Support Ads
 ·   ·  970 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இட்லி கடை .......[அவசியம் படியுங்கள்]

அந்த முதியோர் காப்பகத்திற்கு 
ஓரு மணியார்டர் வந்தது.
அதில்
இத்துடன் 
ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... 
நானும் 
என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். 
நாங்கள் 
ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வருகிறோம் . 
இருவரும் 
அறுபது வயதைக் கடந்தவர்கள் .
ஒரு வேளை 
நான் இறந்து விட்டால்... 
என்னுடைய மனைவியைப் பார்த்துக்
கொள்ள என்று  ஒருவருமே இல்லை.
எனவே  
எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். 
அதற்காக 
என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.
மாதா
மாதம் ரூபாய் 2000 அனுப்பி விடுகிறேன், 
பாதித் தொகையை உங்கள் காப்பதற்கான செலவுக்காக எடுத்துக்
கொள்ளுங்கள், 
மீதி பாதியை 
என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.
என்றாவது ஒரு நாள் நான் அனுப்பும் 
தொகை வராவிட்டால்... 
அப்போது
தயவு செய்து இதில் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். 
இப்படிக்கு 
மீனாள் ராமசாமி. 
என்றும் எழுதி இருந்தது.
சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர்கள் வரை இருக்கின்றனர். 
தொடர்ந்து 
ரொம்ப நாட்களாகவே
மாதா மாதம் 
இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. 
யார் இந்த 
மீனாள் ராமசாமி ?  
சற்றே வித்தியாசமாக இருக்கிறதே 
என்று அறிந்து கொள்ள, 
காப்பக மேனேஜருக்கு, ஆவலோ அதிகரித்து வந்தது. 
ஒரு நாள் நேரில் சென்று பார்த்து விட்டு வரவேண்டும்' என்று நினைத்தார். 
ஆனால், 
வேலைப் பளு காரணமாக
முடியவில்லை.
அன்று 
ஞாயிற்றுக்
கிழமை... 
'இன்று, கண்டிப்பாகப் பார்த்து விட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். 
அவருடைய 
இரு சக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி வரை நேரம் ஆனது.
சின்ன 
கட்டிடம்... 
வெளியில் 
தகரப் 
பலகையில் கூரை வேயப்
பட்டிருந்தது. 
பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது.   
எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர், நாற்காலியில் உட்கார்ந்து
கொண்டு இருந்தார். 
நீங்கள் தானே மீனாள் ராமசாமி ? 
என்று கேட்டார். 
ஆமாம் 
தம்பி ! 
நீங்கள் யார் ? என்று கேட்டார்.
அவரும் விவரங்களைச் சொன்னார்.
அப்படியா 
தம்பி, 
ரொம்ப சந்தோஷம்... 
உட்காருங்க. 
ஏதாவது சாப்பிடுகிறீர்களா ?என்று  இருக்கையைக் காண்பித்தார்.
ஒன்றும் 
வேண்டாம் 
தண்ணீர் மட்டும் கொடுங்கள்”
தண்ணீர் 
கொடுத்த
படியே, 
நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை கடந்த முப்பது வருடங்களாகவே நடத்தி வருகிறோம்...
ஆரம்பித்தில், இரண்டு 
இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .
பிறகு 
இரண்டு, 
மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். 
எங்கள் 
கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு 
வயிறு நிறைந்து விடும்.
கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் தினமும் வருவார்கள். 
நாங்கள் 
இருவரும் தான் வேலை செய்கிறோம். 
எங்களுக்கு குழந்தைகள் இல்லை...
எனவே, 
அதிகம் 
செலவுகளும் இல்லை. 
அதனால் 
குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.
மாதா மாதம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை 
விட, 
மேலும் கொஞ்சம் மிஞ்சும்... 
அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் 
என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார்.  
எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம் 
என்று விபரமாகச் சொல்லி 
முடித்தார்.
இதற்குள் 
மணி மாலை 
ஐந்து ஆனது.
இப்போது ஆரம்பிச்சா தான், ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும் என்று சொல்லி விட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.
சரிங்க ஐயா,
உங்களைப் 
பார்க்க வந்தேன்.  
வேறு விஷயம் இல்லை...
கொஞ்ச நேரம் இங்கேயே 
இருந்து விட்டுப் போகிறேன் என்றார் மானேஜர்.
சரியாக 
ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம்  நிறைய இட்லி இருந்தது .
அடுத்த பாத்திரத்தில் நிறைய 
சாம்பார் இருந்தது .
வாடிக்கை
யாளர்கள் ஒவ்வொருவரும்
நான்கு கொடுங்கள் 
ஐந்து கொடுங்கள் "
என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும்  மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.
இதில் மாபெறும்
ஆச்சரியம் என்னவென்றால், அங்கே 
கல்லாப் 
பெட்டி அருகில்  யாருமே இல்லை. 
வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் அவரவரே 
எடுத்துக்
கொண்டார்கள். 
பெரியவர்கள் இருவருமே 
அந்தப் பக்கமே பார்க்கவில்லை. 
இட்லி 
சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.
கல்லா 
பெட்டியில் ஒருவரும் இல்லையே ? 
யாராவது ஏமாற்றினால் என்ன 
செய்வீர்கள் 
என்று கேட்டார் மானேஜர்.
இல்லை 
தம்பி, 
யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.
அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. 
காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு 
விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்,
இந்த நாள் 
வரை எனக்கு எந்தவித 
நஷ்டமும் இல்லை. 
இதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியே தான் 
என்றும் சொன்னார். 
மானேஜருக்கோ மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது. 
இந்த 
காலத்திலும் இப்படியும் மனிதர்களா ?
என்று வியப்படைந்தார். 
மேலும் 
கொஞ்ச நேரம் இருந்து
விட்டு அவரிடம் விடைபெற்றுக் 
கொண்டு ஊருக்கு வந்து விட்டார். 
மாதங்கள் சில
போனது.
கடந்த 
இரண்டு மாதங்களாகவே மணியார்டர் வரவில்லை. 
என்ன 
விஷயம் ?
என்று அவருக்கும் ஒன்றும் புரியவில்லை.
காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி 
இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.
மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். 
எப்போதும் 
போல் இட்லி வியாபாரம் படுஜோராக 
நடந்து கொண்டிருந்தது.
மீனாட்சி அம்மாள் மட்டுமே இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.
வழக்கம் போல எல்லோருமே 
வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். 
வழக்கம் 
போல அதே கல்லாப்பெட்டி . 
எல்லோரும் பணத்தைப் 
போட்டு பாக்கியை அவர்களே
எடுத்துக் கொண்டு போனார்கள். 
சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரையும் அவர்களாகவே
ஊற்றி கொண்டு போனார்கள்... 
மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.
உள்ளே 
நுழைந்த போது அவருடைய 
பெரிய புகைப்படம்  மாலை போட்டு வைத்திருந்தார்கள்.  
மேனேஜருக்கு
புரிந்து விட்டது.
விசாரித்ததில்... 
அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். 
அங்குள்ள 
மக்கள் உதவியால் ஒன்று சேர்ந்து 
ஈமச் சடங்குகள் நடந்ததாம். 
இரண்டு நாட்களாகத் 
தான், 
மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்
துள்ளாராம் 
அவர் மனைவி.
உங்கள் 
கணவர் எங்கள் காப்பகத்திற்கு மாதா மாதம் 
பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா ?
என்றும் கேட்டார். 
தெரியும் 
என்று 
சொன்னார்.
நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா ? என்றார். 
இல்லை 
ஐயா ! 
அவர் 
இறந்தவுடன் 
இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு, அரவணைப்பு
என்னை வியப்படையச் செய்து விட்டது. 
எனவே  
என்னால் முடியும் வரை இந்த கடையை தனியாக  நடத்துவது 
என்று முடிவு செய்துள்ளேன்.
அடுத்த 
மாதம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானும் தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். 
அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். 
அங்கு உள்ள வயதானவர்
களுக்கு, 
என் கணவருடைய ஆசைப்படியே 
அந்த பணம் அவர்களுக்கு
உபயோகப்
படட்டும்.
என்னைப் 
பற்றிக் 
கவலைப்பட வேண்டாம். 
இங்கு 
உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாவே பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை  தற்சமயம் நிறைய வந்து இருக்கிறது என்றார்.
சரிம்மா, 
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்
பட்டால், எங்களுக்கு போன் செய்யுங்கள் 
என்று சொல்லி  காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத்  திரும்பினார்கள்.
இப்போது அவர்களுக்கு நன்கு
புரிந்து விட்டது...
இந்த உலகம் 
எப்படி பட்டது என்று..... 
எதையும் பெறுவதை 
விட... 
கொடுப்பதில் தான்... 
*ஆனந்தம்,*
*அமைதி,*
*திருப்தி* 
*நிம்மதி* 
என எல்லாமே உள்ளது. 
இதை நன்கு புரிந்து கொண்டால்....

நாமும் இந்த நொடி முதலே நாமும் புத்திசாலியே தான்.

  • 206
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்