Support Ads
Main Menu
 ·   · 6 posts
 •  · 3 members
 •  · 4 friends

உவர் நிலங்களாக மாறும் கிராமம்; குடிபெயரும் மக்கள் - அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு கிராம மக்கள் வலியுறுத்தல்

கிளிநொச்சி மாவட்டத்தில் அறுபத்தி நான்கு வருடங்களிற்கு மேற்பட்ட பழமையான வரலாற்றைக்கொண்ட வன்னேரிக்குளமும் அதனையண்டிய பகுதிகளும் உவர் ஆக்கிரமிப்புக்குள்ளாகி வருவதால்; மக்கள் குடிபெயரும் கிராமங்களாக மாறி வருகின்றன. எனவும் இவற்றைப்பாதுகாப்பதற்கு நிதிகளை ஒதுக்கி நிலைபேறான அபிவிருத்திகளை முன்னெடுக்குமாறு இக்கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள 42 கிராம அலுவர் பிரிவுகளில் ஒன்றாகக் காணப்படும் வன்னேரிக்குளத்தின் 495 இற்கு மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1700ற்கும் மேற்பட்டோர் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.

1953ம்அண்டு வன்னேரிக்குளம் குடியேற்றக்கிராமமாக உருவாகுவதற்கு முன்னரே இதனையண்டிய குஞ்சுக்குளம், மன்னியாகுளம், திக்காப்பகம், போன்ற கிராமங்கள் தோற்றம் பெற்றதாக வரலாறுகள் காணப்படுகின்றன.
இவ்வாறு பழமைவாய்ந்த கிராமங்களில் வாழ்ந்த மக்கள் விவசாயத்தையும் நன்னீர் மீன்பிடி தோட்டப்பயிர்செய்கை என்பவற்றை மேற்கொண்டு வந்தனர்.

நாட்டில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக இக்கிராமங்களை அண்டிய உவர் நீர்த்தடுப்பணைகள் சேதமடைந்ததால் உவர் நீர் உட்புகுந்து வழமான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.
இதனால் இங்குள்ள மக்கள் வேறு இடங்களிற்கு குடிபெயர்ந்து சென்றுள்ளனர்.

இக்கிராமங்களில் பருவமழை காலத்தில் மேலதிகமான நீர் முடக்கன் ஆற்றின் ஊடாக மண்டைக்கல்லாற்றில் இணைந்து பூநகரிக்கடலில் கடக்கின்றது வழமை.


ஊவர் நீர்த்தடுப்பணைகள் அழிவடைந்ததால் கடற்பெருக்கு காலங்களில் மண்டைக்கல்லாறு வழியாக வரும் உவர் நீர் முடக்கனாறு மற்றும் இதனையண்டிய விவசாய நிலங்களிலும் பரவி உவர்ப்பரம்பல் காணப்படுகின்றது,

இங்குள்ள 1600 ஏக்கருக்கும் மேற்பட்ட வளமான பயிர் செய்கை நிலங்கள் உவர் நிலங்களாக மாறியுள்ளன.
உவர் ஆக்கிரமிப்பால் குஞ்சுக்குளம் கிராமத்தில் இயங்கிய கணேச வித்தியாலயம் என்ற பாடசாலையும் கலைவாணி முன்பள்ளியும் முற்றாக அழிந்து போயுள்ளது.
தற்போது ஒரிரு குடும்பங்களே இங்கு வாழ்ந்து வருகின்றன.
எனவே வழமான நீண்டவரலாற்றைக்கொண்ட வன்னேரிக்குளத்தையும அதனையண்டிய கிராமங்களையும்; பாதுகாக்கும் வகையில் அதிக நிதிகளை ஒதுக்கி நிலைபேறான அபிவிருத்திகளை மேற்கொள்ளுமாறும் இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.


0 0 0 0 0 0
 • 244
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  Ads
  Latest Posts
  சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி
  சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும்
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  கதை- இதுதான் காரணமா?
  புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர
  முகம் பார்க்கும் கண்ணாடி?
  முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம
  சிந்திப்போமா?
  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அ
  அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் திருக்கோவில்
  தேவி அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி
  Ads