Support Ads
Main Menu
 ·   · 4 posts
  •  · 3 members
  •  · 4 friends

வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.

மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.


இதனால் இவ்வாறான கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏனைய வறிய மக்கள் வாழ்வில் அன்றாடம் பெரும் கஸ்ரங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின் தங்கிய பிரதேசமாக காணப்படும் மாந்தைகிழக்கு பிரதேசத்தில் கடந்த 10 வருடங்களாக மிகவும் பழமை வாய்ந்த பல கிராமங்களில் இருந்து வசதி வாய்ப்புக்கள் நோக்கி மக்கள் குடி பெயர்து செல்லும் நிலை காணப்படுகின்றது.


மாந்தை கிழக்கின் பழமைவாய்ந்த பனங்காமம் மூன்று முறிப்பு போன்ற கிராமங்களில் இவ்வாறான நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக, இந்த பிரதேசங்களில் மாணவர்களுக்கான உரிய கல்வி வசதி இன்மை மருத்துவ வசதி, போக்குவரத்து வசதிகள் இன்மை என்பன பிரதான காரணிகளாக அமைந்துள்ளன.


மாந்தைகிழக்கில் 1962ம் ஆண்டுகளுக்கு பிற்பகுதியில் பாண்டியன்குளம் கரும்புள்ளியான் விநாயகபுரம் பாலிநகர் கொல்லவிளான்குளம் சிவபுரம் போன்ற கிராஙம்கள் உருவாகுவற்கு முன்புள்ள வரலாற்று தொன்மை கொண்ட மேற்படி கிராமங்கள் எதிர்காலத்தில் இல்லாது போய் விடுமோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன.


பனங்காமம் மிகவும் பழமையான வன்னியின் பழம் பெரும் கிராமமாகும். அதாவது கி.மு. ஏழாம் நூற்றாண்டு முதல் இலங்கையின் கரையோர மாகாணங்களில் பெரும் கற்கால பண்பாட்டு மக்கள் குடியேறி வாழ்ந்தனர் என்றும் அக்காலப்பகுதியில் கிராமங்கள் நகரங்கள் பண்டமாற்று நிலைகள் குறுநில அரசுகள் உருவாகின.


அவ்வாறு உருவாகிய கிராமங்களில் ஒன்று தான் பனங்காமம் பற்று என்றும் 17ம் 18ம் நூற்றாண்டுகளில் ஒல்லாந்தர் அடங்காப்பற்று என்பதை வன்னி என்று குறிப்பிட்டனர் என்றும் இதில் பனங்காமம் கரிக்கட்டுமூலை கருநாவல் பற்று முள்ளியவளை மேல் பற்று, தென்னைமரவாடி, என்ற ஆறு பிரிவுகள் காணப்பட்டன என்று பனங்காமம் பகுதியில் அமைந்துள்ள பஞ்சிங்கேஸ்வரர் ஆலய வரலாற்று நூலின் வாயிலாக அறியமுடிகின்றது.


இதேவேளை பாணன்கமம் என்ற பெயரே காலப்போக்கில் பனங்காமம் என்று மருவி வந்துள்ளதையும் அறியமுடிகின்றது.
அதாவது, இராவனேஸ்வரனின் தம்பியின் பரம்பரையினர் இலங்கை இராசதானியில் ஆட்சி செய்த காலத்தில் இந்தியாவில் இருந்து வந்த பாணன் குலத்தைச்சேர்ந்த அந்தகன் ஒருவர் அரசன் முன்னிலையிலே யாழ் வாசித்து பரிசில் பெற்றான் என்றும் அவனுக்கு பரிசாக வழங்கப்பட்ட கமம் என்பதே மருவி காலப்போக்கில் பனங்காமம் என்று பெயர் பெற்றுள்ளதாகவும் வரலாற்று ஆய்வுகள் கூறுகின்றன.


இவ்வாறு வரலாற்றுத்தொன்மை கொண்ட பனங்காமம் மற்றும் அதனை அண்டிய பழம் பெரும் விவசாயக்கிராமங்களான மூன்றுமுறிப்பு வீரப்பராயர் குளம், இளமருதன்குளம், கொம்புவைத்தகுளம், போன்ற கிராமங்களுக்கான பிரதான போக்குவரத்து பாதையில் எந்தவித போக்குவரத்து வசதிகளும் இல்லை மாறாக மாலை 4.00 மணியில்இருந்து மறுநாள் காலைவரையும் காட்டுயானைகளின் ஆக்கிரமிப்பு, கிராமங்களில் கல்வி வசதிகள் எதுவுமில்லை, மருத்துவ வசதிகள் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்யவும் விவசாயவிளை பொருட்களை சந்தைப்படுத்தவும் போக்குவரத்து வசதியில்லை சீரான வீதியின்மை என்ற போராட்டத்திற்கு மத்தியில் இருபது இருபத்தி ஐந்து கிலோமீற்றர் சென்று அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.


இவ்வாறான நிலையில் மேற்படி பழம் பெரும் கிராமங்களில் மீள்குடியேறி வாழ்ந்த எண்பது வீதமான குடும்பங்கள் அன்மைக்காலமாக இங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா யாழப்பாணம் கிளிநொச்சி போன்ற மாவட்டங்களுக்கு குடிபெயர்ந்துள்ளன.


இந்நிலையில் வருமானம் குறைந்த மற்றும் வறுமை நிலையில் வாழும் பல குடும்பங்கள் குறித்த கிராங்களில் வாழ்ந்து வருகின்றன. இங்கிருந்து பெருமளவான குடும்பங்கள் வசதி வாய்ப்புக்களை தேடிச்சென்றுள்ள நிலையில் மேற்படி குடும்பங்கள் அன்றாடத்தேவைகளுக்காகவும் பிள்ளைகளின் கல்விக்காகவும் மருத்துவத்தேவைகளுக்காகவும் அன்றாடம் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்கி வருகினறனர்.


இதனை விட இரவு வேளைகளில் காட்டுயானைகளின் தொல்லை வாழ்வாதார பயிர்களை பாதுகாக்க முடியாத நிலை காட்டுயானை மற்றும் ஏனைய விலங்குகளால் தொல்லை உயிரச்சுறுத்தல்கள் என்று பல்வேறு துன்பங்களை அன்றாடம் எதிர்நோக்கி வருகின்னர்.


இங்கு அபிவிருத்தி என்பதில் மின்சாரம் மாத்திரமே 98 வீதமான மக்களுக்கு கிடைத்திருக்கின்றது. ஏனைய தேவைகள் என்பது இது வரை நிறைவுற்றதாகவில்லை என்றே கூறமுடியும்.
இவ்வாறான கிராமங்களில் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட தேவைகளை நிறைவு செய்து தருமாறு மேற்படி கிராம மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் எப்போது நிறைவேற்றப்படும்.


0 0 0 0 0 0
  • 237
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
Ads
Latest Posts
படித்ததில் பிடித்தது...
காதலர்களாக சுற்றி தெரிந்த வேளையில் முதல் முதலாக ஒரு முத்தம்கொடுத்த பொழுது அவள் சொன்னால் சி    அசிங்கம்  என்று கழுத்தில் தாலி கட்டி புது தம்பதிகளாக இரு
Just for Laugh.......
A Chinese man came to India. He took a taxi at the airport.On his way, by seeing a bus, he told the taxi driver, that in India buses run very slow.  I
அடுத்வரை மகிழ வைத்து வாழ்வோம்....
அழகான  பணக்கார பெண்.... ஆடம்பரத்தில் வாழும் ஒரு பெண். ஒரு கவுன்சிலிங் செய்பவரை காணச்சென்றாள்.அவரிடம்... "என் வாழ்க்கையே ஒரு சூனியமாக இருக்கு".....!! "
இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள்
இலங்கையில் இடம் பெற்ற உள்நாட்டு போர் காரணமாக அதிக பாதிப்புகளையும் பொருளாதார நெருக்கிதல்களையும் எதிர் கொண்ட சழூகமாக பெண்தலைமைத்துவ குடும்பங்கள் காணப்பட
அக்பருக்கு பீர்பால் செய்து காட்டிய விளக்கம்
ஒரு நாள் அக்பர் அரசவையில் அக்பரும் பீர்பாலும் பேசி கொண்டிருக்கும்போதுஅக்பர் கேட்டார் பீர்பாலே இந்து மதத்தில் உள்ள கடவுள் திருமால் இருக்கிறாரே அவருக்கு
ஆதி சங்கரர் அருளிய வைராக்ய ஸ்லோகங்கள்
ஒரு காவல்காரன். வழக்கம்போல் தப்பட்டை அடித்துக்கொண்டு நடுநிசியில் ''ஜாக்கிரதை'' என்று கத்திக்கொண்டே போவான்.ஒருநாள் அவசரமாக வேறு ஒரு ஊருக்கு போகவேண்டி இ
Ads