Added a news
டொராண்டோ நகரத்தில் ஆபத்தான நாய்கள் தொடர்பான சட்டங்களை மேலும் கடுமையாக்கும் ஒரு புதிய திட்டம் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சி குழுவின் கூட்டத்தில் பரிசீலிக்கப்பட உள்ளது.கடந்த நவம்பர் மாதம் டோரண்டோ-டான்ஃபோர்த் வார்டின் கவுன்சிலர் பௌலா ஃப்ளெச்சர் இந்த மாற்றங்கள் குறித்த முன்மொழிவை சமர்ப்பித்திருந்தார். ஆபத்தான நாய்கள் வசிக்கும் வீடுகளின் கதவுகளில் அவை இருப்பதைப் பற்றிய எச்சரிக்கை பலகை இடுதல், மற்றும் அந்த நாய்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கிய ஆன்லைன் பதிவு அமைப்பை உருவாக்குதல் ஆகியவை இந்த உத்தேச சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றங்களை சமர்ப்பிப்பதோடு, கண்டோ குடியிருப்புகளில் உள்ள ஆபத்தான நாய்களின் உரிமையாளர்களுக்கும், அந்த கட்டடங்களை நிர்வகிக்கும் நிறுவனங்களுக்கும் இவை குறித்த தகவல்களை நகரம் கடிதமாக அனுப்ப வேண்டும் எனவும் பௌலா ஃப்ளெச்சர் வலியுறுத்த உள்ளார்.“நகர காவல் அதிகாரிகள் அந்த கட்டிடங்களுக்கு சென்று, எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளதா என நேரில் சரிபார்ப்பார்கள்,” என்றும் ஃப்ளெச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Added article
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்து தயாராகியுள்ள படம் குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். குட் பேட் அக்லியின் ஃபர்ஸ்ட் சிங்கிள், ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் தியேட்டர் சென்று வைப் செய்ய அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து ரசிகர்களும் தயாராகி வருகின்றனர். தியேட்டர்களில் அஜித் ரசிகர்கள் பேனர், கட் அவுட் வைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.ஏப்ரல் 10ம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பார்க்கும் வகையில் படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 19 நிமிடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. படம் முழுவதும் ஆக்ஷன் என்பதால் 2+ மணி நேரங்கள் தியேட்டரே அதிரப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Added a video
இந்தியாவில் - தமிழ்நாட்டில் - திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் திருக்கோவில், ஆழித்தேரோட்டம் 7.4.2025 அன்று வெகு கோலாகலத்துடன் நடந்தது. உங்களின் பார்வைக்கு தேரோட்டத்தின் சில காட்சிகள்....
Added a post
ஒரு காலத்தில் ஹிந்து ராஜ்யமாக இருந்த இந்தோனேசியாவில், முஸ்லிம்களின் படையெடுப்பிற்குப் பிறகு பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களாக மாற்றப்பட்டனர். இஸ்லாமியர்கள் மஜாபஹிட் (Majapahit ) என்ற கடைசி ஹிந்து மன்னரை வீழ்த்திய பிறகு ஹிந்து மதத்தை விட்டு மாறாமல் இருந்த மக்கள் பாலிக்கு குடிபெயர்ந்தனர்.பாலியை பற்றிய சுவாரசியமான தகவல்கள்.1. இங்கே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் ஒரு நாள் மௌன விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. Nyepi day என்று சொல்கிறார்கள். 2013ல் மார்ச் 12ம் தேதி இந்த மௌன தினம் வருகிறது. ஹிந்துகளின் பண்டிகை போன்ற அந்த நாளில் இந்தோனேசியா முழுவதும் விடுமுறை அளிக்கப்படுகிறது. காலை 6 மணி முதல், மாலை 6 மணி வரை எந்தப் போக்குவரத்தும் இருக்காது. பன்னாட்டு விமான நிலையமான Denpasar (bali) விமான நிலையம் கூட மூடப்பட்டு இருக்கும். யாரும் பேசிக்கொள்ள மாட்டார்கள். வீட்டில் இருந்தபடியே தியானம் செய்வார்கள்.2. பாலியில் உள்ள ஹிந்து கலாச்சாரம் இந்திய ரிஷிகளிடமிருந்து வந்தது தான். பாலி பள்ளிகளில் இன்றும் கூட ரிஷிகளை பற்றிய பாடங்கள் இருக்கின்றன. புராணங்களில் வரும் மார்கண்டேய, அகஸ்திய, பரத்வாஜ ரிஷிகளைப் பற்றி இந்தியாவில் யாருக்கும் தெரியாத நிலையில், இந்த ரிஷிகளைப் பற்றி பாலி குழந்தைகள் கூட, தெரிந்து வைத்து இருக்கிறார்கள்.3. பாலியில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தேசிய உடை 'வேஷ்டி' தான். எந்த ஒரு பாலி கோவிலுக்கும் வேஷ்டி அணியாமல் ஆணோ, பெண்ணோ உள்ளே செல்ல முடியாது. இந்தியாவில் கூட சில கோவில்களில்தான் பாரம்பரிய உடை கட்டாயமாக உள்ளது (குருவாயூர் போன்ற). ஆனால் பாலியில் அனைத்து கோவில்களிலும் நமது உடை அணிந்து தான் செல்ல வேண்டும்.4. பாலியின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு ரிஷிகள் உருவாகிய tri-hita-karana என்ற கோட்பாட்டின் படி தான் அமைந்துள்ளது. அதைத்தான் அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கும் சொல்லிக்கொடுக்கிறார்கள். Parahyangan - Pawongan - Palemahan என்று பொருள்படும். tri-hita-karana என்பது சமஸ்கிருதம்.5. Trikala Sandhya என்பது சூரிய நமஸ்காரம். அனைத்து பாலி பள்ளிகளிலும் கட்டயாமாக மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்கிறார்கள். அதே போல மூன்று வேளையும் காயத்ரி மந்திரத்தை அவர்கள் பள்ளியில் சொல்லவேண்டும். பொதுவாக பாலி ரேடியோவில் மூன்று வேளை சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டிய நேரத்தில் அதை ஒலிபரப்புவார்கள்.6. பாலி கோவில் பூசாரிகளின் சம்பளத்தை இந்தோனேசியா அரசாங்கமே கொடுக்கிறது. முஸ்லிம் மத நாடான இந்தோனேசியாவில் அனைத்து மத கோவில் பூசாரிகளின் சம்பளத்தை அரசே கொடுக்கிறது.7. இந்தோனேசிய நாட்டின் மூதாதையர்கள் அனைவரும் ஹிந்துக்களே, அதனால் அவர்களின் பண்பாடுகளில் இந்திய கலாசாரமே அதிகம் கலந்துள்ளது.8. உலகில் அரிசி விளைவிக்கும் நாடுகளில் இந்தோனேசியா முக்கிய இடம் வகிக்கிறது, பாலி தீவு முழுவதும் அரிசி வயல்கள் தான் இருக்கின்றது. பாலி மக்கள் விளைந்த அரிசியை முதலில் ஸ்ரீ தேவி, பூதேவி (Shri Devi and Bhu Devi ) ஆகிய தெய்வங்களுக்கு தான் படைக்கிறார்கள். அனைத்து வயல்களிலும் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் கோவில் இருக்கும், விவசாயிகள் இந்த இரு தெய்வங்களை வணங்கிய பிறகு தான் விவசாய தொழிலுக்கு செல்வார்கள். 9ஆவது நூற்றாண்டிலேயே விவசாய மற்றும் நீர்பாசன விதிமுறைகளை ஹிந்து பெரியோர்கள் கற்றுகொடுத்து இருக்கிறார்கள். அதற்க்கு Subak System என்று பெயர். இங்கே நீர்ப் பாசனம் முழுவதும் கோவில் பூசாரிகளின் கட்டுப்பாட்டில் தான் இருக்கும். உலக வங்கியே Subak System பின் பற்றுமாறு மற்ற நாட்டினருக்கு அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிட தக்கது. இந்தியர்கள் கொண்டு வந்த இந்த விஞ்ஞானம் இன்று இந்தியாவில் இல்லை.9. பாலி ஹிந்துக்கள் பூஜை செய்யும் பொழுது பிரிண்ட் செய்யப்பட்ட புத்தகங்களை வாசிப்பது இல்லை. இன்றும் கூட அவர்கள் கையால் எழுதப்பட்ட ஓலைச் சுவடியையே (Lontar) பயன்படுத்துகிறார்கள். ராமாயணம் அனைவருக்கும் தெரிந்து இருக்கும்.ராமாயண ஓலைச்சுவடியை நல்ல நாட்களில் எடுத்து வரும் திருவிழா நடைபெறும்.10. அனைத்து திருவிழாக்களிலும் பாலி நடனம் ஆடுவார்கள், அதில் பெரும்பாலும் இராமாயண இதிகாசங்களைக் கதைகளாக சொல்வார்கள். ஹிந்துக்களின் சொர்க்க பூமி பாலி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. உலகின் அழகிய தீவுகளில் பாலி முக்கிய இடம் வகிக்கிறது. அழகிய இடங்கள், அமைதியான வாழ்க்கை முறை, பாரம்பரியமிக்க ஹிந்து கலாச்சாரம், நடனம், இசை என்று இந்த தீவு உலக சுற்றுலா பயணிகளை அதிகம் கவருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.
Added a post
கோயம்புத்தூரில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது "மேலச்சிதம்பரம்" என்று அழைக்கப்படும் பேரூர்_பட்டீஸ்வரர்_ஆலயம்.இங்கு "நடராஜ பெருமான்" ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்ததாக செவிவழிச் செய்தியும் உண்டு.இங்கு ஐந்து அதிசயங்கள் இன்றும் தொடர்கிறது.🌹இறவாத பனை"🌹பிறவாத புளி,"🌹புழுக்காத சாணம்,"🌹எலும்பு கல்லாவது,"🌹வலதுகாது மேல்நோக்கிய நிலையில் மரணிப்பது." இதுதான் அந்த ஐந்து அதிசயங்கள்....!!"🌹இறவாத பனை...!!பல ஆண்டுகாலமாக என்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் இன்றும்நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாதாம்.இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால், தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார்கள்.பிறவாத புளி.. இங்குள்ள புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்பதேயில்லையாம். விதைகளை மீண்டும் முளைக்க வைப்பதற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் முயற்சி செய்தும் முடியவில்லை.புழுக்காத_சாணம்..இந்த ஆலயம் அமைந்துள்ள "பேரூர்"எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின்"சாணம் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்கள் உண்டாவதே இல்லையாம்....எலும்புகள் கல்லாவது...!!"மனித எலும்புகள்" கல்லாவது. இந்த எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இறந்த மனித உடலை எரித்தப் பிறகு மிச்சமாகும் எலும்புகளை இங்குள்ள நொய்யால் ஆற்றில் விடுவார்கள். ஆற்றில் விடப்படுகிற"எலும்புகள்" சிறிது காலத்திற்குள்"கற்களாக உருமாறி" கண்டெடுக்கப்படுகிறதாம்.ஐந்தாவதாக "பேரூரில்" மரணமடையும் மனிதன் முதல் அனைத்து உயிரினங்களும் இறக்கும் தருவாயில் தமது "வலது காதை" மேல் நோக்கி வைத்தபடி மரணமடையும் அதிசயத்தை இன்றும் நடத்திக் கொண்டிருக்கிறார் பிறவா வரமளிக்கும் "பட்டீஸ்வரர்"....நற்றுணையாவது அண்ணாமலையாரே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .
Added a news
இந்தியா, சீனா, கனடா உள்ளிட்ட ஒரு சில நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், நேற்று பங்குச் சந்தை மிகப்பெரிய அளவில் சரிந்தது. ஆனால் இன்று இந்தியாவில் பங்குச் சந்தைகள் எழுச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய பங்குச் சந்தை, ஜப்பான் பங்குச் சந்தை, ஹாங்காங் பங்குச் சந்தை ஆகியவை இன்று காலை முதல் எழுச்சியுடன் விற்பனையாகி வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய பங்குச் சந்தை இன்னும் வீழ்ச்சியிலிருந்து எழவில்லை. லண்டன் மற்றும் பாரீஸ் பங்குச் சந்தைகள் மிக மோசமாக சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், அமெரிக்க பங்குச் சந்தையும் மிகவும் மோசமான சூழ்நிலையில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வரி விதிப்பு முறையை திரும்ப பெறத் திட்டவட்டமாக மறுத்துள்ளதாகவும், இதனால் வர்த்தக போர் நீடித்தே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. "சில நேரங்களில் நோய்களை கட்டுப்படுத்த கசப்பான மருந்தை உட்கொள்ள வேண்டியிருக்கும்; அதுபோலவே இந்த பங்குச் சந்தை நிலவரமும் என்று கூறிய டிரம்ப் கூடுதல் வரி அவசியம்" என தெரிவித்ததாகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Added a news
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்யா பிரதமர் புதின் ஆகிய இருவரும் எனக்கு ரொம்ப நெருக்கம் என இன்று செய்தியாளர் சந்திப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது."நீங்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பது போல் தெரிகிறது" என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டபோது, "நியாயமாக பார்த்தால் நான் ட்ரம்ப் கூட நெருக்கமாக இருக்கிறேன். அவருடன்தான் தினமும் பேசுகிறேன். நீங்கள் அதை யாரும் சொல்லவில்லை. அது மட்டும் இல்ல; ரஷ்யா அதிபர் புதின் கூட எனக்கு ரொம்ப நெருக்கம் தான்" என்று கூறினார். அவரது இந்த பதில் கலகலப்பை ஏற்படுத்தியது.மேலும், "நானும் அண்ணாமலையும் அண்ணன்-தம்பி போல் பழகி வருகிறோம். திமுகவை இருவருமே எதிர்க்கிறோம் என்று தெரிவித்தார்."வரும் தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோர்களா?" என்று கேட்டபோது, "இன்னும் ஒரு ஆறு மாதம் இருக்கிறது தேர்தலுக்கு. கொஞ்சம் பொறுத்திருங்கள்; விரைவில் பதில் அளிக்கிறேன்" என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி மாற வேண்டும் என்பதை இந்த மண்ணின் ஒவ்வொரு குடிமகனும் நினைக்க வேண்டும். கட்சிகள் கூடி கூட்டணி சேர்ந்து மாற்றத்தை உருவாக்கி விடுவார்கள் என்று நினைக்கக் கூடாது என்று சீமான் கூறினார்.
Added a news
சர்வதேச தொழில் சந்தையில் காணப்படும் போட்டி நிலைக்கு ஏற்ப யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர் யுவதிகளின் தொழில் புலமைத் தரங்களை வலுப்படுத்தி சான்றிதழ் வழங்கும் நோக்கில் இலங்கையின் தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd நிறுவனம் புதிய நடவடிக்கை ஒன்றை முன்னெடுக்க களம் இறங்கியுள்ளதாக அதன் நிர்வாக அதிகாரிகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.யாழ் ஊடக அமையத்தல் ஊடக சந்திப்பொன்றை நேற்றையதினம் முன்னெடுத்த குறித்த நிர்வாகத்தின் அதிகாரிகள் குழு இவ்வாறு தெரிவித்திருந்ததுடன் இவ்விடயம் தொடர்பில் மேலும் கூறுகையில் - இலங்கையில் ஏற்கனவே பயிற்சி பெற்று இளைஞர்களின் தொழில் நிபுணத்தவ தரத்தை உறுதி செய்யும் நிறுவனங்கள் இரண்டு இருக்கின்றன. ஆனாலும் அவற்றினூடாக பயிற்சி பெற்று வெளியேறும் இளைஞர்களிடம் அந்த தொழிலின் நிபுணத்துவம் உலக சந்தையின் கேள்விக்கேற்ப போதுமானதாக இல்லாத நிலை காணப்படுகின்றது.இதனால் உலக நாடகளுக்கு இலங்கையில் இருந்து செல்லும் தொழிலாளர்கள் அந்நாடுகள் எதிர்பார்க்கும் திறமைகளை வெளிக்கொணரும் அற்றல் குறைந்தவர்களாக இருக்கும் சூழல் உருவாகின்றது. இதனால் உலக நாடுகள் இலங்கையின் தொழிலாளர்களை தமது நாடுகளுக்கு அழைப்பதை நிறுத்தும் நிலையும் காணப்படுகின்றது.இந்நிலையில்தான் குறித்த தொழில் பயிற்சி தொழில் வாய்ப்பு வழங்கும் நிறுவனமான ISD international (pvt) Ltd நிறுவனம் இலவசமாக உலக நாடுகள் எதிர்பார்க்கும் கேள்விக்கேற்ற தொழில் வல்லுநர்களை அடையாளப்படுத்தி பயிற்சிகளை இலவசமாக கொடுப்பதற்கான முயற்சியை எடுத்துள்ளது. ஆனாலும் இந்த நிறுவனம் ஒரு வெளிநாட்டு தொழில் வாய்ப்ப முகவர் நிறுவனமாக ஒருபோதும் செயற்படாது. ஆனால் இளைஞரகளின் தொழில் தரத்தை வலுப்படுத்தும் உந்துசக்தியாகவே இருக்கும்.அதனடிப்படையில் எமது இந்த திட்டத்தின் கீழ் இளைஞர்களை தொழில் நேர்சி உடையவர்களாக்கல், அதற்கான சான்றிதழ்களை வழங்கல், அதற்கான சலுகைகளை பெற்றுக்கொடுத்தல், திட்டவரைபுகளை உருவாக்க உதவிசெய்தல் போற்ற முயற்சிகளை முன்னெடுக்கவுள்ளது.குறிப்பாக தற்போது உலக நாடுகளில் அதிக கேள்வியாக உள்ள Welding, Hospitality, Construction, Heavy Equipment operation, Healthcare, Germent Industry, Pipe Fitting, Cleaning Services போன்ற தொழில் துறைகளில் இலங்கையின் இளைஞர்களை தேர்ச்சியாளர்களாக்கும் பயிற்சிகளை வழங்கி அதாற்கான சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.இந்த திட்டடத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர்கள் தம்மை ஈடுபடுத்தி நன்மைகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Added a news
இந்தோனேசியாவின் மேற்கு ஆச்சே மாகாணத்தில் இன்று (08) காலை 5.9 மெக்னிடியூட் அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வானது ஆரம்பத்தில் மெக்னிடியூட் அளவில் 6.2 ஆக பதிவாகியிருந்தது, பின்னர் அது திருத்தப்பட்டது. கடல் மட்டத்திலிருந்து 30 கிலோமீட்டர் கீழே, சிமியூலு ரீஜென்சியில் உள்ள சினாபுங் நகரத்திலிருந்து தென்கிழக்கே 62 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 2. 48 அளவில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டது. இதுவரை சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.000
Added a news
அமெரிக்கப் பொருட்களுக்குச் சீனாவினால் விதிக்கப்பட்ட வரி நீக்கப்படாத பட்சத்தில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மேலதிகமாக 50 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அமெரிக்க ஜனாதிபதி, ஏனைய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய வரிகளை நீக்குவது குறித்து தாம் பரிசீலிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். புதிய வரி விதிப்பிற்குப் பின்னர் பல்வேறு நாடுகள் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு முன்வந்துள்ள நிலையில், சீனா அமெரிக்கப் பொருட்களுக்கு விதித்த வரியை நீக்காவிட்டால் சீன பொருட்களுக்கு மேலதிக வரி விதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் கடந்த 5 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் 10 சதவீத அடிப்படை வரி விதிக்கப்பட்டது. அத்துடன், 50 இற்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 40 சதவீதத்துக்கும் அதிக பரஸ்பர வரியும் விதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20 சதவீத வரியை விதிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்திருந்த நிலையில், தற்போது நாளை முதல் அமுலாகும் வகையில் 34 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 34 சதவீத வரியை விதித்தது.இந்தநிலையில், டொனால்ட் ட்ரம்பின் புதிய அறிவிப்பு அமுலாகுமாக இருந்தால், சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 104 சதவீத வரி அறவிடப்படும் எனச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.000
Added a news
இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 12 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சார்பில் விராட் கோலி 67 ஓட்டங்களையும் ரஜத் படிதார் 64 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தனர். தொடர்ந்து 222 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியடைந்தது.000
Added a news
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் நிறைவடைந்து, தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பணிப்பாளர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.மேலும், அனைத்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளும் தற்போது அச்சிடப்பட்டு வருவதாகவும், 10 மாவட்டங்களுக்கான அனைத்து வாக்குச் சீட்டுகளும் அச்சிடும் பணி ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டவுடன் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அச்சக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.அதன்படி, ஏப்ரல் 28 ஆம் திகதிக்குள் குறித்த வாக்குச் சீட்டுகளை அச்சிட்டு விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
Added a news
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள பல பங்குச் சந்தைகள் பாரிய சரிவைச் சந்தித்துள்ளன.மேலும் ஆசியாவில் உள்ள பல பங்குச் சந்தைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தற்போதைய சூழ்நிலையில், இலங்கையின் ஒரே பங்குச் சந்தையான கொழும்பு பங்குச் சந்தையும், ஜனாதிபதி டிரம்பின் முடிவால் பாதிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 வர்த்தக நாட்களுக்கு பாரிய சரிவை சந்தித்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் திகதி வர்த்தக முடிவில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 16,007.44 சுட்டெண்களாக பதிவாகியிருந்தது.இது நேற்றையதினம் 14,660.45 புள்ளிகளாக பாரிய சரிவைப் பதிவு செய்தது. இந்த 3 வர்த்தக நாட்களில் மட்டும், கொழும்பு பங்குச் சந்தை 1,346.99 புள்ளிகள் அல்லது 8.41 சதவீதம் சரிந்துள்ளது.இதற்கிடையில், ஏப்ரல் 2 ஆம் திகதி நிலவரத்திற்கமைய, 5,688.56 பில்லியன் ரூபாயாக பதிவாகிய கொழும்பு பங்குச் சந்தை, நேற்று வரையில் 5,253.18 பில்லியனாக குறைந்துள்ளது.இந்த 3 நாட்களில் மட்டும் 435.37 பில்லியன் ரூபா அல்லது 43,537 கோடி ரூபாய் கொழும்பு பங்குச் சந்தைக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றையதினம் மட்டும் பங்குச் சந்தைக்கு 227 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.இதுவொரு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும் அளவுக்கு பாதிப்படைந்துள்ளதாக, பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Added a news
உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 06 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் உள்ளுராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய 89 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மேலும், இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் குறித்த ஒரு வன்முறை சம்பவம் பதிவாகியுள்ளதாகவும் குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.அத்துடன் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப் பெற்றுள்ளன எனவும்,அதனடிப்படையில், 20 ஆம் திகதியிருந்து 6 ஆம் திகதி வரை 801 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் 625 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 176 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a post
மேஷம்ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம்எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனை தீரும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். இன்சொல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மிதுனம்முதலீடுகள் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தியான பயிற்சிகளை செய்வதால் மனசங்கடம் குறையும். மூத்த சகோதர்கள் வழியில் அனுகூலம் ஏற்படும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பணிகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். மனை நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். வெளியூர் தொடர்புகள் மூலம் மேன்மை ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம்குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளில் விவேகம் வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழல் உண்டாகும். சுபமுயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சிறு சிறு விமர்சன கருத்துக்கள் ஏற்பட்டு நீங்கும். கூட்டாளிகளுடன் விட்டுக்கொடுத்து செல்லவும். சலனம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னிதேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். இடம் மாற்றம் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் துலாம்வரவுகளால் சேமிப்புகள் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சமூகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். இணையம் சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு விருச்சிகம்தாயின் ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை நினைத்த விதத்தில் இருக்கும். அருகிலிருப்பவர்களை அனுசரித்து செல்லவும். நண்பர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கல்களை சரிசெய்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு தனுசுவெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மனை விற்பனையில் சற்று நிதானத்தோடு செயல்படவும். சிலரின் மறைமுகமான ஆதரவுகளால் சில காரியத்தை முடிப்பீர்கள். சகோதர்கள் வழியாக சுபசெய்திகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். வாகனம் சார்ந்த பயணங்களில் விவேகம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் விற்பது தொடர்பான செயல்பாடுகளில் அலைச்சல்கள் உண்டாகும். தாய்மாமன் வழியில் அனுசரித்து செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம்கூட்டாளிகளின் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் ஆதரவுகள் கிடைக்கும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வெளிப்படையான குணத்தினால் மதிப்புகள் உயரும். நண்பர்களுடன் தொலைதூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களால் நன்மைகள் ஏற்படும். உதவி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு மீனம்இல்லத்தில் சுப காரியம் நடைபெறும். பொழுதுபோக்கு விஷயத்தில் ஆர்வம் ஏற்படும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். ஆதாயம் தரும் செயல்களில் அக்கறை காட்டுவீர்கள். பணி மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தொழில் வளர்ச்சிக்கு உதவிகள் கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதாஇன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 8.4.2025.சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 12.12 வரை தசமி. பின்னர் ஏகாதசி.இன்று காலை 11.18 வரை ஆயில்யம். பின்னர் மகம்.பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
Added a news
கனடாவின் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நேற்று முன்தினம் நுழைந்த மர்ம நபரால், நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டுள்ளது.மிகுந்த பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ள ஈஸ்ட் பிளாக் எனும், நாடாளுமன்ற கட்டிடங்கள் அமைந்துள்ள வளாகத்திற்குள், நேற்று முன்தினம் மர்ம நபர் ஒருவர் நுழைந்துள்ளார். அந்த நபர், பயங்கர ஆயுதங்களை வைத்திருந்தார் என ஆரம்பத்தில் கூறப்பட்டுள்ளது. அது குறித்த தகவல் அறிந்ததும், அந்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் நாடாளுமன்ற வளாகத்திற்குள் வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.உள்ளே இருந்தவர்கள், அறைகளை பூட்டி, பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதுடன், அந்த பகுதியில் சாலை போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு, நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டது. பொலிஸாரின் நீண்ட நேர தேடுதலின் பின்னர் நாடாளுமன்ற வளாகத்தின் உள்ளே மறைந்திருந்த நபரை, இரவு 11:40 மணிக்கு கண்டுப்பிடித்துள்ளனர். யார் அந்த நபர் என்பது தொடர்பிலும் அவர், ஆயுதங்கள் எதையும் மறைத்து எடுத்துச் சென்றாரா என்பது குறித்தும் எதுவித தகவல்களும் வெளியிடப்படவில்லை.
Added a post
(1) காலையில் இஞ்சி,(2) கடும்பகல் சுக்கு,(3) மாலையில் கடுக்காய்"காலையில் இஞ்சி கடும் பகல் சுக்கு மாலையில் கடுக்காய் மண்டலம் கொண்டிடில் கோலை ஊன்றி குறுகி நடப்பவனும் கோலை வீசிகுலாவி நடப்பானே.!"என்பது சித்தர் பாடல்...சித்தர்கள் இது போன்ற பாடல்கள் வடிவில் எளிய முறையில் நோய்களைத் தீர்க்கும் வழிமுறைகளை வடித்துள்ளனர். இவைகளின் உண்மை விளக்கங்களை கண்டறிந்து அதன் படி உண்டோமானால் பாடல்களில் கண்டபடி உண்மையான பலன்களை அடையலாம்.சித்த மருத்துவ முறையின் தத்துவமே அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்பதுதான் அதாவது அண்டம் என்ற பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களின் ஒரு பகுதிதான் பிண்டமாகிய நமது உடலிலும் இயங்குகின்றது.நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், என்ற ஐந்து பூதங்களில் நிலம் கீழே நாம் வாழ்வதற்கு ஆதாரமாகவும், ஆகாயம் மேலே சாட்சியாகவும் இருப்பதால் நடுவில் உள்ள நீர், நெருப்பு, காற்று என்ற மூன்று வித சக்திகளை மட்டும் இயங்கும் சக்திகளாக குறிப்பிட்டுள்ளனர்.எனவேதான் சித்த மருத்துவ முறையில் நாடி பிடித்து நோய்களைக் கணிக்க மூன்று விரல்களைப் பயன்படுத்துகின்றனர். அவை வாதம், பித்தம், கபம் எனப்படும்.வாதம் – காற்று – 1 மாத்திரை அளவு.பித்தம் – நெருப்பு – 1/2 மாத்திரை அளவு.கபம் – நீர் – 1/4 மாத்திரை அளவு.இது நாடியின் அளவுகளாகும். இதன் படி கையில் நாடி துடித்தால் உடலில் நோய் இல்லை என அர்த்தம். இந்த நாடி அளவுகளை கூடவோ குறையவோ அல்லாமல் சமன்படுத்தும் மருந்துகள் தான் மேற்கண்ட பாடலில் உள்ளவை.வாதம் – காற்று – 1, மாத்திரை அளவு — சுக்கு.பித்தம் – நெருப்பு – 1/2,மாத்திரை அளவு — இஞ்சி.கபம் – நீர் – 1/4-மாத்திரை அளவு — கடுக்காய்.இஞ்சி, சுக்கு, கடுக்காய் இந்த மூன்றும் தான் உடலில் உள்ள வாத, பித்த, கபம் மூன்றினையும் சமன் செய்பவை.அடுத்து, சித்த மருத்துவத்தின் அடிப்படையே ஒவ்வொரு மருத்துவ மூலப் பொருட்களிலும் அமிர்தமும், நஞ்சும் இணைந்துள்ளது என்பதுதான். எனவேதான் சித்தர்கள் இவைகளில் உள்ள நஞ்சுவை நீக்கி மருந்துகளை தயாரிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர். சுத்தி முறை எனும் பிரிவு சித்த மருத்துவ முறையில் மட்டுமே உள்ளது.சுக்குக்கு புற நஞ்சு – கடுக்காய்க்கு அக நஞ்சு எனும் விளக்கம் உள்ளது. அதாவது சுக்கில் மேலே உள்ள தோல் பகுதி நஞ்சு எனவும், கடுக்காயில் உள்ளே உள்ள கொட்டை நஞ்சு எனவே இவைகளை நீக்கினால்தான் அமிர்தமாக வேலை செய்யும்.சுக்கு சுத்தி:-தரமான சுக்கு தேவையான அளவில் வாங்கி சுக்கின் மேல் புறம் வெற்றிலைக்குப் போடும் சுண்ணாம்பு ஒரு போஸ்ட் கார்ட் கணத்தில் பூசி காயவிடவும். பின்பு மிதமான நெருப்பில் வாட்டவும் சுண்ணாம்பில் நெருப்பு பிடிக்கும் சமயம் எடுத்து விடவும். பிறகு நன்கு ஆரிய பின் ஒரு கத்தியால் சுண்ணாம்பை சுரண்ட சுக்கின் மேல் தோலுடன் வந்து விடும் . இதனை இடித்து சலித்து பதனம் செய்யவும்.கடுக்காய் சுத்தி:-கடுக்காயை உடைத்து மேலே உள்ள சதைப் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும். கொட்டை நஞ்சு எனவே நீக்கிவிடவும். சதைப் பகுதியை இடித்து தூள் செய்யவும்.இஞ்சி சுத்தி:-இஞ்சியை சிறிது நீர் விட்டு அரைத்து பிழிந்து சாற்றை வடித்து வைக்கவும். இதை பத்து நிமிடம் கழித்து பார்க்க அடியில் சுண்ணாம்பு போல் வண்டல் இருக்கும். இதுதான் நஞ்சு எனவே மேலே உள்ள தெளிவை மட்டும் எடுத்துக் கொள்ளவும். இந்த முறையில் சுத்தி செய்த பிறகு அமிர்தமாக வேலை செய்யும்.உண்ணும் முறை:-காலையில் இஞ்சிச்சாறு 15-மிலி (மூன்று டீஸ்பூன்) எடுத்து சுத்தமான தேன் அதே அளவு கலந்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இது பித்தத்தை சமன் செய்யும்.மதியம் உணவிற்கு முன் சுக்குத்தூள் 1/2 டீஸ்பூன் அளவு சுடுநீரில் கலந்து சாப்பிடவும். இது வாயுவை சமன் செய்யும்.இரவில் படுக்கும் பொது கடுக்காய் தூள் ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து சாப்பிடவும். இது கபம் எனப்படும் சிலேத்துமத்தை சமன் செய்யும். மலம் மிதமாக இளகிப் போகும்.இதன்படி ஒரு மண்டலம் (48 நாடஂகளஂ) உண்ண உடலில் இளமை மிடுக்குடன் புத்துணர்ச்சி கிட்டும்.கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம். ஒரு கடுக்காய் பத்து தாய்க்கு சமம்.சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சிய கடவுள் இல்லை.- என்பது ஆன்றோர் மொழி.
Added a post
ஹலோ ! ஐ சி ஐ பேங்க்கா சார்!ஆமாம் சார் ! சொல்லுங்க உங்களுக்கு என்ன வேண்டும்!சார்! இந்த வாட்டி பைக்கிக்கு வாங்கினா லோன் கட்ட முடியலை!தெரியும் சார்! இந்த வாட்டி ஊரில் வெள்ளம் வந்ததால் கட்ட தேவை இல்லை அடுத்த மாதம் காட்டினால் போதும் என்று மெசேஜ் அனுப்பி இருந்தோம்!ஆமா சார் அது வந்த தால் தான் உங்க கிட்ட ஃபோன் பேசுறேன்! அடுத்த மாதமும் வண்டிக்கு டியூ கட்டவில்லை என்றால் என்ன பண்ணுவீங்க!வந்து வண்டியை எடுத்து வந்து விடுவோம்!சரிங்க சார்! அப்ப இப்பவே வந்து எடுத்திட்டு போங்க! வண்டி தண்ணிக்குள்ளார தான் இருக்கு!
Added article
ஆரம்ப நாட்களில் மிகவும் சாதுவாக இருந்தார் . சாந்தமாக இருந்தார்.சகஜமாக எல்லோரிடமும் பழகினார் இளையராஜா.அதிலும் பத்திரிகைக்காரர்களிடம் மிக மிக பாசத்துடன் பேசினார்.பரிவுடன் நடந்து கொண்டார். கேட்டபோதெல்லாம் பேட்டிகள் கொடுத்தார். விதம் விதமாய் போட்டோக்கள் எடுக்க, வித்தியாசமான போஸ்களும் கூட கொடுத்தார்.ஆனால் அப்படி அப்பிராணியாய் இருந்த அந்த இளையராஜாவை அடியோடு மாற்றியது,ஒரு சில பத்திரிகைக்காரர்கள்தான்.உள்ளொன்று வைத்து புறமொன்று கேட்டார்கள்.அதில் உள்ளுக்குள் ஒளிந்திருந்த சூழ்ச்சி புரியாமல் வெள்ளந்தியாய் அவர் சொன்ன பதில்களை, வில்லங்கமாக மாற்றிப் போட்டார்கள்.வேறு விதமாய் அர்த்தம் கொடுத்தார்கள்.அதில் உச்சகட்டமாக அமைந்தது 1989 இல் வெளிவந்த ஒரு பத்திரிகை பேட்டி.இளையராஜாவிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான்:"நீங்கள் எது இசை என்று எவ்வாறு வரையறை செய்கிறீர்கள் ?"இந்தக் கேள்விக்கு வார்த்தைகள் எதையும் கட்டுப்படுத்தாமல், தன் மனதில் பட்டதை எல்லாம் சொன்னார் இளையராஜா."இசை என்பது குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டுமே இருப்பதாக நான் நினைக்கவில்லை.கச்சேரி மேடைகளில் கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடும் ராகங்களில் மட்டுமே இசை இருப்பதாக சிலர் நினைக்கிறார்கள்.இந்த உலகத்தில் எல்லாவற்றிலும் ஒரு இசை இருக்கிறது. ஒரு ராகம் இருக்கிறது. ஒரு தாளம் இருக்கிறது.ஒரு மழைத்துளி மண்ணில் விழுவதில் இசை இருக்கிறது. ஒரு குழந்தையின் நடையிலும் இசை இருக்கிறது.ஓடும் நதியில் ஒரு இசை இருக்கிறது. ஓங்கி விழும் அருவி சத்தத்தில் கூட சங்கீதம் இருக்கிறது.அவ்வளவு ஏன் ?நாய்கள் ஊளையிடும் சத்தத்தில் கூட ஒரு இசை இருக்கிறது.கவனித்துப் பார்த்தால் உலகத்தின் ஒவ்வொரு அசைவிலும் இசை இருக்கிறது."இதுதான் இளையராஜா சொன்ன பதில். ஆனால் இந்த பதில் மூலமாக ஒரு எரிமலை வெடிக்கப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியாது.அடுத்த வாரம் வெளி வந்த ஒரு சில பத்திரிகைகளில், இளையராஜாவின் பேட்டிக்கு இப்படி ஒரு தலைப்பு கொடுத்திருந்தார்கள்."நாய்கள் ஊளையிடுவதும், கர்நாடக சங்கீத வித்வான்கள் பாடுவதும் எனக்கு ஒன்றுதான்."பரபரப்பான அந்த பேட்டியை படித்தவர்கள் அதிர்ந்து போனார்கள்.தொடர்ந்து இப்படி போனது அந்தப் பேட்டி."ஒரு நாய் ஊளையிடுவதைக் கேட்டுப் பாருங்கள். அதில் ஸ்வரப் பிரஸ்தானம் இல்லையா?ஒரு நாய் ஊளையிடுவதற்கும் வித்வான்கள் பாடுவதற்கும் ஒரு வித்தியாசமும் கிடையாது. உண்மையில் வெவ்வேறு சமயங்களில் ஒரு நாய் என்னென்ன ராகங்களில் குரைக்கிறது என்பதை இசைக்குறிப்புகளாக எழுத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறேன். இது என் எண்ணத்தை நிருப்பிப்பதாக இருக்கிறது.ஒலியன்றி வேறல்ல இசை.”இப்படிச் சொல்லியிருந்தார் இளையராஜா.கொதித்துப் போனார்கள்கர்நாடக சங்கீத வித்வான்கள்.எதிர்ப்புகள் எரிமலையாக சீறி வெடித்தன.ஆவேசமான அர்ச்சனைகள்,அடுக்கடுக்காய் பிரச்சினைகள்.இசையைத் தவிர எதையும் நினைக்காத இளையராஜா இந்த வசைச் சொற்களால் வாடிப் போனார். வருத்தம் அடைந்தார்.அப்போதுதான் தீர்க்கமாகச் சிந்தித்து தெளிவான அந்த முடிவை எடுத்தார்.இனி தேவை இல்லாமல் மீடியாக்காரர்களிடம் பேசுவதில்லை.இன்னொன்றையும் கூட அவர் புரிந்து கொண்டார்.இசை அமைப்பது மட்டும் கலை அல்ல.சொற்களைக் கையாளுதலும் கூட ஒரு கலைதான்.ஒரு சொல் வெல்லும்,ஒரு சொல் கொல்லும்.வெல்லும் சொற்களையே எப்பொழுதும் சொல்வோம்.......
Added a post
மேனாள் புதுச்சேரி அரசின் நிதிச் செயலர்/தலைமைச் செயலர் ராஜீவ் யதுவன்ஷி, IAS பகிர்ந்த பதிவின் சுருக்கமான தமிழாக்கம்:"நான் பணியிலிருந்து ஓய்வு பெற்று விட்டேன்; பணியில் உயர் பதவிகளில் இருந்தபோது தீபாவளிக்கு பரிசுப் பொருட்களுடன் எனக்கு வாழ்த்து சொல்பவர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பர்.அவர்கள் பரிசுப் பொருளாக அளித்த பல வகையான இனிப்புகள், பாதாம் பிஸ்தா பேரீச்சை போன்றவை நிறைந்த பெட்டிகள், இன்னும் பிற பரிசுகள் என, ஒருவர் என என் அறையில் உள்ளே நுழைந்தால் ஏதோ இனிப்பு பரிசு பொருட்கள் விற்கும் கடையைப் போல எனது அறை இருக்கும்.என்னால் முடிந்தவரை என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கெல்லாம் வந்த பரிசுகளை பங்கிட்டு அளித்த பின்னும் என் வீடு பரிசுப் பொருட்களால் நிறைந்திருக்கும்.நான் ஓய்வு பெற்றபின் வந்த முதலாண்டு தீபாவளிக்கு, பணியில் இருந்த நினைவில் எனக்கு ஏராளமானோர் பல பரிசு பொருட்களுடன் வாழ்த்துச் சொல்ல வருவர் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.யாருமே வரவில்லை.நான் ஏமாந்து, விரக்தி அடைந்து மனதை வேறு பக்கம் திருப்ப ஆன்மீக செய்தித்தாள் ஒன்றை படிக்கத் தொடங்கினேன்.அதில் ஒரு சிறுகதையை அதிர்ஷ்டவசமாகப் பார்த்தேன்.அக்கதை சுமை தூக்கிச் செல்லப் பயன்படுத்தும் கழுதை பற்றியது.ஒரு பயணத்தில் அக்கழுதையின் மீது வழிபடும் தெய்வ உருவங்களை ஏற்றிச் செல்லும் பணியை கழுதையின் உரிமையாளர் செய்தார்.பயணம் தொடக்கத்திலிருந்து முடிவு வரை பல்வேறு இடங்களில் ஏராளமானோர் கழுதையின் முன்னர் வந்து நின்று பயபக்தியுடன், மரியாதையுடன் வணங்கினர்.இவ்வாறு தன்னை அனைவரும் வணங்குவதை கண்டு கழுதைக்கு மிகவும் மகிழ்ச்சி.. பெருமை !தெய்வ வடிவங்களை உரிய இடத்தில் இறக்கிவிட்டு, திரும்பும் பயணத்தில் காய்கறி மூட்டையை அதன் முதுகில் ஏற்றி பயணத்தைத் தொடர்ந்தார் கழுதையின் உரிமையாளர்.பயணத்தில் ஆங்காங்கே ஏராளமானோர் வந்து தன்னை மரியாதையுடன் கும்பிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்த கழுதைக்கு ஒரே ஆச்சரியம்.யாரும் வந்து கழுதை முன்னின்று வணங்கவில்லை. வெறுத்துப்போன கழுதை பிறருடைய கவனத்தைக் கவர கத்தத் தொடங்கியது.கடுப்பான உரிமையாளரும் பக்கத்தில் நின்றவர்களும் கழுதையை அடிக்கத் துவங்கினர்.அவர்கள் அடிக்கும்படி, அவர்களால் போன பயணத்தில் வணங்கப்பட்ட தான் என்ன செய்துவிட்டேன் என்று கழுதை குழம்பியது.....கழுதையின் கதையைப் படித்த எனக்கு ஞானோதயம் உதித்தது.நான் உயர் பதவியில் இருந்தபோது என்னை சந்தித்து வாழ்த்துச் சொல்லிப் பரிசளித்த அனைவரும், கடவுள் விக்கிரகங்களை வணங்கியவர்கள் தன்னை வணங்கியதாக நினைத்த கழுதை போல, எனக்கு தீபாவளிக்கு வாழ்த்து சொல்லி பரிசு அளித்தவர்கள் அனைவரும், நான் வகித்த பதவியின் அதிகாரத்திற்காகச் செய்தார்களே தவிர எனக்கு இல்லை என்று நான் புரிந்து கொள்ளவில்லை !இந்தப் புரிதல் வந்தவுடன், பரிசுகளுடன் வாழ்த்து சொல்ல வருபவர்களை எதிர்பார்த்து ஏமாந்து கொண்டிருப்பதை விட்டுவிட்டு, என் மனைவியுடன் இணைந்து அவளுக்கு உதவத் தொடங்கினேன்.அவளிடம் கழுதைக் கதையை படித்து நான் பெற்ற ஞானோதயத்தை பகிர்ந்த போது அவள் பதில் சொன்னாள்..."அவ்வப்போது உன்னை நான் கழுதை என்று சொன்னபோது நீ என் மீது கோபப்பட்டாய்! கழுதை கதையைப் படித்த உனக்கு இப்போதாவது உண்மை விளங்கியதே ....."
Added a post
மேஷம்கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். புதிய வாகனம் மற்றும் வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உருவாகும். மாணவர்களுக்கு உயர் கல்வி தொடர்பான புரிதல் அதிகரிக்கும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆசை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மிதுனம்வெளியூர் பயணங்களால் புதிய அனுபவங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். கல்வி பணிகளில் புதிய கண்ணோட்டம் பிறக்கும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். வாடிக்கையாளர்களின் ஆதரவு மேம்படும். தானிய விற்பனையில் லாபம் உண்டாகும். தோல்வி விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கடகம்வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஆதரவுகள் கிடைக்கும். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். வேலையாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். சிறுதூர பயணம் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். மனதில் புதுவிதமான தைரியம் கூடும். எதிர்பாராத சில திருப்பங்கள் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா சிம்மம்தன வருவாயில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். இயந்திர பணியில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். குடும்ப விவகாரங்களை பகிர்வதை குறைத்துக்கொள்வது நல்லது. உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செய்யும் தொழிலில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகள் குறையும். சில பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் கன்னிசமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். செய்த தொழிலில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு துலாம்சமூகம் சார்ந்த பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். வியாபாரம் தொடர்பான சரக்குகளை விற்று லாபம் அடைவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகம் சார்ந்த பணிகளில் தவறிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகளை குறைக்க முயல்வீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் மனதளவில் மாற்றத்தை உருவாக்கும். பயம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்வாழ்க்கைத்துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் காணப்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வி தொடர்பான செயல்பாடுகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். தேர்ச்சி பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை தனுசுபழைய பிரச்சனைகள் மீண்டும் தொடங்கும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். பேச்சுகளில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் புதிய முடிவுகளை தவிர்க்கவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். அனுபவம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மகரம்புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்களில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். பணி நிமிர்த்தம் புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் விவேகம் வேண்டும். திட்டமிட்டு செயல்படுவதால் நன்மை உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கும்பம்சுபகாரியம் சார்ந்த விரயங்கள் உண்டாகும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். ஆன்மிக காரியங்களால் மன அமைதி அடைவீர்கள். தொல்லை தந்தவர்கள் விலகி செல்வார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். பயனற்ற செலவுகளால் சேமிப்புகள் குறையும். பிரியமானவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு மீனம்உத்தியோகம் மாற்றம் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். கடன் தொடர்பான சில பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். நிம்மதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
Added a post
குரோதி வருடம் பங்குனி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 7.4.2025சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 12.25 வரை நவமி. பின்னர் தசமி.இன்று காலை 10.39 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.