Support Ads
 ·   ·  969 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

ராம நாமத்தால் வந்த மதிப்பு

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர்  வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து ஐந்து வயதிலேயே கணவரையும் இழந்துவிட்டார். 
விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்துவிட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் துக்கிரி அத்ருஷ்டம்‌கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர்.
வீட்டை விட்டு எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர்.
நிராதரவாக இருக்கும் உறவினருக்கு உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர், லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள் வீட்டிற்கே அனுப்பிவிடுவர்.
யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. போனாலும் யார் கண்ணிலாவது பட்டுவிட்டால் துக்கிரி என்று திட்டுவார்கள். 
அவர்கள் செல்லும் காரியம் இவளைப் பார்த்ததால்  கெட்டுவிடும் என்று நினைக்கும் சமூகக் கட்டமைப்பு. 
அவள் விடியும்‌முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்துகொள்வாள். 
பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம் மிகவும்‌பிடித்து விட்டது. 
வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். 
சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்து க் கொண்டது. பொழுது போகாதபோதெல்லாம் நாமம் சொல்லிக்கொண்டிருந்தவள் எப்போதுமே  நாமம் சொல்லத் தொடங்கினாள். 
ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள்.
இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள்.
இப்படியே அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின. 
அவர்களுக்கு தனக்குத் தெரிந்த  கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.
ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. 
ஏம்மா அழற?
அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி.வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம்.
அம்மா அழுதுண்டே இருக்காங்க..
சரி, அழாத.. இங்க வா..
ராம நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல.
 உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள்.
சரி பாட்டி 
என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில்  தாயுடன திரும்பி வந்தது.
அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல. 
நீங்க நாமா கொடுத்தேள் னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார்.
வைத்தியரும் எல்லா நாடியும் சுத்தமா இருக்கு. இனி வ்யாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார்.
என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள்.
விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது.
யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள்.
யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை.
துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் க்ருஹப்ரவேசம் எல்லாம்.
அத்ருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவைரும் வரவேற்கும்படி செய்தது எது?
அவளைப் பிடித்துக்கொண்ட ராமநாமமன்றோ?.
  • 197
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்