Support Ads
Main Menu
 ·   · 284 posts
 •  · 2 friends
 •  · 6 followers

மிகச் சிறந்த பொய்க்காக வழங்கப்படும் பரிசு!

மிகச்சிறந்த பொய்யைச் சொல்லும் ஒருவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாகக் கொடுக்கப்படும் என்று ஒரு அரசன் அறிவித்தான். நாட்டின் பல பகுதியிலிருந்தும் பலர் வந்து பல பொய்கள் சொல்லிப் பார்த்தனர். ஆனால், அரசனுக்கு திருப்தி ஏற்படவில்லை.

ஒரு நாள் கந்தல் உடை அணிந்த ஒரு ஏழை அரச சபைக்கு வந்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவதாகக் கூறினான்.

அரைகுறை மனதுடன் அரசன் சம்மதம் தெரிவித்தான்.

அந்த ஏழை சொன்னான், “அரசே, உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? நீங்கள் எனக்கு ஆயிரம் பொற்காசுகள் தர வேண்டியிருக்கிறது. அதை வாங்கத்தான் நான் வந்தேன்.”

அரசனுக்கு கோபம் வந்து விட்டது.

“யாரிடம் புளுகுகிறாய்.? நானாவது உனக்கு பணம் கடன் தர வேண்டியிருப்பதாவது?” என்று உரத்தக் குரலில் சுத்தினான்.

உடனே ஏழை சொன்னான், “அரசே, நீங்களே ஒப்புக் கொண்டு விட்டீர்கள். நான் பொய்யன் என்பதை உங்கள் வாயாலேயே ஒப்புக் கொண்டு விட்டதால், போட்டி விதியின்படி எனக்கு ஆயிரம் பொற்காசுகள் கொடுங்கள்” என்று பணிவுடன் கேட்டான்.

கோபத்திலும், அவசரத்திலும் தாம் உளறிவிட்டோம் என்பதை உணர்ந்த அரசன், “நீ சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ள முடியாது!” என்று அவசரமாக மறுத்தான்.

ஏழை விவசாயி சொன்னான்,

“சரி, நான் சொன்னதை பொய் என்று ஒப்புக் கொள்ளாவிட்டால் போகிறது. உண்மை என்று ஒப்புக் கொண்டீர்கள் அல்லவா. எனவே, எனக்குத் தர வேண்டிய ஆயிரம் பொற்காசுகளைக் கொடுத்து, கடனை அடையுங்கள்.”

கையைப் பிசைந்த அரசன், அந்த ஏழையை சிறந்த பொய்யன் என்று ஏற்று ஆயிரம் பொற்காசுகளை வழங்கினான். மன்னனாக இருந்தாலும் அவனும் மனிதன்தான் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் உள்ளது.

ஒரு மன்னனுக்கு சொர்க்கம், நரகம் குறித்த பெருத்த சந்தேகம் வந்தது. அதை யாராலும் தீர்க்க முடியவில்லை.

இந்நிலையில், காட்டில் வேட்டையாடச் சென்ற இடத்தில் ஒரு சாமியாரைப் பார்த்தான் மன்னன். இவரிடம் கேட்கலாம் என்று முனிவர் தவம் கலைய காத்திருந்தான். கண் விழித்தார் முனிவர்.

“யார் நீ” என்று கேட்டார்.

“நான் மன்னன்…”

“சரி, சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய்?”

“நான் ஒரு நாட்டுக்கே மன்னன் என்கிறேன். என்னைப்பார்த்து சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் என்கிறீரே?”

“எனக்கு உன்னைப் பார்த்தால் திருடனைப்போல் தெரிகிறது” என்றார் முனிவர்,

மன்னனுக்கு கோபம் வந்துவிட்டது. “முனிவராயிற்றே என்று பொறுமையாக காத்திருந்து உங்களிடம் ஒரு கேள்வி கேட்க நினைத்தால் என்னையே திருடன் என்கிறீரா.? உம்மை என்ன செய்கிறேன் பார்” என்று வாளை உருவினான் மன்னன்.

முனிவர் சிரித்துக்கொண்டே, “இதுதான் நரகத்துக்குச் செல்லும் வழி!” என்றார்.

மன்னனுக்கு சட்டென்று ஞானம் தோன்றியது. கேள்வி கேட்காமலே தாம் வந்த நோக்கத்தை ஞானதிருஷ்டியால் அறிந்து, பதில் சொல்லிய மகாமுனியாக காட்சி தந்தார் முனிவர்.

வாளை கீழே போட்ட மன்னன், “சுவாமி என்னை மன்னிக்க வேண்டும்!” என்று பணிந்தான்.

“இதுதான் சொர்க்கத்துக்குச் செல்லும் வழி!” என்றார் ஞானி.

சாஷ்டாங்கமாக விழுந்து விட்டான் மன்னன்.

உயர்பதவியில் இருக்கும்போது, எதையும் ஒன்றுக்குப் பத்து முறை யோசித்துப் பேசுவதே சிறப்பானது.

– இராம்குமார் சிங்காரம் எழுதிய ‘ஒரு கதை… ஒரு விதை…’ என்ற நூலிலிருந்து…


0 0 0 0 0 0
 • 234
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  Ads
  Latest Posts
  சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி
  சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும்
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  கதை- இதுதான் காரணமா?
  புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர
  முகம் பார்க்கும் கண்ணாடி?
  முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம
  சிந்திப்போமா?
  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அ
  அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் திருக்கோவில்
  தேவி அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி
  Ads