- · 5 friends
-
I

ஆழ்மனம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்
ஆழ்மனதை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.
நம் மூளையின் இயக்கத்திற்கு 95% subconscious mind தான் காரணமாக இருக்கிறது. 5% மட்டுமே conscious mind-ன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிறது. நமது கட்டுப்பாட்டில் இல்லாமல் நாம் செய்யும் செயல்கள் subconscious mind எனப்படுகிறது.
அதாவது, சுவாசிப்பது, இதயம், நுரையீரல் போன்றவற்றின் செயல்பாடுகள்.
நாம், சிறுவயதிலிருந்து பார்த்த, கேட்ட விஷயங்கள் நம் ஆழ்மனதில் பதிவாகிக்கொண்டே இருக்கும். எனினும், நம் conscious mind, அதனை உணராது.
திடீரென்று நம்மிடம் ஒரு தேதியை குறிப்பிட்டு, அன்று நீங்கள் செய்துகொண்டிருந்தீர்கள்? என்று கேட்டால், நமக்கு நியாபகம் இருக்காது.
ஆனால், subconscious mind-ல் அது பதிவாகியிருக்கும். அதனை நாம் நியாபகப்படுத்திக் கூற Hypnosis முறையில் முடியும்.
நம் ஆழ்மனதின் கதவுகளை திறந்து பல ஆண்டுகளுக்கு முன் நாம் என்ன செய்துகொண்டிருந்தோம்? என்பதை நியாபகப்படுத்த Hypnosis முறை உதவுகிறது.
conscious mind மூலமாக நல்லவற்றையும், தீயவற்றையும் பிரிக்க முடியும்.
ஆனால், ஆழ்மனதிற்கு நல்லது எது? கெட்டது எது? என்று பிரித்து பார்க்க தெரியாது. conscious mind-ன் கட்டளையை ஆழ்மனது அப்படியே கேட்கும்.
எந்த ஒரு விஷத்தை நாம் அடிக்கடி, ஆழ்மனதில் பதியுமாறு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறோமோ, அது அவ்வாறு நடக்க சாத்தியக்கூறுகள் உள்ளது.
நம் ஆழ்மனதிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
ஒரு எண்ணத்தை நமது ஆழ்மனதில் பதிய வைப்பதற்கு, 3 முக்கிய விஷயங்கள் இருக்கிறது. நம் ஆழ்மனதிடம் நமக்கு பிடித்த செயலை செய்துவிட்டது போல் கூற வேண்டும்.
இரண்டாவதாக, கண்ணை மூடிக்கொண்டு அதனை கற்பனை செய்து பார்க்க வேண்டும். மூன்றாவதாக, அந்த செயலை செய்துவிட்டது போல் மகிழ்ச்சியை உணர வேண்டும்.
இந்த 3 விஷயங்களையும், ஆழ்மனதிடம் நாம் பதிய வைத்துக்கொண்டே இருக்கும்.
அப்படி செய்யும் பட்சத்தில், நமக்கு பிடித்த விஷயத்தை நாம் அடைய தேவையான வழிகளை ஆழ்மனது நமக்கு தரும்.
எனவே, நேர்மறையான எண்ணங்களை ஆழ்மனதில் நாம் விதைக்க வேண்டும். அது நமக்கு, நல்ல செயல்களை செய்ய வழிவகுக்கும்.
ஆழ்மனதை நாம் தொடர்பு கொள்ள முதல் வழி, அமைதியான நிலை தான். முதலில் சாந்தமான நிலையில் இருக்க வேண்டும்.
நாம் இரவு தூங்க செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன், மனதை அமைதியான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதன்பிறகு, நமக்கு பிடித்தமான விஷயங்களை கண்ணை மூடிக்கொண்டு கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
அதன்பிறகு, காலையில் எழுந்தவுடனும் நம் மனது அமைதியாக இருக்கும். அப்போது, மீண்டும் அதே விஷயத்தை உணர்ந்து கற்பனை செய்ய வேண்டும். இதன்மூலம், அந்த விஷயம் ஆழ்மனதை எளிதில் சென்றடையும்.

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · வன்னி

- ·
- · வன்னி

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva


- ·
- · அறிவோம் ஆன்மீகம்




- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva




- ·
- · GomathiSiva