சியை தரிசிக்கிறோம். இந்த மூலவருடன், ஆழ்வார்களால் மங்களாசாஸனம் செய்யப்பட்ட மறையாய் விரிந்த விளக்கு, மிக்கான், புக்கான் எனப்படும் உற்சவ மூர்த்திகளும் ஆதிசேஷன், சக்கரத்தாழ்வார், கண்ணன், கருடாழ்வார் போன்ற மூர்த்திகளும், பெருமாளின் எதிர்ப்புறத்தில் சேனை முதலியார், நம்மாழ்வார், ராமானுஜர், சப்தரிஷிகள், கருடன் போன்றோரும் தரிசனம் தருகின்றனர்.வெள்ளிக்கிழமை தோறும் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெறுகிறது. பால், தயிர், தேன், சர்க்கரை, நெய் ஆகியன சேர்த்து பஞ்சாமிர்தமாக்கி அபிஷேகம் செய்து, பிறகு அதுவே பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. கருடனுக்கு எதிரில் உள்ள சாளரத்திலிருந்து பார்த்தால் அனுமன் அருளும் சின்னமலை யை தரிசனம் செய்யலாம். சிறிய மலையில் வீற்றிருக்கும் யோக ஆஞ்சநேயரின் திருக்கண்கள் நேராக பெரிய மலையில் அருளும் நரசிம்மப் பெருமாளின் திருவடிகளை நோக்கியபடி உள்ளனவாம்.நரசிம்மரையும் தாயாரையும் வணங்கிய பிறகு, கீழிறங்கி சின்ன மலையில் அருளும் அனுமனை தரிசிக்கலாம். படிகள் ஏறி, உச்சியிலுள்ள அனுமன் சந்நதியை அடைகிறோம். வாயுகுமாரன் சாந்த வடிவினனாய், யோக நிலையில் நரசிம்மரை நினைத்து தவம் புரியும் திருக்கோலத்தின் அழகு நம் கண்களையும் கருத்தையும் கவர்கிறது. நான்கு திருக்கரங்களுடன், சங்கு, சக்கரம் ஏந்தியிருக்கிறார். ஒரு கரத்தால் ஜபமாலையைப் பற்றியபடி, ஜபம் செய்யும் பாவனையில் தரிசனமளிக்கி றார். அருகிலேயே உற்சவ அனுமன் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். ஞாயிறு தோறும் சிறப்பு அபிஷேகம் கண்டருள்கிறார் இந்த மூர்த்தி. குறிப்பாக கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷமாக வழிபடப்படுகிறார்.அடுத்து ராமர் சந்நதி. இம்மலையில் சீதாபிராட்டியுடன் ராமர் நீராடிய குளம், ராம தீர்த்தம் என்று இன்றும் அழைக்கப்படுகிறது. அரக்கர்களை வதைத்த அனுமன் தன் சக்கரத்தை அதில் நீராட்டியதால் சக்கர தீர்த்தம் என்றும் அனுமத் தீர்த்தம் என்றும் கூட பெயர்கள் உண்டு. உடல் நலம் சரியில்லாதவர்கள், தீய சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தீர்த்தத்தில் நீராடி, அனுமனை நினைத்து வரம் கேட்பதைக் காண முடிகிறது. அதையடுத்து ராமபிரானின் குல ஆராதனை மூர்த்தமாகிய ரங்கநாதர் மூலவராகவும் உற்சவராகவும் காட்சியளிக்கிறார்.மலையிலிருந்து கீழிறங்கி ஊருக்குள் சென்றால், அங்கே பக்தோசிதசுவாமி என்ற உற்சவ நரசிம்மரை தரிசிக்கலாம். ஊரின் நடுவே நீள் சதுர வடிவில் எழிலாய் அமைந்துள்ளது ஆலயம். ராஜ கோபுரத்தைத் தாண்டி ரங்க மண்டபத்தைக் கடந்து உள்ளே சென்றால் பெருமாளின் சந்நதியை அடையலாம். இருபுறங்களிலும் ஜய, விஜயர்கள் காவல் காக்க உபய நாச்சிமார்களுடன் பெருமாள் அருள்கிறார். அனைத்து திருமால் ஆலயங்களிலும் காணப்படும் சடாரி இத்தலத்தில் ஆதிசேஷன் வடிவில் இருப்பது குறிப்பிட வேண்டிய சிறப்பு. வலப்புறத்தில் ஐம்பொன்னாலான கிருஷ்ண விக்ரகத்தையும் மற்றொருபுறம் சிறிய வடிவிலான வரதராஜப் பெருமாளையும் தரிசிக்கிறோம். தொட்டாச்சார்யார் எனும் பக்தர் வருடந்தோறும் காஞ்சி வரதராஜரின் கருட சேவையை தரிசிப்பது வழக்கம். வயது முதிர்ந்த நிலையில் அவரால் காஞ்சிக்குச் செல்ல முடியாதபோது பெருமாளே தக்கான்குளத்தில் அவருக்கு கருட சேவையை காட்டியருளியதாக ஐதீகம். அதை நினைவுறுத்தும் வண்ணம் இங்கு கொலுவிருக்கும் வரதராஜப் பெருமாளை அருளாளர் என்றும் பேரருளாளர் என்றும் அழைக்கின்றனர். கருவறையை வலம் வரும்போது ஆண்டாள் சந்நதியை தரிசிக்கலாம். எதிரில் ஆழ்வார்களும் ஆச்சார்யார்களும் அருள்கின்றனர்.ஆண்டு முழுதும் பல்வேறு விதமான திருவிழாக்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் கொடியேற்றத்திற்கும் கொடியிறக்கத்திற் கும் ஊரில் உள்ள உற்சவர் மலைக் கோயிலுக்கு எழுந்தருள்வது கண்கொள்ளாக் காட்சி. அதேபோல் உற்சவத்தின் ஒன்பது நாட்களிலும் இரு வேளையும், சக்கரத்தாழ் வார் மலையிலிருந்து இறங்கி ஊருக்குள் வலம் வந்து பின் மலை ஏறிச் செல்வது அபூர்வமான நிகழ்ச்சி. சித்ரா பௌர்ணமி அன்று உற்சவர் தக்கான்குளம் எனும் பிரம்ம தீர்த்தத்திற்கு எழுந்தருள்வார். அங்கு ‘எட்டி அப்பம்’ எனும் விசேஷமான நிவேதனம் உற்சவருக்கு படைக்கப்படுகிறது. ஒரு சமயம் தொட்டாச்சார்யார் என்பவர் இவ்வழியாக வந்தபோது பல்லக்கு தூக்கிகள் பெரிதும் பசி, தாகத்தால் வருந்தினார்கள். உடனே ஆச்சார்யார், அங்கு வளர்ந்திருந்த எட்டிமரத்தைத் தன் கைகளால் தொட்டு அதில் பழுத்துள்ள கனிகளை உண்ணச் சொன்னாராம். அந்த நச்சுப் பழம் நரசிம்மனின் திருவருளாலும், ஆச்சார்யன் அன்பாலும் அமுதமாகத் தித்தித்ததாம். அச்சம்பவத்தை நினைவு கூறும் வண்ணம் எட்டி மண்டபத்தில் அப்பத்தை நிவேதிக்கிறார் கள். இதுவே எட்டியப்பம்.சென்னைக்கு அருகே அரக்கோணத்திலிரு ந்து 27 கி.மீ. தொலைவிலும், திருத்தணி ரயில் நிலையத்திலிருந்து 27 கி.மீ. தொலைவிலும் சோளிங்கர் அமைந்துள்ளது. சோளிங்கர் பேருந்து நிலையத்திலிருந்து கொண்டபாளையம், 3 கி.மீ. தொலைவில் உள்ளது.தற்போது மலைக்கு செல்ல ரோப் கார் சேவை உள்ளது.
  • 127
·
Added a news
கல்கரியில் மிருகக்காட்சி சாலையில் மனித தவறினால் இரண்டரை வயதான ஐரா என்னும் பெயருடைய கொரில்லா ஒன்று உயிரிழந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கடந்த 12 ஆம் திகதி இந்த மனித தவறு இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.ஏனைய கொரில்லாக்களுடன் குறித்த கொரில்லாவுக்கு பயிற்சி அளித்த போது ஏற்பட்ட மனித தவறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.குறித்த மிருகக்காட்சி சாலை பணியாளர் ஒருவர் தவறுதலாக கொரில்லாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பகுதியின் பிழையான கதவை மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.இதன் போது குறித்த ஐரா கதவில் சிக்கி படுகாயம் அடைந்து உயிரிழந்துள்ளது.படுகாயம் அடைந்த கொரில்லாவுக்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரெழுத்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் மிருகக்காட்சி சாலை சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. 
  • 138
·
Added article
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ஹாலிவுட் வரை கொடிக்கட்டி பறப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் கடந்த 1995ம் ஆண்டில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில், இவர்களுக்கு கதீஹா, ரஜீமா என்று இரண்டும் மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுடனான திருமண வாழ்க்கையிலிருந்து விடைப்பெறுவதாக சாய்ரா பானு கடந்த செவ்வாய்க்கிழமை அறிவித்தார். அதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் இந்த முடிவு தொடர்பாக வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார். இது நடந்த அடுத்த நாளே, ஏ ஆர் ரஹ்மானிடம் பல ஆண்டுகளாக துணை பாடகியாக பணியாற்றி வரும் மோஹினி ரே தனது கணவரை பிரிவதாக அறிவித்தார்.அடுத்தடுத்த அறிவிப்புகள் சினி உலகில் பரபரப்பை ஏற்படுத்திய அதேசமயம், ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திற்கு மோஹினி ரே தான் காரணம் என சமூக வலைதளங்களில் பேச்சும் எழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மானின் வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான், சாய்ரா பானு இருவருக்குமான வழக்கறிஞரான அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் உண்மையில்லை என்றும், இருவரும் தாங்களாகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இது ஒரு இணக்கமான விவாகரத்து என்றும் கூறியுள்ளார்.
  • 141
·
Added article
கடந்த 2004 ஆம் ஆண்டு தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா திருமணம் நடந்த நிலையில், இருவரும் பிரிவதாக முடிவெடுத்து, நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனு மீது ஏற்கனவே மூன்று முறை விசாரணை நடைபெற்ற நிலையில், மூன்று முறையும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இருவரும் நேரில் ஆஜர் ஆகினர். நீதிபதி அவர்களிடம் சில கேள்விகள் கேட்டதாகவும், இருவரும் தாங்கள் பிரிவதில் உறுதியாக இருக்கிறோம் என்று நீதிபதியிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, நவம்பர் 27ஆம் தேதி தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கு மீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
  • 149
·
Added a news
இலங்கையின் 10வது பாராளுமன்றம் ஜனாதிபதி அனுரகுமார தலமையில் பெருமளவான புதிய உறுப்பினர்களுடன் ஆரம்பமானது. நாடாளுமன்றம் சென்ற மருத்துவர் அர்ச்சுனா அங்கு எதிர்கட்சி தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததால் குழப்ப நிலை ஏற்பட்டது. எந்தவொரு ஆசனத்திலும் அமரலாம் என்ற விதிமுறை நடைமுறையில் இருந்தாலும், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆசனங்களில் அமர முடியாது என்பது மரபு. அர்ச்சுனா அதிகாரிகளுடன் தர்க்கத்தில் ஈடுபட்ட பின்னர், ஆசனத்தை மாற்றிக் கொண்டார்.
  • 153
·
Added a news
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் ரீ.என் சூரியராஜா தெரிவித்தார்.இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நல்லூரில் மின்னல் தாக்கம் காரணமாக 1 குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெல்லிப்பழை சங்கானை, காரைநகர் சண்டிலிப்பாய், கோப்பாய், மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
  • 192
·
Added a news
........அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கையின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது.இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி ஜனவரி 2 ஆம் திகதி வியாழன் அன்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
  • 194
·
Added a news
......அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றுக் காலை (20) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், அலுவலர்கள் பொதுமக்களை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில் செயற்படக்கூடாது என்றும், அரச அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வாறு செய்து முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள். அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும் வினைத்திறனாக பணியாற்றவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையான அவர்களின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு மற்றும் 10 சதவீதக் கழிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் விவசாய உற்பத்திப் பொருள்களை சேகரிக்கக் கூடிய மையங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயுமாறும் பணித்தார். அத்துடன் சந்தைகளில் பின்பற்றப்படும் கழிவு நடைமுறை தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.உள்ளூராட்சி அமைச்சின் கீழான வீடமைப்புத் திட்டத்தில், மீளக்குடியமரும் மக்கள், இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் மக்கள், விதவைகளுக்கே முன்னுரிமையளிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார். ஆளணிப்பற்றாக்குறை தொடர்பில் திணைக்களத் தலைவர்களால் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் மதிப்பீட்டாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் 75 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் 17, 138 குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பூச்சியமாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் இங்கு குறிப்பிட்டார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய தலைவர் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், சட்டத்துக்கு முரணான வகையில் - தவறாகச் செயற்படும் பேருந்துகளின் உரிமங்களை உடனடியான இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பணித்தார்.இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களினதும் உதவி ஆணையாளர்கள் மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்
  • 200
·
Added a post
அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை எடுத்து, குரங்கின் தலையில் ஒரு அடி அடித்து விட்டு, “வந்திருப்பவர்களுக்கு இலை போடு” என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது.துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கின் தலையில் அடித்து விட்டு “சாப்பாடு எடுத்து பரிமாறு” என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது. அதன்பிறகும் அந்த குரங்கின் தலையில் ஒரு அடி வைத்தார், துறவி.இப்போது வியாபாரிக்கு வருத்தமாக இருந்தது. துறவியிடம், “சுவாமி.. நீங்கள் சொல்வதை எல்லாம் அந்தக் குரங்கு செய்துகொண்டுதானே இருக்கிறது. பிறகு எதற்காக அதை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.ஆனால் அதற்கு துறவி எந்த பதிலும் சொல்லவில்லை. சற்றே புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த சிறிய கம்பை, தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒளித்து வைத்தார்.சற்று நேரம் அமைதியாக இருந்த குரங்கு, இப்போது அங்கும் இங்கும் தாவியது, வியாபாரி சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையில், தன்னுடைய வாலை விட்டு ஆட்டியது. வியாபாரியின் தோளில் அமர்ந்து கொண்டு அவரது காதைப் பிடித்து திருகியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை இரண்டாக கிழித்துப் போட்டது.அதன் சேட்டையைப் பொறுக்க முடியாத வியாபாரி, “சுவாமி... இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை. அடி போடுங்கள்” என்றார்.உடனே துறவி, தான் மறைத்து வைத்திருந்த கம்பை எடுத்து குரங்கின் தலையில் அடித்தார். அதுபோய் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து கொண்டது.இப்போது துறவி சொன்னார். “இந்தக் குரங்கைப் போலத்தான் மனித மனங்களும். ‘நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே’ என்று விட்டு விடக் கூடாது. ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும்” என்றார் துறவி. அதைக்கேட்டு வியாபாரி மனம் தெளிந்து புறப்பட்டார்...
  • 240
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 6ஆம் தேதி  மேஷம் -ராசி: வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசால் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம் -ராசி: தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்  கடகம் -ராசி: இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் சிம்மம் -ராசி:வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கன்னி -ராசி: பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம் -ராசி: உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். கனிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசு -ராசி: புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகரம் -ராசி:சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் கும்பம் –ராசி:சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆதரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மீனம் -ராசி: வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 259
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை 21.11.2024சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.51 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று இரவு 08.38 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 925
Good Morning...
  • 927
·
Added article
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இருவருக்கும் ஏன் விவாகரத்து என்பது குறித்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக சொல்லிவருகின்றனர். இருந்தாலும் ரஹ்மான் வீட்டில் இப்படி ஒரு புயலா என்ற அதிர்ச்சி ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 29 வருடங்கள் ரஹ்மானும், சாய்ராவும் இணைந்து வாழ்ந்துவந்த சூழலில் திடீரென நேற்று இரவு சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக’ தெரிவித்திருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில்; சாய்ரா அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் ரஹ்மானும் அந்த விவாகரத்தை உறுதி செய்தார்.
  • 1088
·
Added a post
மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்திருக்கும் இந்த பித்தப்பை உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் ஒரு தனி அறை தான் இந்த பித்தப்பை. நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கும் நிலையில் அந்த அமிலம் பலவகை பொருட்களால் ஆனது. கொழுப்பு, பித்த, உப்பு ஆகியவை கலந்து இருக்கும் நிலையில், அதை குடல் வழியாக நம் உணவோடு பித்தப்பை சேர்த்து விடும்.உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உருவாவதால் பித்தப்பை காலியாக இல்லாமல் கல் சேர்ந்து விடும். இதனை குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.பித்தப்பை கல்லை அகற்றுவதற்கு ஆப்பிள் ஜூஸ் அல்லது ஆப்பிள்களை சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலக்கி குடித்தால் பித்த குழாய் வழியாக கற்கள் வெளியேறிவிடும்.  
  • 1092
·
Added a news
கனடாவில் இருந்து குறிப்பிடத்தக்களவு குடியேறிகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கனடாவில் குடியேறும் நபர்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 வீதமானவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் ஐந்தாண்டு காலப்பகுதியிலேயே கனடாவை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய குடி வரவு நிறுவகம் மற்றும் கனடிய பேரவையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • 1101
·
Added a news
 இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும் அதிகாரத்திற்கு வராது என்று கூறியுள்ளார்.பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது. பதற்றம் உச்சம் எட்டும்போது அது உயிர் பலிகளை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து.போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது. இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 45,000 பேர் பாலஸ்தீனத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் போர் நிறுத்தப்படாமல் தொடர்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார்.காசாவில் பேட்டியளித்த நெதன்யாகு, "ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் இருக்கின்றனர். போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
  • 1107
·
Added a news
‛‛நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் உருக்கமாக நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை கஸ்தூரியிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி எழும்பூர் போலீசார் சம்மன் வழங்க சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.இதையடுத்து சம்மனை வீட்டில் ஒட்டிய போலீசார், கஸ்தூரியை தேட தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னை எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர். ஹைதராபாத்தில் கஸ்தூரியை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.நீதிபதி ரகுபதி ராஜா முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வரும் 29ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நடிகை கஸ்தூரி நீதிபதியிடம் சொந்த ஜாமீனில் விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தார்.முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க.. நான் சிங்கிள் மதர் என்று கூறி வாதம் வைத்து இருந்தார் கஸ்தூரி. இருப்பினும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. ஏற்கனவே நடிகை கஸ்தூரி சார்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
  • 1111
·
Added a news
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகின்றது.அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கொளை விண்ணில் ஏவியுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்..
  • 1113
முருங்கை ஆரோக்கிய பாடல்கள்
  • 1107
·
Added a news
யாழ் பண்ணை கடற்பரப்பில்
  • 1206
·
Added a news
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • 1212
·
Added a news
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றமையானது, தமிழ் மக்கள் புதிய எதிர்காலம் ஒன்றை எதிர்பார்ப்பதைக் காட்டுகிறது. = அதனை நாங்கள் வரவேற்கின்றோம். சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.  இது நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். சீனா இலங்கையின் நீண்ட கால நண்பனாகும்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை மக்களின் ஆணையை சீனா மதிக்கிறது. அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறிய விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.  இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய அண்டைய நாடுகளாகும். அவரது விஜயத்தினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்த முடியும்.  புதிய அபிவிருத்திகளைக் காண்பதற்கு நாம் ஆர்வத்துடன் உள்ளோம். அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் சீனாவுக்கும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம். பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சீனா இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாகும் என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்000
  • 1214
·
Added a news
பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது.1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பு - கோட்டையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த பயணி ஒருவரிடம் கப்பம் பெற்ற சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியிருந்தது.இந்நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 1218
·
Added a news
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளது.இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது.போர்த்துகல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் நாளை இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.000
  • 1220
·
Added a news
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இது எதிர்வரும் 25 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் அதேவேளை 26 ஆம் திகதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையின் படி இதன் நகர்வு பாதை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து, பின்னர் வடக்கு மாகாணத்தை அண்மித்து (தற்போதுள்ள நிலையில் இது கரையைக் கடக்கும் போது இதன் உள் வளையத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும், வெளிவளையத்துக்குள், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களும் அடங்குகின்றன) தமிழ்நாட்டின் கடலூர் புதுச்சேரிக்கிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26 மற்றும் 27 ஆம் திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். இதன் காரணமாக எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும். எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது. எனத் தெரிவித்தார்.00
  • 1220