Support Ads
Main Menu
 ·   · 284 posts
 •  · 2 friends
 •  · 6 followers

திருப்பதி பற்றிப் பலரும் அறிந்திராத செய்திகள்.

திருப்பதி என்பது அடிவாரப் பகுதியையே குறிக்கும். திருமலை என்பதே கோவிலுள்ள பகுதியைக் குறிக்கும். திருமலை பற்றி பலரும் அறியாத செய்திகள் சிலவற்றை இங்கு காண்போம்.


🌷1. திருமலை ஏழுமலையானுடைய சிலை, "சிலாதோரணம்" என்ற விசித்திரமான கல்லில் செதுக்கப்பட்டது. இக்கல்லானது, திருமலையில் மட்டுமே காணப்படுகிறது. இக்கல்லினுடைய ஆயுள், சுமார் 250 கோடி ஆண்டுகளென, மண்ணியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.


🦅2.திருமலை ஏழுமலையானுடைய பிரசாதம், உடைந்த மண்சட்டியில் வைத்துப் படைக்கப்படும் தயிர்ச்சோறு ஆகும். இப்படி ஒரு பிரசாதப்படையல், வேறு எந்த கடவுளுக்கும் படைக்கப் படுவதில்லை.


🙏3."தற்போதுள்ள செயற்கையான பச்சைக்கற்பூரத்தை, தொடர்ந்து சிலவாரங்கள், கருங்கல்லில் தடவினாலே வெடிப்புகள் ஏற்பட்டு விடுகிறது. ஆனால், இந்த பச்சைக் கற்பூரத்தை, எத்தனை நாட்கள் ஏழுமலையான் சிலையில் தடவினாலும், சிலையில் வெடிப்புகள் ஏற்படுவதில்லை."


🏜️4.திருமலையில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் உண்மையான பெயர், "மனோஹரம்" என்பதாகும். 2−8−1715 அன்று தொடங்கி, லட்டு, ஏழுமலையானுக்குப் படைக்கப்பட்டது. 1803ஆம் ஆண்டு முதல், பக்தர்களுக்கு, பூந்தி வடிவில் விநியோகிக்கப்பட்டது. காலப்போக்கில் தான் லட்டு வடிவிலான மனோஹரம் பிரசாதமாக, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


🌷5."திருமலை ஏழுமலையானுக்குக், கண்களை மறைத்தபடி, நாமமிடுவது சமீப காலமாகத்தான் உள்ளது. நெடுங்காலமாக, கண்களை மறைக்காமல்தான் நாமமிடப்பட்டு வந்துள்ளது."


🙏6. "திருமலை ஏழுமலையானுக்கு  உரிய நித்யானுஷ்டான பூஜை கைங்கர்யங்களை வரையறுத்துக் கொடுத்தவர் ஶ்ரீராமானுஜர் ஆவார்."


🦅7.திருமலை ஏழுமலையானுடைய சிலை, நவீன கால மெஷின் பாலீஷ்போட்ட சிலைகளைப் போலவே, ஆதிகாலந்தொட்டு அமைந்திருப்பது ஆச்சர்யமான விஷயம்தான். கருங்கல் சிலைகளில், இந்தஅளவு மினுமினுப்பான சிலை, இந்த சிலையாகத்தான் இருக்கக்கூடும்.


🏜️9.திருமலை ஏழுமலையான் கோவிலில், ஆனிமாதம், தெலுங்கு வருடப் பிறப்பு, தீபாவளி நாட்களில் தர்பார் நடத்தப்படுகிறது. ஆனிமாத தர்பாரின்போது, கோவில் வரவு செலவுக் கணக்கு ஏழுமலையானிடம் சமர்ப்பிக்கப் படுகிறது. பிறகு, ஏழுமலையானின் ஒப்புதல் பெற்றதாகப் பாவித்து, கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் புதிதாகப் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த சிறப்பு வைபவமும், இங்குமட்டும்தான் நடைபெறுகிறது.


🙏10. திருமலை ஏழுமலையானுடைய சிலையிலுள்ள சிற்பசாஸ்திர நுட்பங்கள், சிற்பக்கலை வல்லுநர்களுக்கே, அதிசயமாகவும், ஆச்சர்யமூட்டும் விதமாகவும் இருக்கின்றன.


🌷11. சென்னை ஆளுநராக இருந்த சர். தாமஸ் மன்ரோ, திருமலை ஏழுமலையானுக்கு, தினமும், தயிர்ச் சோறு, சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கு, தன் சொந்த பணத்தில், நைவேத்தியக் கட்டளை ஏற்பாடு செய்தார். இந்த அறக்கட்டளை இன்றும் தொடர்கிறது. இன்றைக்கும் காலை 11.30 மணிக்குக் கோவில் மணி அடிக்கப்பட்டு, மன்ரோ பெயர் படிக்கப்பட்டு, நைவேத்தியம் செய்யப்படுகிறது.


🙏12. "திருமலை ஏழுமலையானுக்குச் சாற்றப்படும் வஸ்திரம், 21 முழ நீளமும்,5 கிலோ எடையுமுள்ள பட்டு பீதாம்பரமாகும். இதை தயாரிப்பதற்கென்றே சென்னையில் தனிக்கடையே உள்ளது. இந்த வஸ்திரம், ஏழுமலையான் கோவில் அலுவலகத்தில் மட்டுமே கிடைக்கும். இவ்வளவு பெரிய வஸ்திரம் சாற்றப்படும் கடவுள் ஏழுமலையானே ஆவார்."


🏜️12. "ஏழுமலையான் கோவிலில், முன்பு, வெள்ளிக்கிழமை தோறும், அர்ச்சனைக்கு வில்வ இலை பயன்படுத்தப் பட்டது. அதற்கு பதிலாக, தற்போது, மார்கழி முழுவதும், வில்வ அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. வில்வ இலை சிவ அர்ச்சனைக்குரியது.  வில்வம் அர்ச்சனைக்குப் பயன்படுத்தப்படும், ஒரே வைணவ ஆலயம் ஏழுமலையான் கோவில் மட்டுமே."


🦅13. சிவராத்திரியன்று, ஏழுமலையானுக்கு, "ஷேத்ரபாலிகா" உற்சவம் நடத்தப்படுகிறது. அன்று மூலவருக்கு, வைரத்தில் விபூதி நெற்றிப்பட்டை சார்த்தப்பட்டு, வீதியுலா நடைபெறுகிறது.


🌷14.ஏழுமலையான் சிலைக்கு எண்ணெய்க்காப்பு சாற்றப்படுவதில்லை; புனுகுக்காப்பு சாற்றப்படுகிறது.


🙏15.ஏழுமலையானுக்கு முன்பு, பன்னீர் அபிஷேகமும், மஞ்சள் அபிஷேகமும் நடத்தப்பட்டு வந்தன. சுமார் ஐநூறாண்டுகளுக்கு முன்பு பன்னீர் அபிஷேகமும், சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் அபிஷேகமும் நிறுத்தப்பட்டு விட்டன.


🏜️16. ஏழுமலையான் கோவிலில் சாத்துமுறை தென்கலை; ஆனால், கோவில் நிர்வாகம் வடகலையினர் வசமுள்ளது.


🌷17. "தாள்ளபாக்கம் அன்னமய்யா என்பவர், ஏழுமலையான் மீது 32000 கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இது ஒரு சாதனை நிகழ்வாகும்."


🙏18. ஏழுமலையான் கோவிலில், "மூவகை லட்டுகள் புழக்கத்திலுள்ளன. ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு என்ற இருவகை லட்டுகளும், 750கிராம் எடையில், அதிகளவில் முந்திரி, திராட்சை, உள்ளிட்ட பொருட்களுடன் உயர்தரமான முறையிலும், குறைவான அளவிலும் தயாரிக்கப் படுபவை. இவை, பெரும்பாலும், பிரமுகர்களுக்கே தரப்படுபவை. சராசரியான "புரோக்தம்" லட்டு, அனைவருக்கும் வழங்கப்படுகிறது. இதன்எடை 175 கிராம் ஆகும்."


🦅19. "திருமலை 3000அடி உயரத்திலுள்ள குளிர்ப் பிரதேசமாகும். ஆனால், ஏழுமலையான் சிலையின் வெப்பம் மட்டும், 110டிகிரி ஃபாரன்ஹீட்டிற்குக் குறைவதே கிடையாது. இது, இன்றளவும் அதிசயமான நிகழ்வாகவே உள்ளது."


🏜️20. "ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடையுடையது; இதை ஏழுமலையானுக்குச் சாற்ற 3 அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி என்ற ஆபரணம் 5 கிலோ எடையுடையது. இவை போல, அரிதான பல நகைகள், ஏழுமலையானுக்குக் குவிந்துள்ளன. அரியநகைகள் தவிர, சாதாரண நகைகளும் அமோகமாக உள்ளன. இவற்றைச் சேமிக்க இடமோ, ஏழுமலையானுக்கு உடுத்த நேரமோ இல்லாமல் இருப்பதால், சாதாரண நகைகளை மட்டும், ஆண்டிற்கு ஒருமுறை பத்திரிக்கைகளில் விளம்பம் செய்து ஏலம் விடுகிறார்கள்."


🙏21. "உலகிலேயே அரிதான ஒற்றைக் கண் நீலம் என்ற அரிய ரத்தினக்கல், ஏழுமலையான் கோவிலில் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாகும்."


🌷22. ஏழுமலையான் கோவிலின் தலமரம் புளியமரம்.


🦅23. ஏழுமலையான் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் கிடையாது; கொண்டாட்டம் மட்டும் உண்டு.


🏜️24. ஏழுமலையான் கோவிலினுள், கொங்கணச் சித்தர் சமாதியும் உள்ளது. ஆனால், எங்குள்ளது என்பதில் குழப்பம் நிலவுகிறது.


🦅25. வெளிநாடுகளில் இருந்து, பூசனைப் பொருட்கள் வருவிக்கப்படும் ஒரே பெருமைக்குரிய கோவில் ஏழுமலையான் கோவிலே ஆகும். (எ.கா) சீனப் புனுகு, நேபாளக் கஸ்தூரி, நெதர்லாந்து ரோஜா.


🌷26. "ஏழுமலையானுக்கு தினசரி , ஒரு முறை அபிஷேகத்திற்கான குறைந்தபட்ச செலவு, தற்போதைய நிலவரப்படி ஒருலட்சம் ரூபாய் ஆகும்."


🙏ஸர்வம் 🌷ஸ்ரீ 🙏கிருஷ்ணார்ப்பணம்


🏜️பொறுமையை விட மேலான 🧘🏻‍♂️தவமுமில்லை. 🏜️திருப்தியை விட மேலான 🌷இன்பமுமில்லை. 🙏இரக்கத்தை விட 🔥உயர்ந்த அறமுமில்லை. 🙏மன்னித்தலை விட 🔥ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!🙏


🏜️தோல்விகள் சூழ்ந்தாலும். 🔥இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. 🏜️இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!🙏    


🌷முக மலர்ச்சியோடும், 🏜️நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க 🏜️இறைவன் அருள் புரியட்டும்…!🙏

0 0 0 0 0 0
 • 149
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  Ads
  Latest Posts
  சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி
  சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும்
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  கதை- இதுதான் காரணமா?
  புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர
  முகம் பார்க்கும் கண்ணாடி?
  முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம
  சிந்திப்போமா?
  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அ
  அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் திருக்கோவில்
  தேவி அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி
  Ads