Support Ads
Main Menu
 ·   · 634 posts
 •  · 3 friends
 • I

  7 followers

மாறிப்போன உறவுகள்


என்னத்த சொல்றது....!?!?முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா..."தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?""அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?""எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.."பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா""அத்தை..! நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்..""இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..?பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். " (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல)அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க.அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது... "ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்..""இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்..""எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ. அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்...(போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...)நேத்து சந்தைக்குப் போனேனா..! அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு. பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.."இப்பெல்லாம் ஒரு சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா..."ஹாய்...!! வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..???? (கேட்டுட்டு உடனே) எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.." (இதுக்கும் மேல, 'இல்லைங்க..நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால் தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?)"ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க..""அப்புறம்... என்ன விஷயம்..? (வந்த விஷயத்த சொன்னதும்) இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே...""இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு. 
அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்..""அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், fpல... போட்டோ அப்டேட் பண்றனே..." (கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க. ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...)"ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?" (அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி 
ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு..
சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...)"நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும். உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு..."அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல)"சரிங்க..! டைமாச்சு, நா கிளம்பறேன்..""ஆமா..! வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும். இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவாங்க...இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்.."


💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 66
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  தைப்பூச விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
  தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும்,. காலை மாலை என இ
  தாம்பூலத்தின் மகத்துவம்
  மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள்*       மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்
  ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி - விளக்கம்
  பழமொழிஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி நாம் அறிந்த விளக்கம் :பேச்சு பெருசா இருக்கும், செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்
  கணவன் - மனைவி புரிதல்....
  ஒரு பெண் ஷாப்பிங் போனார்.கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!"நீங்க டி.வி
  துவந்த யுத்தம்
  பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு மட்டும் இடையே நடக்கும் போர்.)மிகவும்
  வித்தை அல்ல அறம்
  துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்
  சிந்திப்போமா?
  ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்த சமயத்தில் அங்க
  ஆழ்மனம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்
  ஆழ்மனதை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.நம் மூளையின் இயக்கத்திற்கு 95% subconscious mind தான் காரணமாக இருக்கிறது. 5% மட்டுமே consci
  ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும்
  நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச்
  மினிமலிசம்
  மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும
  தேவையா இந்த பழக்கம்?
  பணத்தாள்களைக் கடதாசிப்பூக்கள் போல் மடித்துப் பூங்கொத்து (bouquets) செய்து பரிசளிக்கும் முட்டாள்தனமான Surprised Gift Trend ஒன்று இப்போது பிரபலமாகி வருக
  மயில்கள் பற்றி அறிந்திராத தகவல்
  மயில்கள் எங்காவது இயற்கையாக இறந்து கிடந்து பார்த்ததுண்டா?குரங்கு, நாய், பூனை, எலி, மாடு, காகம் போன்ற விலங்கு / பறவையினங்கள் போல இறந்து கிடக்கும் மயிலை
  பாடம் சொல்லும் கழுகு
  கழுகு... தந்தைகளுக்கான முன்மாதிரி.திருமணமாக இருக்கும் ஆண் பெண்ணுக்கும், கணவன் மனைவிக்கும், தாய் தந்தைக்குமான செய்தி இது...ஒரு பெண் கழுகு தன் குஞ்சுகளு
  தெரிந்துக் கொள்வோமா?
  தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில், மகாலிங்க சுவாமி திருக்கோவில் இருக்கிறது. கலையழகுடன் கூடிய தமிழக ஆலயங்கள் பலவற்றுள் இதற்கும் முக்கிய இடம் உண்டு.
  அறிஞர் அண்ணாவின் மொழித்திறன்
  ஒரு முறை லண்டனில் நடந்த கூட்டத்தில் ஆங்கிலத்தில்  "complete" என்ற சொல்லுக்கும் "finished" என்ற சொல்லுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று கேட்டார்கள்.  
  Ads