Support Ads
Main Menu
 ·   · 524 posts
  •  · 3 friends
  • I

    7 followers

நீங்கள் யார் என்பதை உங்களின் எண்ணங்களே தீர்மானிக்கின்றன


ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு மந்திரி. இவங்க ரெண்டு பேரும் ஒரு நாள் மாலை நேரம்  நடைபயிற்சி  போனாங்க. ஒரு ஆத்தங்கரை ஒரமா போயிட்டு இருந்தாங்க.



அப்போ அங்கே  ஒரு கொடியில வெள்ளரிக்காய் காய்ச்சு தொங்குவதை  பார்த்த ராஜா...  "மந்திரி அந்த வெள்ளரிக்காய பறிச்சுட்டு வா சாப்பிடலாம்"ன்னு சொன்னார்.



*மந்திரி பறிக்க போனார்.  அங்கே உக்கார்ந்து இருந்த ஓரு குருடன் சொன்னான்.  ஐயா அது வெள்ளரிக்காய் இல்ல. அது குமட்டி காய். அது தின்னா வாந்தி தான் வரும்.* 



*ராஜா சொன்னார்.  யோவ் மந்திரி.!!  அத பறிச்சு சாப்பிடு.  வாந்தி வருதான்னு  பாக்கலாம்.* 



*வேற வழி இல்லாம மந்திரி சாப்பிட்டார். உடனே மந்திரிக்கு குமட்டிக்கிட்டு ஒரே வாந்தி.*



*ராஜா கேட்டார்.  யோவ்.!! கபோதி..!! இதுக்கு என்ன தீர்வு.? ன்னு.*



*அந்த குருடன் சொன்னான். அது  பக்கத்துல ஒரு கை மாதிரி பச்சை இலை இருக்கும். அத கையில கசக்கி மந்திரி வாயில விட்டா வாந்தி நிற்கும்ன்னு.*



*ராஜாவும்  அப்படியே பண்ண...  மந்திரிக்கு வாந்தி நின்னு போச்சு. மந்திரிக்கு போன உசுரு திரும்பி வந்தது.*



*ராஜா குருடனை  பார்த்து கேட்டார். உனக்கு தான் கண் தெரியாதே.?  எப்படி சரியா தீர்வு சொன்னாய்.?  குருடன் சொன்னான். ராஜா..!!  இந்த நாட்ல எங்கேயும் பஞ்சம் பசி பட்டினி.  அப்படி இருக்கும் போது எவனாவது வெள்ளரி பிஞ்ச விட்டு வச்சிருப்பானா.? எப்பவும் இயற்கை ஒரு நோய் கொடுக்கற காய கொடுத்தா இறைவன் பக்கத்துலயே  ஒரு மாற்று மருந்து வெச்சிடுவார்.*



 *ராஜாவுக்கு சந்தோஷம்.*



*இந்தா ஒரு டோக்கன். என் அரண்மனையில கிழக்கு வாசலுக்கு போ. பட்டை சாதம் கொடுப்பாங்க. சாப்பிட்டு ஜாலி யா இரு. சொல்லிவிட்டு ராஜா போய்ட்டார்.*



 *கொஞ்ச நாள் கழித்து ஒரு வெளியூர் வியாபாரி ராஜா கிட்ட வந்தான்.  ராஜா என்கிட்ட வைரம் நிறைய இருக்கிறது. வாங்குறீங்களா ன்னு கேட்டான்.*



*இது ஒரிஜினலா போலியா ன்னு எப்படி தெரிஞ்சுக்கறதுன்னு ராஜாவுக்கு குழப்பம்.  மந்திரிய கூப்பிட்டார்.*



*ஏற்கனவே ஒரு தடவை வாந்தி எடுத்த அனுபவம் இருந்ததால...*



*வைரத்தை  முழுங்கித்தொலைக்க  சொன்னா என்ன பண்றதுன்னு பயந்துட்டு  தெரியாதுன்னுட்டார்.*



*ராஜா சொன்னார்.  மந்திரி.!!  போய் அந்த கபோதிய கூட்டிட்டு வா.  அவன்தான் காரண காரியத்தோட சரியாக  சொல்லுவான்.*



*மந்திரி போய் அந்த குருடனை கூட்டிட்டு வந்தார். ராஜா சொன்னார்.  டேய் இது ஒரிஜினல் வைரமா.?  போலி வைரமா.?  இல்லன்னா ரெண்டும் கலந்து  இருக்கா ன்னு பார்த்து சொல்லு.*



*அந்த குருடன் அந்த மொத்த வைரத்தையும் எடுத்து மத்தியான வெயில்ல கொண்டு போய் வெச்சான். கொஞ்ச நேரம் கழித்து அதை  கையில எடுத்து பிரிச்சு....  ராஜா இதெல்லாம் வைரம். மற்றது எல்லாம் கண்ணாடின்னு பிரிச்சு கொடுத்துட்டான்.*



 *வியாபாரியும் எதோ தெரியாம நடந்துடுச்சு ன்னு சொல்லி எல்லா வைரத்தையும் இனாமா கொடுத்துட்டு நழுவிட்டான்.*



*ராஜாவுக்கு ஆச்சர்யம்.*



*எப்படிப்பா  கண்டு பிடிச்ச.? விவரமா சொல்லு.?*



*குருடன் சொன்னான்.*



*ராஜா.!!  வெயில்ல வைரம் சூடாகாது. ஆனா கண்ணாடி சூடாகும். அதனால சூடானது எல்லாம் கண்ணாடின்னும் சூடு ஆகாதது எல்லாம் வைரம்ன்னும் பிரிச்சேன்.*



*ராஜா சந்தோஷமா பாக்கெட்ல கைய விட்டு ஓரு டோக்கன் எடுத்து குருடன் கிட்ட குடுத்து போடா மேற்கு வாசலுக்கு. டோக்கன  குடுத்து பட்டை  சாதம் வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இருன்னு சொல்லி அனுப்பி வச்சார்.*



*இப்படியே  கொஞ்ச நாள் போச்சு. ராஜா தன் மகனுக்கு கல்யாணம் பண்ண வரன் தேட ஆரம்பிச்சார். பக்கத்து ஊர்ல இருந்து எல்லாம் இளவரசி கொடுக்க தயாராக இருந்தாங்க. ராஜாவுக்கு குழப்பம்.*



*யாரை தேர்ந்து எடுப்பதுன்னு. மந்திரிகிட்ட  கேட்கிறார். எல்லா பொண்ணுமே  நல்லா இருக்குன்னு பயந்து கிட்டே மந்திரி  சொல்றார்.*



 *ராஜா பார்த்தார்.*



 *கூப்புடுங்கடா  அந்த கபோதிய.*



 *குருடன் வந்தான்.*



 *ராஜா குருடன் கிட்ட சொன்னார்.  என் மகனுக்கு கல்யாணம் பண்ண பொண்ணு பார்க்குறேன்.  எந்த ராஜாவோட குமாரி சரியா இருக்கும்ன்னு காரண காரியத்தோட தெளிவா சொல்லு.*



*குருடன் சொன்னான்.*



 *ராஜா..!! அடுத்த நாட்டை விட்டுட்டு அதுக்கு அடுத்த நாட்டு ராஜாவோட  பொண்ண பாருங்கன்னான். அந்த ராஜா உங்க சம்பந்தி ஆயிட்டா  பக்கத்து நாட்டு ராஜா உங்க ரெண்டு பேருக்கும் நடுவில இருப்பான். அப்போ எல்லை பிரச்சினை வராது. பொண்ண கொடுத்ததால அந்த இடைப்பட்ட பகுதில பிரச்சினை வராம பார்த்துப்பான்.*



 *ராஜாவுக்கு ஒரே குஷி.*



*சபாஷ்.!! இந்தா  டோக்கன்.  அரண்மனையின் வடக்கு வாசலுக்கு போடா. பட்டை சாதம் குடுப்பாங்க. வாங்கி சாப்பிட்டு சந்தோஷமா இரு அப்படின்னார்.*



 *குருடனும் போய்ட்டான்.*



*கொஞ்ச நாள் போச்சு. ஒரு நாள் ராஜா அந்த குருடனை தன்னோட அந்தரங்க ஆலோசனை அறைக்கு  வர சொன்னார்.*



*டேய்.!!*



*நான் ஒன்னு  கேட்பேன். சரியா காரண காரியதோட சொல்லனும்.*  அப்படின்னார். குருடனும் சரின்னான். இந்த ஊர்ல  எல்லோரும் என்னைய
*பிச்சைகாரனுக்கு பிறந்த பய அப்படின்னு சொல்றாங்க. இதுக்கு நீ என்ன சொல்ற.?  சரியா சொல்லனும் என்றார்.*



 *குருடன் அமைதியா இருந்தான்.*
 *பதிலே பேசல.*



*ராஜா திரும்ப கேட்டார்.*



*குருடன் அமைதியா  சொன்னான்.*



 *ராஜா நீங்க திரும்ப திரும்ப கேட்கறதால சொல்றேன்.*



 *நெசமா நீங்க பிச்சை காரனுக்கு பிறந்தவன் தான். அதுல சந்தேகமே வேணாம்  அப்படின்னான்.*



 *ராஜாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. ரொம்ப வருத்தம். ஏன்டா என்னய பார்த்தா இப்படி கணிச்சே..?? ன்னு வருத்தமா கேட்டார்.*



*ராஜா...*



*முதல்ல குமட்டி காய பத்தி சொன்னேன். நீங்க சந்தோஷம் ஆயிட்டீங்க. ஆனா குடுத்தது பட்டை சாதத்துக்கு  இலவச டோக்கன்.*



 *நிஜமான ராஜாவா இருந்தா கையில இருந்த மோதிரத்தை கழட்டி குடுத்து இருப்பார்.*



 *அப்புறம் கோடி கணக்குல வைரம் கிடைக்க வழி செஞ்சேன். நிஜமான ராஜாவா  இருந்தா கழுத்துல இருந்த வைர மாலைய குடுத்து இருப்பார்.*



*ஆனா நீங்க குடுத்தது பட்டை  சாத டோக்கன்.*



 *மூன்றாவது... ஒரு ராஜ்ஜியமே உங்க கைகுள்ள வருவதற்கு வழி சொன்னேன்.  உண்மையான  ராஜாவா இருந்தா நாலு கிராமத்த எழுதி  குடுத்து இருப்பார்.*



*நீங்க குடுத்தது வடக்கு வாசல் பட்டை  சாத டோக்கன்.*



*ஆக....  சோத்தை தாண்டி உங்க எண்ணம் போகல. உலகத்துலேயே பெரிய விஷயம் சோறுன்னு முடிவு பண்ணிட்டீங்க. இதுல இருந்து தெரியல.?*  



*நீங்க பிச்சைக்காரனுக்கு பிறந்தவன்னு.?  ஏன்னா உங்க புத்தி டோக்கனோடவும் பட்டை சாதத்தோட வும்  முடிஞ்சு போச்சு. அதுக்கு மேல போகல என்றான்.*



*மன்னர் வெட்கி தலைகுனிந்தார்.*
நீங்கள் யார் என்பதை உங்களிடம் இருக்கும் *பணமோ,சொத்தோ,*
*பதவியோ* தீர்மானிப்பதில்லை..
*உங்கள் எண்ணங்களே தீர்மானிக்கின்றன...


💓0 😆0 😲0 😥0 😠0 0
  • 107
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
    Ads
    Featured Posts
    சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
    கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
    என்னைப் போன்ற  ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
    சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
    பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
    நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
    மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
    மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
    சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
    சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
    வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
    முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
    மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
    மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
    படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
    *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
    அதிபத்த நாயனார்  குருபூஜை
    அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
    ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
    ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
    பக்தி
    பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
    நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
    குட்டி கதை - வாழ்வியல் நீதி
    எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
    வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
    லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
    பொது அறிவு தகவல்கள்...!
    பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
    Ads
    Latest Posts
    தந்திரம்
    யார் முட்டாள்?
    வாழ்வில் எந்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?
    1. ஒருவருடைய கஷ்ட நஷ்டங்களில் கலந்து கொள்கிறவருக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.2. தனது கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கின்ற போது.. அதை தட்டிக் கேட்கும் துண
    பதட்டம், மன உளைச்சல் முன்னேற்றத்திற்கு தடை
    உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவர
    மாற்றங்கள் மனங்களில் வரவேண்டும்
    ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,...."நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் ந
    உண்மையான நட்பில் எதுவும் தடையாக வரமுடியாது
    இந்த புகைப்படம் டமாஸ்கஸில் 1899 இல் எடுக்கப்பட்டது. குள்ளமாக உள்ளவர் சமீர். அவர் ஒரு கிறிஸ்தவர் மற்றும் அவரால் நடக்க முடியாது. அவரை முதுகில் சுமப்பவர்
    நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்
    மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார்.அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப்
    இறைவன் வகுத்த நியதி
    அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச
    இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல வேண்டுமா?
    இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும்.
    யார் பெரியவர்...?
    பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வு
    திருப்பதி
    திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா விஞ்ஞான பூர்வமான பதிவு. யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்
    படித்ததில் பிடித்தது....
     1923 வது வருடம் நடந்த சம்பவம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போழுது  பாதையில் எதிர்பாராத விதமாக ஒரு குதிரை வண்டி அவர் மேல்
    தஞ்சை பெரிய கோயில்
    தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்
    தேனீக்கள் பற்றிய தகவல்
    தேனீக்கள் நீண்ட தூரம் பயணித்து, பொருத்தமான வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் வரை தற்காலிக இடங்களில் தங்கியிருக்கும்.  வாழ இடம் தேடும் தேனீக் கூட்டம், தங்க
    மனிதனாகவே இரு
    ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது.... சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர்  எடுத்து கொண்டிருந்தார்
    பலர் வீட்டில் நடப்பது தான் ......
    Wife calling ......சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?ஒரு மீட்டிங்ல இருந்தேன்.எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்ப
    Ads