Support Ads
 ·   ·  947 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

மயில்கள் பற்றி அறிந்திராத தகவல்

மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?

குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை உங்களில் யாரேனும் பார்த்ததுண்டா? 

ஏன் நேஷனல் ஜியாகிராஃபி சானலிலாவது பார்த்ததுண்டா? ஆம் எவரும் பார்த்திருக்க முடியாது!

இயற்கையாக வயதாகி இறக்கும் மயில்களின் மரணத்தை எவருமே  பார்க்க முடியாதாம்! இறப்பதற்கு மிகச் சரியாக 48 நாட்களுக்கு முன்பே அதற்கு தனது இறப்பு நாள் நேரம் நொடி அனைத்தும் துல்லியமாக தெரிந்துவிடுமாம்! அந்த நொடியில் இருந்து அந்த மயிலானது மலை மீதுள்ள ஏதாவதொரு முருகன் கோவிலில்..

ஒரு மறைவான இடத்தை தேர்ந்தெடுத்து ஒரு வேளை உணவும், சிறிது நீரூம் மட்டுமே அருந்தி “மயில்துயில்” எனும் விரதத்தை கடைபிடிக்குமாம்! கடைசி 1 வாரம் எதுவும் அருந்தாமல் அமைதியாக அமர்ந்துவிடுமாம். அதனுடைய முடிவு காலம் வரும் நாளுக்கு முதல் நாள் மட்டும் ஒரு கோமாதாவின் கோமியத்தை..

7 சொட்டு அருந்துமாம்! அப்போது மயிலின் கண்கள் வேர்த்து 6 சொட்டு கண்ணீர்த் துளிகளை பத்திரமாக ஒரு பாறை பிளவுக்குள் விடுமாம்! அடுத்த நொடியே அந்த பாறை பிளந்து கொள்ள மயில் அதனுள் அமர்ந்து தோகையை விரிக்க பாறை அதை நெருக்க அந்த முழுநாளும் மயில் ஓம் முருகா என்று சொல்லிக் கொண்டே..

தன் உயிரை விடுமாம். தோகை இல்லாத பெண் மயில்கள் தங்கள் கண்ணீரை வேல மரத்தில் விட்டு அது பிளந்ததும் இதே போல அமர்ந்து உயிர் துறக்குமாம்! வெள்ளை நிற மயில்கள் மட்டும் அக்கோவிலிலுள்ள வேலவன் கையில் இருக்கும் வேலில் பறந்து வந்து விழுந்து தங்களை மாய்த்துக் கொள்ளுமாம்! 

அப்படி வேலில் இறக்கும் மயில்கள் அடுத்த நொடியே செவ்வரளி மலர் மாலையாக மாறி முருகன் காலில் விழுமாம்! இந்த அரிய உண்மைகளை எல்லாம் படிக்கும் போது 48 தினங்கள் = 1 மண்டலம், 7 சொட்டு கோமியம் = ஓம் சரவணபவ ஏழெழுத்து, 6 சொட்டுக் கண்ணீர் = அறுபடைவீடு, செவ்வரளி = முருகனின் பூ, 

வேல மரம் = வேலுண்டு வினையில்லை, வேலில் மரணம் = யாமிருக்க பயமேன் என்பதை உணர்த்துகிறது அல்லவா! அதனால் தான் தெய்வ அம்சம் பொருந்திய மயில் முருகனுக்கு வாகனமாக மட்டுமின்றி நம் நாட்டு தேசியப் பறவையாகவும் இருக்கிறது! இப்படி தனது மரணகாலத்தில் கூட மிகவும் அமைதியாக எந்த.. 

உயிரினங்களுக்கும் இடையூறு செய்யாமல் முருகர் கோவிலேயே நோன்பிருந்து உயிர்  துறக்கிறது மயில்கள்! விபத்து மற்றும் வேறு பிற காரணங்களால் அடிபட்டு சாகும் மயில்களை மற்ற மயில்கள் பாம்புப் புற்றின் அருகே இழுத்துச் சென்று விட்டுவிடும்! அந்த சரவணனடி வாழ் சர்ப்பமும் மயில் உடலைப் புற்றுக்குள் தள்ளி..

அந்த உடலை மூடிவிடும்! இது முற்றிலும் உண்மை இது குறித்து ‘மயிலாடுதுறை மயில்சாமி சித்தர்’  எழுதிய “மயில் அகவல்” என்னும் நூலில் இத்தகவல்கள் காணப்படுவதாக விக்கிபீடியாவில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக கூகுள் தெரிவிக்கிறது! மயில்சாமி சித்தர் உச்சி வெயிலில் பழனி மலையுச்சிக்கு சென்று, அங்கு..

ஒரு மொட்டைப் பாறையில் தனது ஒற்றைக் காலில் நின்று கடும் தவமிருந்து முருகனிடம் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொண்ட வரங்களில் மயில்கள் தாங்கள் இறக்கும் நிலையை அறிந்து நோன்பிருந்து இறக்கவேண்டும். அதன் உடல் பாகங்கள் யார் கண்ணிலும் படக்கூடாது என்பவையாகும்.!!

தோகை விரிக்கும் போது மயில்களுக்கு உடல் சிலிர்ப்பது போல இதைப் படிக்கும் உங்களுக்கும் மெய் சிலிர்க்கிறதல்லவா! 

ஓம் முருகா.. முருகா..

மயிலாடுதுறை மயில்சாமி சித்தர் எழுதிய மயில் அகவல் என்னும் நூல் கிடைத்தால் படியுங்கள்.

  • 876
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்