ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம்.
அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.
ஒரு நாள் கடவுள் நேர்ல வந்து “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்.
குப்புசாமியும் ரொம்ப நேரம் யோசிச்சுட்டு “கடவுளே, எனக்கு எப்பவும் சாவே வரக்கூடாது”னு கேட்டானாம்.
கடவுள் கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு “இது இயலாத காரியம். இருந்தாலும் நீ புரிந்த கடும் தவத்திற்காக நீ வேண்டிய படி நடக்கட்டும்!"னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சுட்டாராம்.
குப்புசாமிக்கோ தல கால் புரியல. சந்தோஷத்துல துள்ளிக் குதிச்சு வீட்டுக்குப் போய்ட்டு இருந்தானாம்.
வழியில பெரியவர் ஒருத்தர் குப்புசாமிகிட்ட வந்து “உம் பேரு என்னப்பா?"னு கேட்டாராம்.
அதுக்கு குப்புசாமி “குப்புமி”னு சொன்னானாம். தப்பா சொல்லிட்டமேனு திரும்பவும் சொல்ல, மறுபடியும் "குப்புமி"னு சொன்னானாம். எத்தன தடவ சொன்னாலும், "குப்புமி"னு தான் அவன் வாய்ல வந்துச்சாம்!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
பாவம் கடைசி வரைக்கும் அவனுக்கு *"சா”*வே வரலையாம்!
இதையெல்லாம் மறஞ்சிருந்து பாத்துட்டு இருந்த கடவுள் சொன்னாராம்.....
*"வரம் கேக்குற உனக்கே இத்தன கொழுப்புனா, குடுக்குற எனக்கு எவ்ளோ இருக்கும்!"*
குப்பா, குப்பா