Support Ads
Main Menu
 ·   · 284 posts
 •  · 2 friends
 •  · 6 followers

ராம நாமத்தின் மகிமை....

தஞ்சாவூர் அருகே உள்ள கிராமத்தில்‌ லக்ஷ்மி என்பவர் வசித்துவந்தார். மிக இளம் வயதிலேயே திருமணம் நடந்து கணவரையும் இழந்துவிட்டார். விவரம் தெரிவதற்குள் வாழ்க்கையை இழந்து விட்ட அந்தப் பெண்ணை எல்லோரும் அதிர்ஷ்டம்‌ கெட்டவள் என்று அழைக்கத் துவங்கினர். வீட்டை விட்டு


எதற்காகவும் வெளியே வர இயலாது. பெற்றோர் இருந்தவரை அவளைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக்கொண்டே காப்பாற்றி வந்தனர். நாளடைவில் பெற்றோரும் காலகதியை அடைந்துவிட்டனர். நிர்கதியாக இருப்பவர்களுக்கு தூரத்து உறவினர்கள் உணவிடும் பழக்கம் இருந்ததால், தூரத்து உறவினர் லக்ஷ்மிக்கு வேண்டியதை அவள்


வீட்டிற்கே அனுப்பிவிடுவர். யாரும் இல்லை. பேசவும் ஆளில்லை. வெளியிலும் போக முடியாது. அவள் விடியும்‌ முன்பே சென்று காவிரியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்து வீட்டிற்குள் புகுந்து கொள்வாள். பொழுது போகவில்லை. தாயும் தந்தையும் சிறு வயதில் சொன்ன கதைகளிலும், ஸ்லோகங்களிலும் அவளுக்கு ராம நாமம்


மிகவும்‌ பிடித்து விட்டது. வீட்டில் ஒரு ஊஞ்சல் இருந்தது. அதில் அமர்ந்து ஆடிக்கொண்டே அனவரதமும் ராம நாமத்தைச் சொல்லத் துவங்கினாள். சில நாட்கள் சொன்னதும், நாமம் அவளைப் பிடித்துக் கொண்டது. பொழுது போகாத போதெல்லாம் நாமம் சொல்லிக் கொண்டிருந்தவள் எப்போதுமே நாமம் சொல்லத் தொடங்கினாள்.


ஆயிரம் நாமம் ஆனதும் சுவற்றில் கரிக்கட்டையால் ஒரு சிறிய கோடு கிழித்து வைப்பாள் லக்ஷ்மி. இப்படியாக வீட்டுச் சுவரில் இடமே இல்லாத அளவுக்கு நாமத்தைச் சொல்லி சொல்லிக் கோடு கிழித்து வைத்திருந்தாள். அவளுக்கும் வயதாகியது. அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் சில இவளைத் தேடி வரத் துவங்கின.


அவர்களுக்கு தனக்குத் தெரிந்த கதைகளும், பாட்டும் சொல்லிக் கொடுத்தாள். ஒருநாள் ஒரு குழந்தை அழுதுகொண்டே இருந்தது. ஏம்மா அழற என்று கேட்டாள். அப்பாவுக்கு உடம்பு சரியில்ல பாட்டி. வைத்தியர் பிழைக்க மாட்டார்னு சொல்றாராம். அம்மா அழுதுண்டே இருக்காங்க என்றது குழந்தை. சரி, அழாத இங்க வா, ராம

நாமத்தை விடப் பெரிய மருந்தே இல்ல. உங்கப்பாவுக்காக நான் ஜபம்‌பண்ணி வெச்சிருக்கறதிலேர்ந்து 1000 நாமா கொடுத்தேன்னு போய்ச் சொல்லு. சரியாப் போயிடும் என்று சொல்லி ஒரு கோட்டை அழித்தாள். சரி பாட்டி என்று கண்ணைத் துடைத்துக் கொண்டு ஓடிய குழந்தை சற்று நேரத்தில் தாயுடன் திரும்பி வந்தது.


அந்தக் குழந்தையின் தாய் ஓடிவந்து லக்ஷ்மி பாட்டியின் காலில் விழுந்து உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலமா. நீங்க நாமா கொடுத்தேள்னு குழந்தை சொன்னதும் மாசக் கணக்கா படுத்த படுக்கையா இருந்தவர் சட்டுனு எழுந்து உக்காந்துட்டார். வைத்தியரும் எல்லா நாடியும் இப்போ சுத்தமா இருக்கு.


இனி வியாதியே வராதுன்னு சொல்லிட்டு போயிட்டார் என்று ‌கூறி மீண்டும் மீண்டும்‌ நமஸ்காரம் செய்தாள். விஷயம் காட்டுத் தீ போல் ஊர் முழுதும் பரவியது. யார் கஷ்டம் என்று வந்தாலும் தான் ஜபம் செய்து வைத்த நாமத்தின் சிறு பகுதியைக் கொடுத்து அவர்கள் கஷ்டத்தைப் போக்கி விடுவாள் பாட்டி. கொடுத்ததை


அன்றே ஜபம் செய்து சமன் செய்து விடுவாள். யார் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைத்துக் கரித்துக் கொட்டினார்களோ, அந்த துக்கிரிப் பாட்டி வராமல் ஊரில் ஒரு நிகழ்ச்சியும் நடப்பதில்லை. துக்கிரிப் பாட்டி மாங்கல்யம் எடுத்துக் கொடுத்தால்தான் திருமணம், அவள் வந்தால்தான் கிருஹப்ரவேசம்!


லக்ஷ்மி அதிருஷ்டமில்லாதவள் என்று அனைவராலும் ஒதுக்கப்பட்டவரை அனைவரும் வரவேற்கும்படி செய்தது  ராமநாமம் அல்லவா. இன்று பலரும் ஒவ்வொரு தருணத்திலும் நம்மை நாமே குறைத்து மதிப்பிட்டு கொள்கிறோம், என்னால் முடியாது, இயலாது, நான் ராசியாற்றவன்/ள், நேரம் சரியில்லை, வீடு வாசல் இல்லை, குழந்தை பாக்கியம் இல்லாதவன்/ள், சொந்த பந்ந்தங்கள் இல்லை, உறவுகள் என்னை மதிப்பதில்லை என பல நேரம் நொந்து கொள்கிறோம். 


இவைகளை தவிர்த்து என்றும் இவ்வுலகில் நீக்கமற நிறைந்து இருக்கும் பரந்தாமன் ஸ்ரீராமபிரானை நெஞ்சில் நிறுத்துவோம், தினம் 1000, ஆயிரம் ராம, கிருஷ்ண, நாராயண சிவா, அம்பாள் நாமாக்களை சொல்லி நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் பரிசுகளாய் கொடுப்போம்.

0 0 0 0 0 0
 • 276
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  Ads
  Latest Posts
  சுக்கிர யோகம் தரும் சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி
  சங்கடஹர சதுர்த்தி நாளில், ஆனைமுகத்தானை வழிபடுவோம். நமக்கு சந்தோஷங்களையும் வெற்றிகளையும் தந்தருள்வார் பிள்ளையாரப்பன். சுக்கிர வாரம் என்று சொல்லப்படும்
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  கதை- இதுதான் காரணமா?
  புருசன் செத்துட்டான் பொட்டப்புள்ளையை காப்பாற்ற புளியமரத்தடியில் நைட்டு டிபன் கடை போட்டாள் இளவயது ப்ரியா.கடைபோட்ட அன்னிக்கே ஒரு போலீஸ்காரன் வந்தான். பர
  முகம் பார்க்கும் கண்ணாடி?
  முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.'' கண்ல போடுற கண்ணாடியான்னு கேட்டதும் முதலாளி கோபத்தில்...''யோவ் ஷேவ் பண்றதுக்குய்யா... என் முகம
  சிந்திப்போமா?
  நல்ல வேலை, அதிகாரத்துடன் கூடிய பதவி, பணம், புகழ்... எல்லாம் முக்கியம்தான். இவற்றையெல்லாம்விட வாழ்வது மிக மிக முக்கியம். ஏதோ ஒன்றைத் துரத்திக்கொண்டு, அ
  அருள்மிகு ஸ்ரீ உலகநாயகி அம்மன் திருக்கோவில்
  தேவி அம்பிகையின் சக்தி பீடங்களில் இது வீரசக்தி பீடமாக வழிபடப்படுகின்றது.சர்வ சக்தி பொருந்திய இந்த தேவி தன்னுடைய பதினெட்டுக்கரங்களிலும் ஆயுதங்களை ஏந்தி
  Ads