வசூலில் பலத்த அடி வாங்கிய 'தக் லைஃப்'

மணிரத்னம் இயக்கத்தில் கமலஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்த திரைப்படம் தான் ‘தக் லைஃப்’. இந்தத் திரைப்படம் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியானது. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு மணிரத்னம் - கமல் இணைந்து இருந்ததால் ரசிகர்கள் படத்தைக் காண ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால் படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றிருந்தது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கணிக்க கூடிய கதையாக, எந்த ஒரு திருப்பமும் இல்லாமல், சுவாரஸ்யம் சிறிதும் இன்றி படம் இருந்தது. படத்தைப் பார்த்த பலரும் இது மணிரத்னத்தின் படம்தானா? என கேள்வி எழுப்பினர். மேலும் திரை விமர்சகர்களும் படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களையே கூறினர். படம் பார்த்துவிட்டு வெளியில் வந்த ரசிகர்களும் படத்தை திட்டித் தீர்த்தனர்.

இந்த திரைப்படம் வசூலில் பலத்த அடி வாங்கி உள்ளது. படம் வெளியான முதல் நாள் ரூ.15.5 கோடி வசூலையும், இரண்டாவது நாள் வெறும் ரூ.7.15 கோடி வசூலை மட்டுமே பெற்றது. மூன்றாவது நாளான சனிக்கிழமை ரூ.7.75 கோடியும், நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை ரூ.6.50 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக நான்கு நாட்களில் இந்திய அளவில் ரூ.36.90 கோடி வசூலை மட்டுமே ‘தக் லைஃப்’ திரைப்படம் வசூலித்துள்ளதாக Sacnik இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் படம் ரூ.50 முதல் ரூ.70 கோடி வரை வசூலித்திருப்பதாகவும் அந்த இணையதளம் கூறியுள்ளது.

  • 28
  • More
Comments (0)
Login or Join to comment.