Support Ads
Main Menu
 ·   · 132 posts
  •  · 16 friends
  •  · 16 followers

இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் இன்றும் பாரிய சவாலாக விளங்குகின்றன.

இலங்கையில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இடம் பெற்ற உள்நாட்டு போரிலும்  போருக்கு பின்னரான காலத்திலும் கண்ணி வெடிவெடிகளின் ஆபத்து என்பது சவாலாகவே உள்ளன.
குறிப்பாக இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கைகளுக்கு இவ்வாறான கண்ணிவெடிகளும் வெடிபொருட்களும் இன்றும் பாரிய சவாலாக விளங்குகின்றன.
இலங்கையில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் நவீன தொழில் நுட்ப வசதிகள் கொண்ட நாடுகளிலும் இது ஒரு சவாலாகவே உள்ளன.


இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வெடிபொருட்களால் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியாக முகமாலைப்பகுதி காணப்படுகின்றது. யுத்தம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தமது சொந்த நிலத்திற்கு திரும்ப முடியாத நிலையில் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல்வேறு பகுதிகளிலும் பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றார்கள்.குறிப்பாக வடக்கு கிழக்கில் உயர் பாதுகாப்பு வலயங்கள் நிலச் சுவிகரிப்புக்கள் வெடிபொருள் அச்சுறுதத்தல்கள் என்பன காரணங்களாக அமைகின்றன.
வடபகுதியின் கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட முகமாலை இத்தாவில் இந்திராபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களில் இன்றுவரை மீள் குடியேற முடியாது வாழ்ந்து வருகின்றனர்

கடந்த 11 ஆண்டுகளாக பல கஸ்டங்களை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
கடந்த 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு யுத்த நிறுத்த காலம் வரையும் அதன் பின்னர் 2006ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் திகதி முதல் 2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையான காலப்பகுதிகளில் யுத்தத்தில் ஈடுபட்ட இரு தரப்புக்களும் பரஸ்பரம் மோதிக்கொண்ட ஓர்பகுதியாகவும் தினமும் பல உயிர்களை காவுகொண்டும் பலரை அங்கவீனர்களாகிய ஓர் பகுதியாகவும் கிளாலி முதல் முகமாலை நாகர்கோவில் வரையான முன்னரங்க நிலை காணப்பட்டது.


இது அப்போது போரில் ஈடுபட்ட இரு தரப்புக்களினதும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் களமாகவும் கூட இருந்துள்ளது.
அங்குலம் அங்குலமாக சின்னாபின்னமாக வெடிபொருட்கள் விதைக்கப்பட்டும்; எறிகணைகள் துப்பாக்கி ரவைகள் என்பவற்றால் சல்லடை போடப்பட்டு எண்ணற்ற உயிர்கள் பறிக்கப்பட்ட ஓர் இடமாகவும் அப்போது முகமாலையும் அதனை அண்டிய பகுதிகளும் இருந்துள்ளன.இதிலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீளவும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறும் வகையில் முகமாலை பகுதியில் வெடிபொருட்களை அகற்றும் பணிகள் கண்ணிவெடிகளை அகற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கடந்த 2010ம் ஆண்டு முதல் இன்று வரை பெரும் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இங்கிருந்து இடம் பெயர்ந்துள்ள நிலையில் இதுவரை மீள் குடியேறமுடியாத வாழ்ந்து வரும் பலர் குறிப்பிடுகையில் எங்களது சொந்த வீடு இல்லாத துன்பத்தை கடந்த 25 வருடங்களாக அனுபவித்து விட்டோம். அதாவது 1996ம் ஆண்டு டிசம்பர் மாதம் எங்களுடைய சொந்த ஊரில் இருந்து யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சென்று தற்போது யாழ்ப்பாணத்தில் வாடகை வீடொன்றில் வாழ்ந்து வருகின்றோம். நாங்கள் வாடகை வீடென்றாலும் நின்மதியாக வாழவில்லை. அடிக்கடி பல வீடுகளுக்கு மாறிமாறி தான் இருந்தோம்.


தற்போது கூட ஒரு இலட்சம் ரூபா முற்பணமாகவும் கொடுத்து மாதாந்தம் நான்காயிரம் ரூபா வாடகையாக கொடுக்கின்றோம்.


கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்று மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்பட்டு 12 ஆண்டுகளாகியும் எங்களுடைய காணியை பார்க்க வேண்டும் எங்களது வீட்டில் குடியிருக்க வேண்டும் என அவாவும் ஆசையும் எங்களுக்கு நிறையவே இருக்கின்றது
குறிப்பிட்ட காலம் நாங்கள் உறவினர்களின் காணியில் வசித்து வந்த காலப்பகுதியில் பல துன்பங்களை அனுபவித்து விட்டோம். அதாவது வேலி பிய்ந்து விட்டது. வேலியை அடைத்து விடுங்கள் இரவானால் கிணற்றில் தண்ணீர் அள்ளாதீர்கள் என்பார்கள் எங்கள் ஆசைக்கு ஆடு மாடு எதனையும் வளர்க்க முடியாது. இப்படி எத்தனையோ கஸ்ரங்களை அனுபவித்து விட்டோம். எனவே எங்களது காணிகளில் வெடிபொருட்களை அகற்றி எங்கள் காணிகளை விரைவாக விடுவிக்க வேண்டும் என எல்லோரிடமும் கோரிக்கை விடுக்கின்றோம் என இந்தப்பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வாழும் குடும்பங்கள் ஆதங்கபடுகின்றன.கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள முகமாலை பகுதியில் தற்போது வெடிபொருட்கள் அகற்றப்பட்ட பகுதி தவிர அதன் கிழக்கு பகுதி இதுவரை வெடிபொருட்கள் அகற்றப்படாத மிக ஆபத்தான பகுதியாக காணப்படுகின்றது,
இந்நிலையில் மீள்குடியேற்றத்திற்கு அடையாளப்படுத்தப்பட்டு மக்கள் மீள்குடியேறிய பகுதி தவிர ஏனைய பகுதிக்குள் பொதுமக்கள் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் குறித்த பகுதிகள் மிக ஆபத்தான பகுதிகளாக இருப்பதனால் இவ்வாறான பகுதிக்குள்; பொதுமக்கள் செல்வதை முற்றாக தவிர்துக்கொள்ளுமாறும் சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் வெடிபொருட்கள் ஆபத்தான பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளை தவித்துக் கொள்ளுமாறும் உரியஅதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்ற போதும் அதனையும் மீறி பலர் உட்சென்று விபத்துக்களில் சிக்கி உயிரிழப்புக்களை எதிர் கொள்வதும் காயடைவதும் தொடர்கின்றன.

முகமாலை போன்று கடந்த யுத்த காலத்தில் வடக்கின் 640 கிராமங்களில் சுமார் 105 மில்லியன் வரையான கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த 2010ம் ஆண்டு யுனிசெப் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


கடந்த 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவு பெற்றதன் பின்னர் மக்கள் மீள்குடியேறுவதற்கும் பயிர் செய்கை நிலங்களில் தமது வாழ்வாதார பயிர் செய்கைகளை மேற்கொள்வதற்கும் ஏற்ற வகையில் வெடிபொருட்கள் அகற்றப்பட்டாலும் இன்னும் சில பகுதிகள் வெடிபொருட்களின் ஆபத்துக்குள் காணப்படுகின்றன.குறிப்பாக வடபகுதியின் மிக ஆபத்தான பகுதியாக கிளாலி தொடக்கம் முகமாலை நாகர்வோவில் வரையான பகுதிகள் மிகவும் வெடிபொருள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக காணப்படுகின்றன.
இதில் முகமாலைப் பகுதியே மிக ஆபத்தான பகுதியாக இன்றும் உள்ளது. எனவே இவற்றை அகற்றி இந்த மக்களை விரைவாக மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.


0 0 0 0 0 0
  • 212
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Ads
Featured Posts
படித் *தேன்..*  சுவைத் *தேன்*...!  உடனே  பகிர்ந் *தேன்*
*தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
அதிபத்த நாயனார்  குருபூஜை
அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
பக்தி
பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
குட்டி கதை - வாழ்வியல் நீதி
எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
Ads
Latest Posts
கால்நடைகளுக்கான மேச்சல் தரவைகள் இன்மையால் பண்ணையாளர்கள் விவசாயிகள் வருடந்தோறும்  பாரிய சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
வன்னியை பொறுத்த வரையில் கால்நடை வளர்ப்பும் விவசாயமும் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த வாழ்வாதாரத் தொழில்களாக  காணப்படுகின்ற போதும் கால்நடைகளுக்கான மேச்சல்
வன்னில் மிகவும் பழமை வாய்ந்த பல விவசாயக்கிராமங்கள் காடுகளாகவும் காட்டுவிலங்குகளின் ஆக்கிரமிப்புக்கும் உள்ளாகி வருகின்றன.
மக்களின் அடிப்படைத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் ஓரளவு வசதி படைத்தவர்கள் அவர்கள் தங்களின் தேவைகளை நோக்கி நகர்வதன் மூலம் வன்னில் மிகவும் பழமை வ
இன்றைய தினம் மிலாது நபி
இன்றைய மிலாது நபி கொண்டாடப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துக் கொள்வோமா?https://www.youtube.com/watch?v=HFQRPPJfWyc
இறை பக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளிய
இது கதை அல்ல...... நிஜம்
இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.அக்ரஹாரத்தில் ஒவ
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.மாதந்தோறும் இருமுறை – வளர
Ads