Support Ads
 ·   ·  980 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

அழகு என்பது மனதில் உள்ளது.............

 ஒரு அழகான பெண்.......

 பார்க்கிறதுக்கு தேவதை மாதிரி இருக்கிறவங்க.... ஒரு விமானத்தில் ஏறினாங்க... ஏறி தனது சீட்டை தேடினாங்க.... அங்க போய் பார்த்தா, அவங்க சீட்க்கு அடுத்த சீட்ல ரெண்டு கையையும் இழந்த ஒருத்தர் உக்கார்ந்திருந்தார்... 

 இவங்களுக்கு அவரை பார்த்ததும் ஒரு மாதிரியா அசூசையா இருந்திச்சு....இந்தாளு பக்கத்தில நாம எப்படி உக்காரது...அப்டின்னு யோசிச்சு, விமான பணிப்பெண்ணை கூப்பிட்டு, "எனக்கு வேற இடத்தில சீட் அரேன்ஜ் பண்ணுங்க.."ன்னு கேட்டாங்க.. அதுக்கு விமான பணிப்பெண், "ஏன் என்னாச்சு உங்க சீட்டுக்கு..?"ன்னு கேட்டதுக்கு, "எனக்கு அவர் பக்கத்தில உக்கார்ந்திட்டு வர அருவருப்பா இருக்கு.... அதான்..." அப்டின்னதும், விமான பணிப்பெண்ணுக்கு தூக்கி வாரிபோட்ருச்சு...

 பார்க்க இவ்ளோ டீசென்ட்டா இருக்காங்க... ஆனா இவ்ளோ நாகரீகம் இல்லாம பேசுறாங்களேன்னு சங்கடப்பட்டாலும், ஏதும் பண்ண முடியாதே... அவங்க பயணியாச்சே.... வேற வழி.... "இருங்க மேடம் நான் பாக்குறேன்...."ன்னு சொல்லிட்டு செக் பண்ணி பாக்குறாங்க.. எங்கயும் சீட் காலி இல்லை... அந்த பெண்கிட்ட திரும்பவும், "மேடம்... எந்த சீட்டும் காலி இல்லை... கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க... நான் கேப்டன் கிட்ட பேசிட்டு உங்களுக்கு வேற ஏதாவது மாற்று ஏற்பாடு பண்ண முடியுமான்னு கேட்டு வரேன். அதுவரை பொறுத்திருங்க... ப்ளீஸ்... "ன்னு சொல்லிட்டு கேப்டன் ரூம்க்கு போனாங்க..

 கொஞ்ச நேரத்தில திரும்பி வந்து, "மேடம்...நீங்க எடுத்திருக்கிற டிக்கெட் எக்கானமி கிளாஸ்... ஆனா எக்கானமி க்ளாஸ்ல உங்களுக்கு  ஒதுக்குறதுக்கு வேற சீட் இல்லை.  முதல்வகுப்பு பிரிவில் மட்டும் தான் ஒரு சீட் காலியா இருக்கு... ஆனாலும் நீங்க எங்களோட மதிப்பு வாய்ந்த பிரயாணி.. உங்களோட கோரிக்கையையும் பரிசீலிக்காம இருக்க முடியாதே.. அதனால, எங்கள் பயண வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு எக்கானமி கிளாஸ் பயணி ஒருத்தருக்கு முதல் வகுப்பு சீட்டை ஒதுக்க போறோம்.... கொஞ்சம் பொறுங்க.."அப்டின்னு சொன்னதும் அந்த பெண்மணிக்கு சந்தோசம் தாங்கல...   விமானப்பணிப்பெண்ணின் பதிலுக்கு கூட காத்திருக்காம, முதல்வகுப்புக்கு போக தயாரானாங்க... 

 ஆனா அங்க நடந்ததே வேற.  விமான பணிப்பெண் நேரா அந்த இரண்டு கைகளையும் இழந்தவர்கிட்ட போய், "சார்.... தயவுசெய்து மன்னிச்சிடுங்க.. உங்க லக்கேஜ் எல்லாம் நான் எடுத்திட்டு வரேன்.... நீங்க முதல் வகுப்புக்கு வாங்க சார்... உங்க பக்கத்தில இவங்களை போல ஒருத்தரை உக்காரவைக்க எங்களுக்கு மனமில்லை.. " அப்டின்னு பணிவா சொன்னதும் விமானத்தில் இருந்த எல்லாரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்து அந்த முடிவை மகிழ்ச்சியோடு வரவேற்தாங்க.... 

 அந்த அழகான பெண்ணுக்கு ரொம்ப அவமானமா போச்சு... சங்கடத்தோட நெளிஞ்சுக்கிட்டே நின்னாங்க... 

 அப்போ அந்த கைகளை இழந்த அந்த நபர் எழுந்து, "நான் ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி மேன்... கார்கில் போரில் என்னோட இரண்டு கைகளையும் இழந்திட்டேன்... முதல்முறையா இந்த பெண் சொன்னதை கேட்டதும், இவங்கள மாதிரி ஆட்களுக்காகவா நாம அவ்ளோ கஷ்டப்பட்டு போரில் ஈடுபட்டோம்னு ரொம்ப வருத்தமா இருந்திச்சு... ஆனா இப்போ நீங்க எல்லாரும் கை தட்டி ஆராவாரம் செய்றதை கேட்டதும் மனசுக்கு ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது... உங்களை போன்ற இவ்ளோ நல்ல குடிமக்களுக்காக நான் கைகளை இழந்ததிற்காக சந்தோசப்படுறேன்..." அப்டின்னு சொல்லிகிட்டே முதல்வகுப்பை நோக்கி மெதுவா நடக்க ஆரம்பிச்சார்...

 அந்த பெண்மணியோ அவமானத்தின் உச்சத்தில் இருந்தாங்க... யாரையும் பார்க்கும் தைரியமின்றி தலையை குனிஞ்சு உட்கார்ந்துக்கிட்டாங்க...

அழகு என்பது நாம பாக்குற வெளித்தோற்றத்தில் இல்லை... . மனதில் உள்ளது.............

  • 221
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்