Support Ads
Main Menu
 ·   · 524 posts
 •  · 3 friends
 • I

  7 followers

அந்த காலம்.....

1950..60களில் ...  OLD தஞ்சாவூர் ...  பழைய Tanjore ..

மணிக்கூண்டு கடிகாரத்தை பார்த்து

நேரம்..

காலம்..

தெரிந்து கொண்ட காலம் ...


6 மணி சங்கு .. 10 மணி சங்கு ... 1 மணி சங்கு ... 5 மணி சங்கு .. 8 மணி சங்கு... .. சங்கு ஊதலை கேட்டு நேரம் தெரிந்துகொண்ட காலம்..


கைக்கடிகாரம் அரிதாக இருந்த காலம்... கைக்கடிகாரம் கட்டியவர்களை வசதி படைத்தவர்களாக பார்த்த காலம்...


கைக்கடிகாரத்தை தினமும் கீ கொடுத்து .. வைண்டிங் செய்து.. நேரம் பார்த்து ..அதனை பொக்கிஷமாக வைத்திருந்த காலம்..


நாட்டு ஓடு வீடுகள் அதன் நடுவில் முற்றம் .. மழை பெய்தால் குற்றால அருவி போல் கொட்டும் காலம்


பெரிய கூட்டுக் குடும்பங்கள்

ஓயாத பிள்ளைகள் சத்தம்


சாணி தரையில் தவழ்ந்து நகர்ந்த சிறு குழந்தைகள் ... பிள்ளைகள் நிறைந்த சலசலப்பான வீடுகள் ... பிள்ளைகளெல்லாம் வீட்டின் நடு கூடத்தில் ... ஒன்றாக விளையாடி.. கதை பேசி.. பாய் விரித்து.. ஏழரை மணிக்கெல்லாம் தூங்கி ..காலை ஆறு மணிக்கு முன் எழுந்த காலம்.


வீட்டுக்கு ஒரு மாடு ... மாட்டு கொட்டகை ... கோனார் கறந்த பாலில் தயிர் உரைக்கு ஊற்றி காலையில் மத்தை வைத்து மோர் கடைந்து ... திரண்ட வெண்ணையில் நெய் உருக்கிய காலம் ..

வீட்டு முன் .. பெண்கள் சாணி தெளித்து.. அதிகாலையில் கோலம் போட்ட நாட்கள் ..


சாணி பூசிய அடுப்பாங்கரை .. கரி படிந்த சமையக்கட்டு ... சாணி மொழிவி.. கோலம் போட்ட அடுப்பை .... தரையில் உட்கார்ந்து .. ஊதாங்குழாயில் ஊதி ... புகையுடன் போராடி .. விறகை பற்றவைத்து .. சமையல் செய்த காலம்.


பெரியவர்களை .. ஜாதி பெயர் ... பட்டப்பெயர்... சொல்லி மரியாதையாக கூப்பிட்ட காலம் ..


பிள்ளைக் குட்டிகள் பிறக்கும் போது .. வீட்டிலேயே பிரசவம் ... மிட் வைப் (midwife) என்று சொல்லக்கூடிய நர்சு அம்மாக்கள்.. செலவில்லாமல் பிரசவம் பார்த்த காலம் ..


14..15 வயதில்கூட பெண்களுக்கு திருமணம் ... ஒரு குடும்பத்தில் சகஜமாக எட்டு, பத்து பிள்ளைகள் பெற்றெடுத்த காலம்


வீட்டில்.. பிள்ளை குட்டிகளுக்கு உடம்பு சரியில்லை என்றால்.. ஐயங்கடை தெரு பிள்ளை வைத்தியர் வீட்டுக்கு சென்ற காலம் ..


எல்லாம் பாட்டி வைத்தியம் தான் .. காது வலி என்றால் மிளகாய் கூட்டில் காய்ந்த நல்லஎண்ணையை காதில் ஊற்றிய காலம் ... வயிற்று போக்குக்கு கடுக்காயை ..நீர் கோர்த்து ..கல்லில் தேய்த்து ..வழித்து ..தண்ணீர் கலந்து சங்கில் கொடுத்த காலம் . புண், கீறல், காயம், பூச்சிக்கடிக்கு ...கைவசம் தெரிந்த ஒரே மருந்து .. "சைபால்" டப்பா மருந்து தான்..


குப்புசாமி, கோவிந்தசாமி, அந்தோணிசாமி என்ற எல்லா சாமிகளின் பெயரை வைத்து கூப்பிட்ட காலம்..


வீட்டில் பிளஷ் அவுட் கக்கூஸ் கிடையாது மாறாக “ட்ரய் லெட்ரீன்” (DRY LATRINE) என்று சொல்லக்கூடிய கழிவறை ... தண்ணீர் சொம்பை கட்டை சுவர் மீது வைத்து வீட்டுக்கு அப்பால் இருந்த கழிவறைகளுக்கு சென்ற காலம். கழிவுகளை .. தினமும்.. துப்புரவாளர்கள் ... சாம்பல் தெளித்து .. துப்புரவு கரண்டி மூலம் வாறி ... அப்புறப்படுத்திய கொடுமையான காலம்..


ஆட்டுக்கறி மலிவாக வாங்கி அதன் மீது உப்பு மஞ்சள் தூள் தடவி ... நல்லெண்ணெயில் புரட்டி கோணி ஊசியில் கோர்த்து ... காயவைத்து ... உப்புக்கண்டம் போட்ட காலம்


வீட்டிலேயே வடகம் ...முறுக்கு அச்சில் விரித்த துணியில் பிழிந்து ... அதனுடன் தாளிக்கிற வடகம் உருட்டி வெயிலில் காய போட்ட காலம்.


வீட்டில் பச்சரிசி வாங்கி ஊறப்போட்டு காயவைத்து உலக்கையில் இடித்து முறுக்கு சுட்ட காலம்...


பூக்காரத்தெரு பூச்சந்தையில்.. கோடையில்.. பெரிய குடைமிளகாய்.. சின்ன குடைமிளகாய் வாங்கி.. ஈக்கு குச்சியில் குத்தி .. உப்பு ..புளிச்சத்தயிரில் .. புரட்டி .. ..ஊறப்போட்டு .. காயவைத்த காலம் ..


பெண்கள் நேரம் கிடைக்கும் கிடைக்கும்போதெல்லாம் கம்பிளி நூலினை வாங்கி ஸ்வெட்டர் நிட்டிங் செய்த காலம்...


பூச்சந்தையில் சேர் கணக்கில் மல்லிகை பூ மற்றும் கனகாம்பரம் வாங்கி.. வீட்டிலேயே.. பூ பிண்ணிய காலம்..


டெலிகிராம் தந்தி வந்தால் வீடே கூடி என்ன செய்தி வந்துள்ளது என்று ஆர்வத்துடன் கேட்ட சமயம்.


பொழுதுபோக்கு ... தாயம் .. பல்லாங்குழி.

சட்டினி .. துவையல் .. குழம்பு மிளகாய் கொத்தமல்லி

அரைப்பதற்கு அம்மி குலவி

தோசை இட்லி மாவுக்கு ஆட்டுக்கல்...

தோசை ஊற்றுவதற்கு கல்லில் செதுக்கிய தோசைக்கல்..

குறவர்கள் கூவி விற்ற கொக்கு, மணிப்புறா, கௌதாரி, உள்ளான் மற்றும் காட்டு முயல்கள்..

விறகு வண்டிகளில் .. முந்திரி விறகு .. சவுக்கு மிலாறு .. துவரை மிலாறு வாங்கின காலம் ...

கோமணம் கட்டி ... வீட்டு கேணியில் .. பூட்டுக்கயிறு போட்டு .. வாளியில் தண்ணீர் இறைத்து குளித்த காலம்..

பெரிய திண்ணை வீடுகள்.. நடந்து செல்பவர்கள் தைரியமாக வீடுகளில் செம்பு தண்ணி வாங்கி குடித்து .. திண்ணையில் ஓய்வெடுத்து சென்ற காலம்.

பள்ளிகளுக்கு ஒரு சின்ன மஞ்ச பையில் .. சிலேட்டு, சிலேட்டு குச்சி இரண்டு மூன்று புத்தகங்கள் ..ஸ்கூல் பாக் பற்றி தெரியாத காலம்

பள்ளிப் பிள்ளைகள் வாத்தியாரிடம் பிரம்படி வாங்கி .. பெஞ்சு மேல் ஏறி நின்ற காலம்.

பள்ளிப்பருவத்தில் சில்லு, பளிங்கி, பம்பரம் விளையாடிய காலம்..

“சாட் - பூட் – த்திரி” போட்டு ... ஐஸ் பாய்.. கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிய காலம்..

பசித்தால் .. தட்டு கடையில் பாட்டி விற்ற .. ஜவ்வு மிட்டாய் ..தேன் மிட்டாய் .. கமர்கட்டு

ஐஸ் அபூர்வமாக பார்க்கப்பட்ட காலம் ..; 1960களில் குச்சி ஐஸ் அறிமுகம் .. சைக்கிள் ஹாண்டல் பாரில்... இரண்டு பெரிய பிளாஸ்க் கேண்கள் மாட்டி .. "ஐஸ் ப்ரூட் .. ஐஸ் ப்ரூட்" என்று தெருக்களில் கூவி விற்ற காலம் ..


ஐஸ் ப்ரூட் .. சேமியா ஐஸ் வாங்கி.. சொட்ட சொட்ட உறிஞ்சி சாப்பிட்டு.. யூனிபார்ம் சட்டைகளெல்லாம் சிவப்பு கலர் கறையாக மாறின காலம்..

மரங்களில் ஏறி குரங்கு விளையாட்டு..


பட்டம் செய்து .. நூலில் மாஞ்சா தடவி .. டீல் விட்ட காலம்.


டி.வி., செல்போன் இல்லாத காரணத்தால்.. கதை சொல்பவர்களுக்கு நல்ல மவுசு ... குறிப்பாக சினிமா கதை கேட்பதென்றால் ஆர்வமுடன் கேட்ட காலம்.


"புல் புல் தாரா"வை நண்பரிடம் வாங்கி.. நம்பரை பார்த்து...கற்று .. சினிமா பாட்டு வாசித்த காலம் ...


சைக்கிள் டியூப் ரப்பரில் கேட்டாபெல்ட் செய்து சிட்டுக்குருவிகளை வேட்டையாடிய காலம்..


சைக்கிளில் ஊர் சுற்றிய காலம் ... சைக்கிள் கம்பெனியில் வாடகை சைக்கிளை எடுத்து .. மாரியங்கோயிலுக்கு சென்று ... விளாரி செடியில் கோத்த குச்சி முறுக்கு வாங்கி.. சைக்கிள் ஹாண்ட் பாரில் தொங்கவிட்டு சாப்பிட்ட காலம் ....


சைக்கிளில் டைனமோ லைட்.. எண்ணெய் லைட் பொருத்தி ஒட்டிய காலம்


சைக்கிள் ரிம்மில் குச்சியை வைத்து ரோட்டில் ‘’ரோதை’ ஒட்டிய காலம்... குரங்கு பெடல் போட்டு .. சைக்கிள் ஓட்ட கற்ற காலம் ..


சினிமா பைத்தியங்களாக .. ஒரு சினிமா விடாமல் .. நாலணா தரை டிக்கெட்டில் சினிமா பார்த்த காலம்.. படம் பார்த்த பிறகு அந்த பட பாட்டு புத்தகங்களை வாங்கி ... சினிமா பாடல்களை மனப்பாடம் செய்து பாடிய காலம் .. ஒரு டூரிங் டாக்கீஸ் கூட விடாமல் .. மணலில் உட்கார்ந்து பார்த்த .. கருப்பு வெள்ளை ... MGR, சிவாஜி .. சினிமா படங்கள்...

இப்போதுள்ள விஜயா தியேட்டர் பர்மா பஜார் ஒரு காலத்தில்.. சாக்கடை- மேடு ஒத்தையடி பாதை .. நியூ டவரில் சினிமா பார்க்க ... இரண்டு புறமும் பள்ளமான இந்த நடைபாதையில் குறுக்கே நடந்த அழியாத ஞாபகம் ..


பெட்ரோமாக்ஸ் லைட்டு .. பாண்டு வாத்தியங்களுடன் ... சினிமா பிட் நோடீஸ் கொடுத்து .. நான்கு வீதிகளையம் கீழவாசல் கோட்டை கதவு வழியாக (இந்த வரலாறு முக்கியம் கொண்ட கோட்டை நுழைவு வாயில் மற்றும் கோட்டை கதவு, 1994ஆம் ஆண்டு அகற்றப்பட்டு, அழிக்கப்பட்டது) மார்க்கெட் பகுதியையும் சுற்றி வந்த தள்ளு வண்டி தட்டி சினிமா விளம்பரங்கள் ..

சுவரெல்லாம் .. .. "விரைவில் வருகிறது" ... "10-10-'65 முதல்" .. "10வது வாரம்" ... "கடைசி வாரம்" ... ஸ்லிப் ஒட்டிய ... வண்ண வண்ண சினிமா போஸ்டர்கள்..

நாங்கள் பார்த்து மகிழ்ந்த இந்தி படங்கள் ... 1950களில் "பீ சால் பாத்" ... 1960களில் "ஆராதனா" ... 1970களில் "பாபி" ..."ஷோலே"

பூரண மதுவிலக்கு.. குடிப்பழக்கம் என்னவென்று தெரியாத காலகட்டம்..


திருட்டுத்தனமாக தெற்கே இருந்து சாராயம்காச்சி ... சைக்கிள் டியூபில் நிரப்பி .. இடுப்பில் சுற்றி .. முந்திரி காடு குறுக்கே நடந்து.. கடத்தி ... திகில் மாளிகையில் கள்ள சாராயம் விற்ற காலம். (“திகில் மாளிகை” ராஜா காலத்து மண்டபம், அருளானந்த நகர் 7வது கிராஸ் கீழண்ட பகுதியில் ... சிட்கோ வடபுறத்தில் இருந்தது).


கரி என்ஜின் பொருத்திய ரயில் வண்டியில் பயணம் செய்து தலைமுடியில் எல்லாம் கரித்தூள் ஆகிய காலம் ..


சுவரெல்லாம் கரியில் எழுதிய விளம்பரங்கள் ... தாஜ் மஹால் பீடி .. 555 பீடி .. பார்வதி மார்க் சுருட்டு ... 1431 பயோரியா பற்பொடி .. NVS .. TAS ரத்தினம் பட்டினம் பொடி ..


பெரியவர்கள்.. வாழை பட்டையில் லேபிள் ஒட்டி கட்டிய மூக்குப்பொடி பொட்டலம் வாங்கி ... உறிஞ்சி .. பொடி போட்ட காலம்..


மணிக்கூண்டு ஆர்ச் பக்கத்தில் .. லாரி டயரில்.. தோல் வார் கோத்த செருப்பு வாங்கி ... எங்கு போனாலும் நடந்து சென்ற காலம் ..

வல்லம் கப்பி வெட்டி.. ஏற்றி சென்ற வல்லம்-தஞ்சாவூர் ரயில்வே லைன் ... மைனர் ஜெயில் ரோட்டில் இருந்த ரயில்வே கேட் ..

போன் அபூர்வமாக இருந்த காலம் .. PCO போன் கிடையாது... பக்கத்து பணக்கார வீட்டு போனை நம்பி வாழ்ந்த காலம் ..

அவ்வீட்டின் பக்கத்து வீட்டுக்கோ எதிர் வீட்டுக்கோ போன் வந்தால் ...தெரு வாசலில் நின்று எதிர் வீட்டுக்கு கேட்கும்படி "உங்க வீட்டுக்கு போன் வந்திருக்கு ... சீக்கரம் வந்து பேசுங்க ... லைனில் இருக்கிறார்கள் ..' என்று கூப்பிட்ட காலம் ..


1940 களில் தெற்கு தஞ்சை விரிவாக்கம் ... நியூட்டவுன் குடியிருப்புகள் உருவான காலம் ... அரசுக்கு சொந்தமான இடங்கள் முனிசிபாலிட்டி மூலம் பிளாட்டாகி ராஜப்பா நகர் ... மற்றும் ரயில்வேக்கு சொந்தமான இடங்களும் முனிசிபாலிட்டி மூலம் பிளாட்டாகி ... voc நகர் உருவான காலம்.. (Tanjore New Town Scheme).


தெற்கு தஞ்சை நகரமெல்லாம் முந்திரிக்காடாக இருந்த காலம்.


நாடார் வீட்டு முந்திரி தோப்புகள் பல.. அரசுடைமையாக்கப்பட்டு .. ஹவுசிங்யூனிட் (1960களில் ஓல்ட் ஹவுசிங்யூனிட்.. 1970களில் நியூ ஹவுசிங் யூனிட்.), அதன் எதிர்புறத்தில் உள்ள நெல் கோடௌன்கள் (1960களில்), அருளானந்த நகர்  போலீஸ் குவாட்டர்ஸ்(1960களில்), சிட்கோ சைக்கிள் பாக்டரி(1960களில்), அரசு பால் பண்ணை (MILK SOCIETY) -ஆவின் பால் நிலையம் (1960களில்) .. உருவான காலம் .. இது போக .. நாடார் குடும்பம் ..தானமாக கொடுத்த இடங்கள் ஏராளம்..


மேலும் மற்ற தெற்கு தஞ்சை முந்திரி காடுகள் .. குடியிருப்பு நகர்களாக மாறிய காலம்.


வேகமாக .. தெற்கு தஞ்சை குடியிருப்பு பகுதிகள் உருவாக ... பழைய நகர தெருவாசிகள்... புதிய நகர்களில் வீடுகட்டியவர்களை "காட்டுக்குள் வீடு கட்டுகிறார்கள்" என்று கிண்டலடித்த காலம் .....

மாட்டு வண்டி .. குதிரை வண்டியில் ... சவாரி செய்த காலம் ..


கார்கள் கிராமத்திற்கு சென்றால் “"பிளசர்” வந்திருக்கு" என்று ஆச்சிரியமாக பார்த்த காலம் ..


சிறுவர்கள் மேல் வார் பொருந்திய அரை டவுசர் ..அரை டிராயர் ..போட்ட காலம் ..


சைனாக்கார குடும்பங்கள் தஞ்சையில் ... காந்திஜி ரோட்டில் பல் பிடுங்கும் ஆஸ்பத்திரி நடத்தி வந்த காலம்..


மங்களாம்பிகா ஓட்டல் ... ஆனந்தா லாட்ஜ்... அய்யர் ஹோட்டல்கள் கொடிகட்டி பறந்த காலம். மணிக்கூண்டு ராணி பூங்காவில் .. தினந்தோறும் .. மக்கள் கூடி .. ஆல் இந்தியா ரேடியோ .. ஆகாஷவாணி ஆறரை மணி நியூஸ் கேட்ட காலம்..


“நிரந்தரம் என்று சொல்லிக் கொள்வதெல்லாம் நிரந்தரமின்றி போக

மாற்றங்கள் மட்டுமே நிரந்தரமாக்கிப் போகும்

காலத்தின் சுழற்சியால்..”

காலம் ... மாறுவதற்கே காலம் .. நினைவுகள் தொடரும் ...

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 91
 • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  தந்திரம்
  யார் முட்டாள்?
  வாழ்வில் எந்த மனிதர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்?
  1. ஒருவருடைய கஷ்ட நஷ்டங்களில் கலந்து கொள்கிறவருக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.2. தனது கண்முன்னே ஒரு அநியாயம் நடக்கின்ற போது.. அதை தட்டிக் கேட்கும் துண
  பதட்டம், மன உளைச்சல் முன்னேற்றத்திற்கு தடை
  உலகத்தையே ஜெயிக்க நினைத்த பிரான்ஸ் மாவீரன் நெப்போலியன் கடைசி காலத்தில் பிரிட்டனிடம் தோல்வி அடைந்தார். தோல்வி அடைந்த நெப்போலியனை பிரிட்டிஷ் ராணுவம் அவர
  மாற்றங்கள் மனங்களில் வரவேண்டும்
  ஒரு புகழ்பெற்ற ஞானியிடம் சிலர் சென்று,...."நாங்கள் புண்ணிய யாத்திரை சென்று புனித நதியில் நீராடி வரலாம் என்று இருக்கிறோம். நீங்களும் எங்களோடு வந்தால் ந
  உண்மையான நட்பில் எதுவும் தடையாக வரமுடியாது
  இந்த புகைப்படம் டமாஸ்கஸில் 1899 இல் எடுக்கப்பட்டது. குள்ளமாக உள்ளவர் சமீர். அவர் ஒரு கிறிஸ்தவர் மற்றும் அவரால் நடக்க முடியாது. அவரை முதுகில் சுமப்பவர்
  நம்பிக்கை இழக்காமல் இருக்க வேண்டும்
  மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார்.அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப்
  இறைவன் வகுத்த நியதி
  அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச
  இடி இடிக்கும் போது அர்ஜுனா என்று சொல்ல வேண்டுமா?
  இடி இடிக்கும் போது, சிலருக்கு காது ஙொய்ங் என்ற சத்தத்தோடு ரீங்காரம் பாடுவதைக் கேட்கலாம். அதன் பிறகு சில நிமிடங்கள் காதுகள் இரண்டும் அடைத்துக்கொள்ளும்.
  யார் பெரியவர்...?
  பெருமாள் பக்தன் ஒருவன், தன் பூலோக வாழ்வை முடித்து வைகுண்டம் சென்றான். பெருமாள் சயனத்தில் இருந்தார். அருகில், லட்சுமி அமர்ந்து அவரது கமலமுகத்தை மகிழ்வு
  திருப்பதி
  திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா விஞ்ஞான பூர்வமான பதிவு. யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்
  படித்ததில் பிடித்தது....
   1923 வது வருடம் நடந்த சம்பவம் பாம்பன் சுவாமிகள் சென்னையில் ஒரு ரோட்டில் நடந்து செல்லும் போழுது  பாதையில் எதிர்பாராத விதமாக ஒரு குதிரை வண்டி அவர் மேல்
  தஞ்சை பெரிய கோயில்
  தஞ்சை பெரிய கோயில் கட்டி முடிக்க பட்டு குட முழுக்கு கும்பாபிஷேகத்துக்கு நாளும் குறிக்கப்பட்டு விட்ட நேரம் அது...கோயில் எதிர்பார்த்தபடி நல்லபடியாய் கட்
  தேனீக்கள் பற்றிய தகவல்
  தேனீக்கள் நீண்ட தூரம் பயணித்து, பொருத்தமான வாழ்விடத்தைக் கண்டுபிடிக்கும் வரை தற்காலிக இடங்களில் தங்கியிருக்கும்.  வாழ இடம் தேடும் தேனீக் கூட்டம், தங்க
  மனிதனாகவே இரு
  ஒரு முறை மகாகவி காளிதாசர் வயல்வெளியே வெயிலில் நடந்து சென்ற போது தாகம் எடுத்தது.... சற்று தூரத்தில் ஒரு துறவி கிணற்றில் தண்ணீர்  எடுத்து கொண்டிருந்தார்
  பலர் வீட்டில் நடப்பது தான் ......
  Wife calling ......சொல்லு, எதுக்கு கால் பண்ணுனே?ஏன் ரெண்டுதடவையும் எடுக்கல?ஒரு மீட்டிங்ல இருந்தேன்.எனக்குத் தோணும்போது போன் பண்ணி சொல்ல நினைச்சா, அப்ப
  Ads