Support Ads
Main Menu
 ·   · 132 posts
  •  · 16 friends
  •  · 16 followers

முறிகண்டி பிள்ளையார் ஆலய வர்த்தகர்கள் இன்றைய சூழலில் தொழிலிழந்து நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மிகவும் பழமை வாய்ந்த மத வேறுபாடுகளின்றி எல்லோராலும் வழிபடும் முறிகண்டி பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள வர்த்தகர்கள் இன்றைய சூழலில் தொழிலிழந்து  நிர்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அதாவது பலதரப்பட்ட வர்த்தக மற்றும் வாழ்வாதார தொழில்களை முன்னெடுத்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன

யுத்தத்தினால் தொடர்சியாக பாதிக்கப்பட்டு எதுமற்ற நிலையில் வங்கிக்கடன் நுண்நிதிக்கடன் என பல்வேறு பட்ட கடன்களை பெற்று தமது வாழ்வாதாரத் தொழில்களை ஆரம்பித்த போது கடந்த ஆண்டு முதல் இன்று வரை தொடரும் கொவிட் -19 அச்சுறுத்தல் இவர்களது எதிர்பார்ப்பை இன்று சிதைத்துள்ளது.
இலங்கையின் பிராதானமான போக்கு வரத்து மார்க்கமாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் – கண்டி ஏ-09 நெடுஞ்சாலையின் வவுனியா நகரிலிருந்து யாழ்ப்பாணம் ஏறக்குறைய 150 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது. வவுனியாவிலிருந்து திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயம் ஏறத்தாழ 80கிலோமீற்றர் தூரத்திலுள்ளது. அதாவது முறிகண்டிபிள்ளையார் ஆலயமானது வவுனியாவுக்கும் யாழ்பாண நகருக்கும் இடையே ஏறைக்குறைய மத்தியில் அமைந்த பிரதேசமாக காணப்படுகின்றது.
இந்த வீதி வழியாக பயணிக்கும் வாகன சாரதிகள் பொதுமக்கள களைப்பு, சோர்வு, அசதி, மன உளைச்சல் இவைகளை களைந்து முகம் கழுவி பிள்ளையாரை பிராத்தனை செய்து உணவுண்டு செல்லும்போது, மீண்டும் புத்துணர்ச்சியுடன் களைப்பின்றி தமது பயணத்தை புதிய உத்வேகத்ததுடன் மேற்கொள்ளுகின்றனர்.

இங்கே சுடச் சுட விற்பனை செய்யப்படும் கச்சானுக்கு தனியான ஒரு சுவையுண்டு துாரதேசத்திலிருந்து முறிகண்டியை கடந்து வரும் உறவினர்கள் யாராக இருந்தாலும் இந்த கச்சான் வாங்காமல் வரமாட்டார்கள் அது அவர்கள் பரிமாறும் அன்பின் ஒருஅங்கமாகும் இது இன்றுமுள்ளது.


மிகச் சிறிய ஆலயத்தில் குடி கொண்டிருக்கும் இவ் விநாயகரின் மகிமையோ பெரிது. மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி மிக்கவர். பொங்கல், சோறூட்டல் போன்ற சடங்குகளும் இங்கு நடைபெறுவதுண்டு.
அன்று தொட்டு இன்று வரை சிறியதொரு குடிலினுள்ளேயே இவ்விநாயகர் அமர்ந்துள்ளார். மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.
புராதன காலத்தில் கால்நடையாகச் செல்வோர் நலன்கருதி சுமைதாங்கி, நன்னீர்க்கிணற்றுடன் கூடிய சிறிய மடங்கள் (வண்ணை – ஆறுகால்மடம், பருத்தித்துறை – தெருமூடிமடம் ஆகியன சிறந்த எடுத்துக்காட்டு, இன்றும் உள்ளன) , அக்காலத் திண்ணை வீடுகள் முதலானவை குறிப்பிடத்தக்கவை. இவை வழிப்போக்கர்களது களைப்பினைப் போக்கி ஓய்வெடுத்து செல்வதற்கு பெரிதும் உதவின.
இது போலவே இன்றும் இந்த திருமுறிகண்டி பிள்ளையார் ஆலயமும் அமைந்துள்ளது என்பதற்கு அப்பால் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதரத்தை தொழில் வாய்ப்பை வழங்குகின்ற ஏன் பல யாசகர்களுக்கு உணவு தங்குமிடத்தையும் இந்த இடம் ஏற்படுத்துகின்றது என்றே கூறமுடியும்.


இன்று முழு உலகையும் ஆட்டிப்படைக்கும் கொவிட் -19 முறிகண்டியையும் முடக்கியுள்ளது.
ஆலயத்தில் மூன்று வேளை பூசை நடக்கின்றது.  ஆனால் வழிபட யாருமில்லை வழிப்போக்கர்கள் இல்லை, மாதக்கணக்கில் வர்த்தகர்கள் தமது கடைகளை மாதக்கணக்கில் மூடிவிட்டு வாழ்வாதரமிழந்து நிற்கின்றனர்.


இந்தப்பிரதேசத்தில் வாழ்வாதாரத் தொழிகளை மேற்கொள்பவர்கள் 1960ம் ஆண்டிற்கு முன்னதாக ஏ-09 நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற குறித்த முறிகண்டி பிள்ளையார் கோவிலை அண்டிய பகுதியில் 35 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியேறி வசித்து வந்தன. 1969ம் ஆண்டு காலப்பகுதியில் இப் பிரதேசத்தில் வசித்து வந்தவர்களிற்கு 'திருத்தப்பட்ட காணி அபிவிருத்தி திட்டம்' என்னும் திட்டத்தின் கீழ் அவர்கள் வசித்த காணிகளிற்கான ஆவணங்கள் அரசினால் வழங்கப்பட்டன.


முறிகண்டிக்கு தெற்காக இரண்டு கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும் கொக்காவில் என்ற இடத்தில் தொலைக்காட்சி பரிவர்த்தனை கோபுரம் ஒன்றை இலங்கை ரூபவாகினிக்கூட்டுத்தாபனம் 1970 களில் அமைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளை வடக்கு பகுதிகள் அனைத்துக்கும் ஒளிபரப்பியது.


1977ம் ஆண்டு ஆவணி மாதமளவில் இடம்பெற்ற தென்பகுதியில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் போது தமிழ் மக்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதிகளிற்கு இடம்பெயர்ந்து அங்கு தற்காலிகமாக குடியமர்ந்தனர். அக்காலப்பகுதியில் அரசியல்வாதியாக இருந்த சௌமியமூர்த்தி தொண்டமான் மூத்த அரசியல் வாதி வீ.ஆனந்த சங்கரி ஆகியோரின் ஒத்துழைப்புடன் இவ்வாறு இடம்பெயர்ந்து, சொந்தக் காணி இல்லாமல் இருந்த 40இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இப்பகுதியில் காணி வழங்கப்பட்டு குடியேற்றப்பட்டன.


அதன் பின் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் காணியின்றித் தங்கியிருந்த 150 வரையான தமிழ் குடும்பத்தினர், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 2 ஏக்கர் வீதம் அரசினால் காணிகள்; வழங்கப்பட்டு இக்கிராமத்தில் குடியமர்த்தப்பட்டன.


இதனை விட 2003ம் ஆண்டில் காணியின்றி இருந்த 32 குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இக்கிராமத்தில் அரை ஏக்கர் வீதம் அரசாங்க அதிபரினால் நிலம் வழங்கப்பட்டு குடியமர்த்தப்பட்டன.
2004ம் ஆண்டு காலப்பகுதியில் ஏ9 வீதியின் கிழக்கேயுள்ள இக்கிராமத்தின் ஒரு பகுதியில், காணிகளின்றி மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த ஐம்பது குடும்பங்களிற்கு ¾ ஏக்கர் காணி வீதமும், 140 குடும்பங்களிற்கு அரை ஏக்கர் காணி வீதமும் காணிகள் வழங்கப்பட்டன.


இவை தவிர 2010ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் திருமுருகண்டி ஆகிய பகுதிகளிலும் பல்வேறு குடியிருப்புகள் நிறுவப்பட்டு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்
இவ்வாறு குடியமர்த்தப்பட்ட குடும்பங்களில் அதாவது 1969ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் குடியேறி வாழும் குடும்பங்களில் சுமார் 70 வீதமான குடும்பங்கள் இந்த முருகண்டி பிள்ளையார் ஆலய  தொழில் வாய்ப்புக்களை நம்பி குடியேறியிருக்கிறார்கள்.  குறிப்பாக முறிகண்டி பிள்ளையார் ஆலயத்தை சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் அதாவது சிறிய கச்சான் கடைகள் பெட்டி கடைகள் தேநீர் கடைகள் கைவினைப் பொருட்கள் உற்பத்தி விற்பனைகள் என்று பல்வேறுபட்ட தொழில் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையாளர்களாகவும் அவற்றில் தொழில் புரிபவர்களாகவும் உள்ளனர்.


இன்றைய சூழலில் குறித்த பகுதி முழுமையாக முடக்கமடைந்து தொழில் வாய்ப்புக்களை இழந்த பிரதேசமாக மாறியுள்ளது.
இங்கே வசிக்கும் மக்கள் ஒவ்வொரு காலப்பகுதியிலும்; வீழ்ச்சி கண்டு வருகின்ற பிரதேசமாகவே காணப்படுகின்றது.  அதாவது 1989 களின் பிற்பகுதியில் இருந்து இன்றுவரை குறிப்பிட்ட காலம் வரை எழுச்சி பெற்ற பிரதேசமாகவும் அடிக்கடி வீழ்ச்சி கானும் பிரதேசமாகவும் காணப்படுகின்றது.


1989 காலப்பகுதியில் முறிகண்டி பாதிக்கப்பட்டிருந்தது 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொக்காவில் பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாகவும் கிளிநொச்சி வரை மீண்டும் யுத்தம் காரணமாகவும் முருகண்டி முழுமையாகச் செயலிழந்தது.


அதேபோல1998ம் ஆண்டு காலப்பகுதி வரைக்கும் ஒரு பாதிக்கப்பட்ட பிரதேசமாகக் காணப்பட்டது. இதன் பின்னர் 2001ஆம் ஆண்டு தொடக்கம் 2006ஆம் ஆண்டு வரைக்குமான புரிந்துணர்வு உடன்படிக்கை காலத்தில் மிகவும் களைகட்டிய ஒரு பிரதேசமாகவும் காணப்பட்டது.  அதற்குப் பின்னர் இறுதி யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் இப்பிரதேச மக்கள் நடமாட்டம் அற்ற பிரதேசமாகக் காணப்பட்டது.

மீள்குடியமர்வுக்கு பின்னரான காலப்பகுதியில் வடக்கில் இருந்து தெற்கிற்கும் தெற்கில் இருந்து வடக்கிற்கும் மக்கள் படை எடுக்கும் போது ஒரு களைகட்டிய நகரமாக இந்த திருமுறிகண்டி காணப்பட்டது.

இன்று கொவிட் -19 காரணமாக முடங்கிய பிரதேசமாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தற்பொழுது கொவிட் பரவல் நிலை காணப்படும் சூழலில் மக்களின் வருகை மிக மிக குறைவாகவே காணப்படுகின்றது. இந்த நிலையிலும் புதுக்குடியிருப்பு பிரதேச சபையல் தெடர்ந்தும் வரி அறவிடப்படுவதாக வர்த்தகர்கள் குற்றம் சாட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.  175இற்கும் மேற்பட்ட பலதரப்பட்ட கடைகள் அவற்றில் தொழில் செய்வோர் என்று காணப்பட்ட முறிகண்டி இன்று ஒரு கச்சான் கடையில் கூட வியாபாரமில்லாத நிலைகாணப்படுவதாக கவலை வெளியிட்டுள்ளானர்.0 0 0 0 0 0
  • 230
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.அக்ரஹாரத்தில் ஒவ
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர
Ads