Support Ads
Main Menu
 ·   · 701 posts
  •  · 5 friends
  • I

    9 followers

பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்ட ஐடா


1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!!



அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..!



ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார்.  "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..!



ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார்.



"இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.



கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார்.



அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா.



"என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த  நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..!



இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!!



ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...!



இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம்,  தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா.



ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது.



பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா!



அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! 



ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும்  பெற வைத்தார் ஐடா..!



இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..!



நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..!



ஆனால், யார் இந்த பெண்?  இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்?  இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்?



எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!!



ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..!


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 131
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    உங்கள் முகம் சுருக்கம் இல்லாமல் இளமையாகவே இருக்க டிப்ஸ்
    பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இளம் வயதிலேயே சருமம் முதுமையான தோற்றத்தை தருவது. இதனை ஆன்டி ஏஜிங் என்று கூறுவார்கள். இந்த பிரச்சனைக்கு ரசாயனங
    வண்ணங்களின் (Colour) தமிழ்ப் பெயர்
    தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் .... இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இ
    இன்றைய ராசி பலன் – ஜூன் 3, 2023  (ஆடியோ வடிவில் கேட்கலாம்)
    இன்றைய ராசி பலன் - ஜூன் 3, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 20ஆம் திகதி ஆடியோ வடிவில் கேட்க …மேஷம்Ariesவிவேகமாக இருக்க வேண்டிய நாள் இன்று.எதி
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 20 ஆம் தேதி சனிக்கிழமை 3.6.2023.   சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.   இன்று காலை 10.53 மணி வரை ச
    இன்றைய ராசி பலன் – ஜூன் 2, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 2, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 19ஆம் திகதி    மேஷம்Ariesமுயற்சிகள் நிறைந்த நாள் இன்று. பலதரப்பட்ட மக்களின் அறிமு
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 2.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று காலை 11.44 மணி வரை திரி
    அக்னியில் அவதரித்த ஆறுமுகம்
    சிவனின் நெற்றிக்கண்ணில் அவதரித்தவர் ஆறுமுகப் பெருமான். அவரது அவதார தினம் நிகழ்ந்தது வைகாசி விசாகம் நாளில்தான். எனவேதான் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில்
    வைகாசி விசாகம்
    அழகன் முருகன் தோன்றிய திருநாள் வைகாசி விசாகம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து முருகனை  வணங்கினால் பகை விலகும். துன்பம் நீங்கும். உலகில் அதர்ம செயல
    இன்றைய ராசி பலன் – ஜூன் 1, 2023
    இன்றைய ராசி பலன் - ஜூன் 1, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 18ஆம் திகதி    மேஷம்Ariesகவலைகள் குறையும் நாள் இன்று. சுபகாரிய பேச்சுவார்த்தைகள்
    விரைவில் கருத்தரிக்க உண்ண வேண்டிய உணவுகள்
    கர்ப்பம் அடைவது என்பது எளிமையான விஷயம் அல்ல. சிலருக்கு கர்ப்பமாவதில் பிரச்சனைகள் இருக்கலாம். ஏனெனில் இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்க
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 18 ஆம் தேதி வியாழக்கிழமை 1.6.2023. சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.06 மணி வரை த
    இன்றைய ராசி பலன் – மே 30, 2023
    இன்றைய ராசி பலன் – மே 31, 2023 தமிழ் வருடம் சோபகிருது, வைகாசி மாதம் 17ஆம் திகதி    மேஷம்Ariesசுகம் நிறைந்த நாள் இன்று. குடும்ப உறுப்பினர்களால் கலகலப்ப
    இன்றைய நாள் எப்படி?
    சோபகிருது வருடம் வைகாசி மாதம் 17 ஆம் தேதி புதன்கிழமை 31.5.2023.   சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.  இன்று பிற்பகல் 12.01 மணி வரை ஏ
    மரம் வளர்ப்போம் ஆக்சிஜன் பெருக்குவோம்
    படித்ததில் பிடித்தது ... அருமையான விழிப்புணர்வு பதிவு .. ஆக்சிஜனை பூமியில் இருந்து முற்றிலுமாக நீக்கி விட்டால் என்னாகும்?'இப்ப எதுக்கு இப்படி ஒரு விபர
    குலதெய்வ விரதம்
    வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டு இருப்பவர்கள் பல கோவில்களுக்கு சென்று தங்களது பிரார்த்தனை நிறைவேறுமாறு வேண்டிக்கொள்வர். இவ்வாறு வாழ்வ
    Ads