Support Ads
Main Menu
 ·   · 524 posts
 •  · 3 friends
 • I

  7 followers

பிறவிகளின் வழியே விதி


ஒரு குளக்கரையில் ஓரு அந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்து கொண்டு இருந்தார். ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.
அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும் பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக் கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது.
அந்தப் புலையன் பசுவைத் தேடிக் கொண்டு வந்தான். அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான். ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.
அடுத்த பிறவி
வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் சாருகர் என்பவர் பிறந்தார். சாருகர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார். அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார். அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்து வந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனக் கூறி அலறுவார். “விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார். கண்ணீர் பெருகுவார். 
பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது. அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்து கொண்டு நடந்து போகிறார்.  பகல் முழுதும் நடப்பார். பொழுதுப் போன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார். ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார். இரவில் வேறு  இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்து கொண்டிருந்தார். 
இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது.  ஒலியடங்கி இருந்தது.  அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன. அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள்.  அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே. தாங்கள் யார்? என்று கேட்டாள். “அம்மா, வணக்கம், நான் ஒரு யாத்ரீகன். என் பேர் சாருகன்.  நான் பண்டரிபுரம் போகின்றேன்”
அந்த பெண்மணி இவரிடம் "என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்ட உத்தமரே. நீங்கள்தான்என் இதய ராஜா, நான் உங்கள் இதய ராணி இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்”என அவரை ஆசையுடன் நெருங்குகிறாள். "அம்மா! இந்த உலகத்தில் கடுகளவு பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். பிரம்மச்சாரி. 
தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வது தான் கண்ணியம். கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்" என கூறினார். அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துண்டித்தாள்.
 “என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்று விட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள். இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா? பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள். சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள். "பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான்" என்று கூறி கதறியழுதாள்.
ஊர்க்காரங்க சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவலர்கள் அவரைச் சிறையில் அடைத்தார்கள். பொழுது விடிந்தபின் அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்ய வில்லை" என நடந்ததை உள்ளபடி சொன்னார் சாருகர்..
குற்றம்புரிந்தவன் ஒப்புக் கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள்.
சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப் பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார். பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார். அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி, “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்...
எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர்.
சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார். கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார். ”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே. அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்து இருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே. இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே" என்று சொல்லி அழுதார். பாண்டுரங்கண் கூறினார் “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். முந்தைய பிறவியில் ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டு
இருக்கும்போது பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய், புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன்.  பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன.
கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி)..பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன்..ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை "என்று கூறினார்... 
*வாழ்கை எனும் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.* அவன் எப்போதும் எதிலும் நமக்கு தீங்கு செய்ய மாட்டான்.
விதிக்குக் கட்டுப் பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும். உங்கள்
செயலில்  கவனமாக இருங்கள்.
மற்றவை நடக்க வேண்டியவாறு நடந்தே தீரும். 💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 116
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  தந்திரம்
  யார் முட்டாள்?
  வாழ்வில் எந்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?
  1. ஒருவருடைய கஷ்ட நஷ்டங்களில் கலந்து கொள்கிறவருக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.2. தனது கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கின்ற போது.. அதை தட்டிக் கேட்கும் துண
  பதட்டம், மன உளைச்சல் முன்னேற்றத்திற்கு தடை
  உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவர
  மாற்றங்கள் மனங்களில் வரவேண்டும்
  ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,...."நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் ந
  உண்மையான நட்பில் எதுவும் தடையாக வரமுடியாது
  இந்த புகைப்படம் டமாஸ்கஸில் 1899 இல் எடுக்கப்பட்டது. குள்ளமாக உள்ளவர் சமீர். அவர் ஒரு கிறிஸ்தவர் மற்றும் அவரால் நடக்க முடியாது. அவரை முதுகில் சுமப்பவர்
  நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்
  மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார்.அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப்
  இறைவன் வகுத்த நியதி
  அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச
  இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல வேண்டுமா?
  இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும்.
  யார் பெரியவர்...?
  பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வு
  திருப்பதி
  திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா விஞ்ஞான பூர்வமான பதிவு. யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்
  படித்ததில் பிடித்தது....
   1923 வது வருடம் நடந்த சம்பவம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போழுது  பாதையில் எதிர்பாராத விதமாக ஒரு குதிரை வண்டி அவர் மேல்
  தஞ்சை பெரிய கோயில்
  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்
  தேனீக்கள் பற்றிய தகவல்
  தேனீக்கள் நீண்ட தூரம் பயணித்து, பொருத்தமான வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் வரை தற்காலிக இடங்களில் தங்கியிருக்கும்.  வாழ இடம் தேடும் தேனீக் கூட்டம், தங்க
  மனிதனாகவே இரு
  ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது.... சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர்  எடுத்து கொண்டிருந்தார்
  பலர் வீட்டில் நடப்பது தான் ......
  Wife calling ......சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?ஒரு மீட்டிங்ல இருந்தேன்.எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்ப
  Ads